"இவரை" உட்கார வையுங்க! ரோஹித்துக்கு அதிகரித்த பிரஷர்! இன்று இந்திய அணியில் ஆடும் 11 பேர் யார் யார்?
துபாய்: இலங்கைக்கு எதிராக இன்று நடக்கும் ஆசிய கோப்பை ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இன்று இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. அதன்பின் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணி வென்றது.
இதையடுத்து இந்திய அணி எளிமையாக சூப்பர் 4 சுற்றுக்கு தேர்வானது. இதன்பின் லேசாக சறுக்கிய இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானிடம் வீழ்ந்தது.
கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் இந்திய அணி வீழ்ந்தது.

இன்று ஆட்டம்
இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக இன்று நடக்கும் ஆசிய கோப்பை ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பைனல்ஸ் செல்வதற்கு இன்றைய ஆட்டம் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் பேட்டிங் நன்றாகவே இருக்கிறது. ராகுல், ரோஹித் இருவரும் பார்மிற்கு திரும்பி உள்ளனர்.

கோலி
இன்னொரு பக்கம் கோலியும் நல்ல பார்மில் இருக்கிறார். இந்த சீசனில் அடுத்தடுத்து 2 அரை சதங்களை கோலி அடித்துள்ளார். இன்னொரு பக்கம் சூர்யா குமார் யாதவ் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார். பண்ட், பாண்டியா இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடுவார் என்று நம்பலாம். இந்த நிலையில்தான் இந்திய அணியில் சில முக்கிய மாற்றங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபக் ஹூடாவை இந்திய அணி முழு நேர பேட்ஸ்மேனாக பயன்படுத்துகிறது.

6வது பவுலர்
அவரை 6வது பவுலராக பயன்படுத்த இந்திய அணிக்கு விருப்பம் இல்லை என்றால் அவரை அணியில் இருந்தே நீக்கிவிடலாம். ஏனென்றால் டெத் ஓவர்களில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடுவார். ஹூடா பவுலிங் போடாத பட்சத்தில் தினேஷ் கார்த்திகை பயன்படுத்தலாம். ஆனால் இடையில் வேறு பவுலர்கள் காயம் அடைந்தால் இடையில் பவுலிங் போட ஆட்கள் தேவை. இதன் காரணமாக தீபக் ஹூடாவிற்கே வாய்ப்பு கொடுக்கப்பட அதிக சான்ஸ் உள்ளது.

சான்ஸ்
இன்னொரு பக்கம் இந்திய வீரர் ஒருவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த தொடரில் கடந்த மூன்று போட்டியிலும் சஹால் சரியாக பவுலிங் செய்யவில்லை. முதலில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இவர் மோசமாக பவுலிங் செய்தார். பாகிஸ்தானுக்கு எதிராக சாஹல் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. அதேபோல் ஹாங்காங் குட்டி அணி. ஆனால் அந்த அணிக்கு எதிராகவும் இவர் விக்கெட் எடுக்கவில்லை. கடந்த போட்டியிலும் இவர் சரியாக ஆடவில்லை.இது தொடர்பாக ரோஹித்துக்கும் ரசிகர்கள் பிரஷர் கொடுத்து வருகின்றனர்.

அஸ்வின்
இதனால் அவரை நீக்கிவிட்டு அஸ்வினை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. அஸ்வின் மூத்த வீரர் என்பதால் நன்றாக ஆடுவார். அதோடு இக்கட்டான நேரங்களில் சிறப்பாக பவுலிங் செய்வார். இதனால் இன்று இலங்கைக்கு எதிராக இந்திய அணியில், ரோஹித், ராகுல், கோலி, சூர்யா குமார் யாதவ், பண்ட், பாண்டியா, ஹூடா, புவனேஷ்வர் குமார், அஸ்வின், ரவி பிஸ்னோய், அர்ஷிதீப் சிங் ஆகியோர் ஆட வாய்ப்புகள் உள்ளன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications