கோபத்தில் டிரம்ப் எடுத்த முடிவு.. ஒரேயடியாக எகிறிய கச்சா எண்ணெய் விலை.. உற்று பார்க்கும் உலக நாடுகள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சட்டென பறக்க ஆரம்பித்துள்ளது. இன்று காலை கண்ணை மூடி திறப்பதற்குள் திடீரென 3% உயர்ந்துள்ளது. சர்வதேச மார்கெட்டில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 90.79 டாலராக உயர்ந்துள்ளது. கடந்த 1.5 மாதங்களில் இல்லாத அளவுக்குக் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

அமெரிக்கா ஈரான் இடையேயான மோதல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முடிவுக்கு வருவது போன்ற சூழல் ஏற்பட்டது. இதனால் உலக நாடுகள் நிம்மதி அடைந்தனர். இருப்பினும், இது சில வாரம் கூட நீடிக்கவில்லை. மீண்டும் இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஆரம்பித்துவிட்டது. மாறி மாறி இருவருமே தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

crude oil petrol diesel

எகிறிய கச்சா எண்ணெய் விலை

வளைகுடாவில் இப்படி தாக்குதல் தீவிரமடைய ஆரம்பித்த உடனேயே கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. திங்கள்கிழமையான இன்று அதிகாலை கச்சா எண்ணெய் விலை ஒரேயடியாக 3% வரை உயர்ந்துள்ளது. சர்வதேச மார்கெட்டில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 90.79 டாலராக உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் 11க்கு பிறகு இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக கடந்த வாரத்தில் மட்டும் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 15.9% உயர்ந்துள்ளது.

அதேபோல், அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலையும் ஒரே நாளில் 2.65% உயர்ந்து, பேரலுக்கு 84.68 டாலராக வர்த்தகமானது. கடந்த ஒரு வாரத்தில் வாரத்தில் இந்த கச்சா எண்ணெய்யும் 15.5% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த WTI கச்சா எண்ணெய் என்பது பெரும்பாலும் அமெரிக்காவுக்குள்ளேயே வர்த்தகமாகும். எனவே, சர்வதேச சந்தைக்கு நாம் ப்ரெண்ட் ரேட்டை தான் பார்க்க வேண்டும். அது இப்போது 90 டாலரை எட்டியுள்ளது.

டிரம்ப் எடுத்த முடிவு

இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமே அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் தான். அமெரிக்கா தொடர்ந்து 9வது நாளாக ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரான் மீதான தாக்குதல்களை டிரம்ப் தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் படைகள் இருக்கும் குவைத் மற்றும் பஹ்ரைன் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹார்முஸ்

போர் பதற்றம் காரணமாக உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 20% இந்த ஜலசந்தி வழியாகவே நடக்கிறது. சரியாக இதே இடத்தில் தான் மோதலும் மையம் கொண்டு இருப்பதால் சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் ஈரான் துறைமுகங்களை நோக்கி செல்லும் கப்பல்களை முடக்க போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மறுபுறம், ஹார்முஸ் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக அறிவித்துள்ள ஈரான், அங்கு தங்கள் விதிமுறைகளை மீறும் கப்பல்களை குறிவைத்துத் தாக்குவோம் என ஈரான் அறிவித்துள்ளது. இதுபோன்ற அறிவிப்புகளே கச்சா எண்ணெய் விலையை எகிற வைத்திருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை

மத்திய கிழக்கில் போர் பதற்றம் மேலும் நீடித்தால், சர்வதேச கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டு விலை உயரலாம். இது சில வாரங்கள் நீடித்தால் கூட மீண்டும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் இருக்கிறது. மேலும், எல்பிஜி சப்ளை கூட பாதிக்கப்படலாம். இப்போது நிலைமை மோசமாக இல்லை என்றாலும் இந்த மோதல் சில வாரங்கள் நீடித்தால் நிலைமை கையை விட்டு போகும் அபாயம் இருக்கவே செய்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+