"மாத்தனும்".. அம்பயரிடம் கேட்ட ஜடேஜா.. 19வது ஓவரில் களத்திற்கு மெசேஜ் அனுப்பிய ரோஹித்! நடந்தது என்ன?
துபாய்: பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா செய்த செயல் ஒன்று இணையம் முழுக்க கவனம் பெற்றுள்ளது.
ஆசிய கோப்பை 2022 தொடரை இந்திய அணி வெற்றியோடு தொடங்கி உள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் கடைசி வரை நடந்த திக் திக் ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தியது.
நேற்றைய போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. 147 ரன்கள் எடுத்த நிலையில் 19.5 ஓவரில் பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரிஸ்வான் மட்டும் 43 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணியில் ரோஹித், ராகுல் சரியாக ஆடவில்லை என்றாலும் மற்ற வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இந்திய அணியில் கோலி 35, ஜடேஜா 35, ஹர்திக் பாண்டியா 33 என்று அதிரடியாக ரன்களை குவிக்க.. இந்திய அணி 19.4 ஓவரிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து வென்றது.

ஜடேஜா
நேற்று போட்டியில் ஜடேஜா - ஹர்திக் பாண்டியா பார்ட்னர்ஷிப் அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்தது. ஜடேஜா 35 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்டியா வெறும் 17 பந்தில் 33 ரன்கள் எடுத்தது இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்தது. கடைசி ஓவரில் லெப்ட் ஹேண்ட் ஸ்பின் பவுலர் வருகிறார் என்று தெரிந்ததும் இந்திய அணியின் வெற்றி உறுதியாகிவிட்டது. கடைசி ஓவரில் 7 ரன்கள் அடிக்க வேண்டும்.

ஹர்திக் பாண்டியா
ஜடேஜா ஸ்டிரைக் வேண்டில் இருந்ததால் கண்டிப்பாக சிக்ஸர் அடித்து வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அவசரப்பட்டு சுற்றியதால் விக்கெட்டை இழந்தார். இதற்கு முன் 19வது ஓவரில்தான் ஜடேஜா தனது கிளவுஸை மாற்றினார். அந்த ஓவரை ஹரிஸ் ரவுப் வீசினார். இதில் முதல் பந்தில் ஹர்திக் பாண்டியா 1 ரன் எடுத்தார். அப்போது ரன் ஓடிய ஜடேஜாவிற்கு பேட் வலுக்கி சென்றது. அவரின் கிளவுஸ் ஈரமாக இருந்தது.

என்ன நடந்தது?
இதை மாற்ற வேண்டும் என்று ஜடேஜா.. நடுவரிடம் கேட்டார். அதற்கு முன்புதான் ஸ்ட்ராடஜி டைம் எடுக்கப்பட்டது. இதன் காரணமாக அப்போது போய் கிளவுஸ் மாற்ற பிரேக் கொடுக்க வேண்டுமா என்று நடுவர் யோசித்தார். கை மோசமாக நழுவுகிறது என்று ஜடேஜா கூறியதால் நடுவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஜடேஜாவிற்கு புதிய கிளவுஸ் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம்தான் கவனம் பெற்றுள்ளது. ஏனென்றால் இந்த சம்பவத்தின் போது பண்டிடன் முக்கியமான மெசேஜ் ஒன்றை ரோஹித் சர்மா சொல்லி அனுப்பினார்.

ரோஹித் அனுப்பிய மெசேஜ்
பண்ட் கிளவுஸை எடுத்துக்கொண்டு மைதானத்திற்குள் செல்லும் முன் அவரிடம் ரோஹித் சர்மா எதோ ஒன்றை கூறினார். பெரும்பாலும் மைதானத்திற்குள் இருந்த ஜடேஜாவிற்கு இவர் முக்கியமான மெசேஜ் அனுப்பி இருக்கலாம் என்கிறார்கள். பொதுவாக இது போன்ற திரில்லர் ஆட்டங்களில் பேட்ஸ்மேனுக்கு கடைசி ஓவர் போட போவது யார் என்று தெரியாது. இதை கூட ரோஹித் சர்மா மெசேஜாக அனுப்பி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடைசி ஓவரில் லெப்ட் ஹேண்ட் ஸ்பின்னர் வருகிறார் என்ற தகவலை ரோஹித் சர்மா ஜடேஜாவிற்கு மெசேஜாக அனுப்பி இருக்கலாம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications