என்ன வர மாட்டீயா? களத்திலேயே திட்டிவிட்ட கோலி.. மேட்சில் நடந்த எதிர்பாராத ட்விஸ்ட்.. கவனிச்சீங்களா?
துபாய்: பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி இன்று முறையான திட்டமிடலுடன் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் பவுலர்களை, முக்கியமாக பாஸ்ட் பவுலர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக கையாண்டனர்.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் குழு ஆட்டத்தில் இந்திய அணி வென்ற நிலையில், இன்றும் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று இந்திய அணி வேகமாக ஆடி வருகிறது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்றது. இதையடுத்து எதிர்பார்த்தபடியே பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.

பாகிஸ்தான் பவுலிங்
துபாயில் பொதுவாக சேஸிங் செய்யும் அணியே வெற்றிபெற வாய்ப்புள்ளது. துபாய் பிட்சில் இரண்டாவது இன்னிங்சில் அப்படியே ஆட்டம் பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக மாறும். இதனால் எதிர்பார்த்தபடியே பாகிஸ்தான் அணி பவுலிங் எடுத்தது. ஆனால் களத்தில் அதன்பின்தான் பெரிய ட்விஸ்ட் நடந்தது. இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே நல்ல இன்டென்டோடு ஆடியது. அதிக ஸ்கோர் அடிக்க வேண்டும் என்று திட்டத்தோடு களமிறங்கியது.

என்ன பிளான்
இந்திய அணியின் பிளானிங் இன்று மிகவும் சிம்பிளாக இருந்தது. ஓவருக்கு 10 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற திட்டத்தோடு இந்திய அணி ஆடியது. யார் விக்கெட் விழுந்தாலும் பிரச்சனை இல்லை. இறங்கும் வீரரக்ள் எல்லோரும் கண்டிப்பாக ரன் ரேட்டை 10 என்ற அளவில் வைக்க வேண்டும் என்ற திட்டத்தில் ஆடினார்கள். ஓப்பனிங் இறங்கிய ரோஹித் முதல் ஓவரிலேயே சிக்ஸ் அடித்தார். இரண்டு சிக்ஸ், 3 பவுண்டரி அடித்த அவர் 16 பந்தில் 28 ரன்கள் எடுத்தார்.

ராகுல்
எப்போதும் பொறுமையாக ஆடும் ராகுலும் இன்று அதிரடியாக ஆடினார். 2 சிக்ஸ், 1 பவுண்டரி என்று 20ம் பந்தில் 28 ரன்கள் எடுத்தார். சூர்யா குமார் யாதவும் வந்தவுடன் பவுண்டரி என்று அதிரடியாக தொடங்கி 2 பவுண்டரியுடன் 14 ரன்களை 10 பந்துகளில் எடுத்தார். பண்டும் 2 பவுண்டரி என்று 12 பந்தில் 14 ரன்கள் எடுத்தார். இவர்கள் எல்லோரும் அடுத்தடுத்து அவுட் ஆனாலும், கோலி மட்டும் விக்கெட்டையும் இழக்காமல், அதே சமயம் ரன் ரேட் குறையாமலும் ஆடி வந்தார்.

சிக்ஸ்
சிக்ஸ் அடிக்க முயன்று அவுட்டாகாமல் பவுண்டரிகளை அடித்து 140 ரன் ரேட்டுக்கு கீழ் குறையாமல் பார்த்துக்கொண்டார். இன்றைய போட்டியில் அதிகம் பாராட்டப்பட வேண்டியது இந்திய அணியின் பேட்டிங் இன்டன்ட்தான். அதேபோல் இன்று கோலியும் பழைய ஆக்ரோஷத்தோடு இருந்தார். உதாரணமாக பண்டும், கோலியும் இன்று ஆடும் போது.. கோலி அடித்த ஷாட் டீப் ஸ்கோயர் லீக்கில் ஷாட் அடித்தார்.

பவுண்டரி
அந்த ஷாட் பவுண்டரி செல்வது போல சென்றது. ஆனாலும் கோலி ரிஸ்க் எடுக்க விரும்பாமல் வேகமாக ஓடினார். ஆனால் பண்ட் பவுண்டரி போகும் என்ற நம்பிக்கையில் மெதுவாக சென்றார். இதனால் கோபம் அடைந்த கோலி என்ன வர மாட்டியா என்பது போல திட்டினார். அந்த பந்து பின்னர் பவுண்டரி சென்றது. பவுண்டரி செல்லும் பந்தாக இருந்தாலும் எப்படியாவது ரன் எடுக்க வேண்டும் என்பதில் இந்திய அணி உறுதியாக இருந்தது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications