பயணிகளை சுற்றி சுற்றி வரும் துபாய் அதிகாரிகள்! ஏர்போர்ட்டில் நடக்கும் வினோத சம்பவம்.. என்ன நடக்கிறது

Subscribe to Oneindia Tamil

துபாய்: விமான நிலையங்களில் அதிகளவில் பயணிகள் குவியும் நேரங்களில் இமிகிரேஷன் நடைமுறைகளை விரைவாக முடிப்பதற்காக துபாய் புதிய மொபைல் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. கிளிக் & டிராவில் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய அம்சம், பயணிகள் ஏர்போர்ட்டில் கூட்ட நெரிசலில் தவிப்பதை பெரியளவில் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் பயணிகளை ஈர்க்க அமீரகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக அமீரகம் வரும் பயணிகளுக்கு எவ்வளவு வசதிகள் முடியுமோ அவ்வளவு வசதிகளை அமீரகம் செய்து வருகிறது. இந்தச் சூழலில் தான் புதிதாக கிளிக் & டிராவில் என்ற புதிய வசதியை அமீரகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அமீரகம் வருவோர் மற்றும் அமீரகத்தில் இருந்து புறப்படுவோருக்கு இந்த சேவை மிக பெரியளவில் உதவும்.

UAE Dubai Dubai visa UAE visa Dubai Airport

கிளிக் & டிராவில்

இந்த புதிய சேவையின் முக்கிய சிறப்பு என்னவென்றால், பயணிகள் இமிகிரேஷன் கவுன்டருக்கு சென்று நிற்க கூட வேண்டியதில்லை. அதற்கு பதிலாக, பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு அதிகாரிகளே பயணிகள் இருக்கும் இடத்துக்கு சென்று என்டரி அல்லது எக்ஸிட் நடைமுறைகளை மேற்கொள்வார்கள்.

இந்த கிளிக் & டிராவில் கீழ் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மொபைல் மூலம் வெரிபிக்கேஷன் பணிகளை மேற்கொள்வார்கள். இந்த சாதனங்கள் துாபயின் அரசு டேட்டாபேஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் பயணிகளின் தகவல்களை அதிகாரிகள் அணுகி, தேவையான இமிகிரேஷன் நடைமுறைகளை விமான நிலையத்தின் எந்த பகுதியிலும் மேற்கொள்ள முடியும். பயணிகளின் அடையாளத்தை உறுதி செய்ய பயோமெட்ரிக் சரிபார்ப்பு தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த சேவையில் ஒரு பயணியின் அடையாளத்தை சரிபார்த்து, தேவையான அனைத்தையும் முடிக்க சுமார் 12 முதல் 15 விநாடிகள் மட்டுமே ஆகலாம். அதாவது இமிகிரேஷன் கவுன்டர்களை மட்டுமே நம்பியிருக்கும் முறைக்கு மாற்றாக, அதிகாரிகள் விமான நிலையம் முழுவதும் தேவையான இடங்களுக்கு சென்று சேவையை வழங்க முடியும்.

யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

அதேநேரம் இந்த கிளிக் & டிராவில் சேவையை அனைத்து பயணிகளுக்கும் பயன்படுத்த முடியாது. பயணிகள் துபாயில் இருந்து புறப்படுகிறார்களா அல்லது துபாய்க்கு வருகிறார்களா என்பதன் அடிப்படையில் இது மாறுபடும்.

துபாயில் இருந்து புறப்படும் பயணிகள்:

அமீரக குடிமக்கள், அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் என அனைத்து பயணிகளும் இந்த சேவையைப் பயன்படுத்த முடியும்.

துபாய்க்கு வரும் பயணிகள்:

முதற்கட்டமாக அமீரக குடிமக்கள் மற்றும் அமீரக குடியிருப்பாளர்களுக்கு மட்டுமே இந்த சேவை கிடைக்கும்

கூட்டம்

விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் நேரங்களில் இந்த மொபைல் இமிகிரேஷன் சேவை முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் பயணிகளை இமிகிரேஷன் கவுன்டர்களுக்கு அனுப்புவதற்கு பதிலாக, அதிகாரிகளே நேரடியாக பயணிகள் இருக்கும் இடத்துக்கு செல்ல முடியும். இதனால் காத்திருப்பு நேரம் குறைவதுடன், விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் ஒரே இடத்தில் அதிகரிக்காமலும் இருக்கும்.

பயன் தரும்

இந்த கிளிக் & டிராவில் சேவை கடந்த மே மாதம் முதலே சோதனை அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 31 வரை இந்த சேவையின் மூலம் சுமார் 31,373 பேர் இமிகிரேஷன் சேவையை பெற்றுள்ளனர். அமீரகத்தின் இந்த முயற்சி ஏர்போர்ட்டில் கூட்டத்தை குறைப்பதோடு பயணிகளுக்கு முற்றிலும் புதியதொரு அனுபவத்தையும் கொடுப்பதாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+