வீடு கொடுத்தவனுக்கே ஆபத்து.. ஏமாற்றப்பட்டதா அரபு நாடுகள்? அமெரிக்கா மீது கொதிக்கும் 'ஷேக்குகள்'!
துபாய்: "வீடு கொடுத்தவனுக்கு ஆபத்து வரும்போது வேடிக்கை பார்த்துவிட்டு, பக்கத்து வீட்டுக்காரனுக்கு மட்டும் பாதுகாப்புக் கவசம் கொடுப்பது என்ன நியாயம்?" - இதுதான் இப்போது ஒட்டுமொத்த அரபு நாடுகளும் வெள்ளை மாளிகையை நோக்கி வீசும் காரமான கேள்வி!
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்காவின் இரட்டை வேடம் இப்போது அப்பட்டமாகத் தெரிந்திருக்கிறது. "நாங்கள் இருக்கிறோம்... எங்களை நம்பி இடம் கொடுங்கள்" என்று சொல்லி அரபு மண்ணில் ராணுவத் தளங்களை அமைத்த அமெரிக்கா, நிஜமாகவே ஆபத்து வந்தபோது கையை விரித்துவிட்டதாக துபாய் முதல் ரியாத் வரை குமுறல்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.

தளங்கள் எங்களுக்கு... பாதுகாப்பு இஸ்ரேலுக்கா?
கடந்த 24 மணிநேரத்தில் ஈரானின் ஏவுகணைகள் துபாய், அபுதாபி, தோஹா என அரபு நாடுகளின் முக்கிய நகரங்களை நோக்கிச் சீறிப்பாய்ந்தன.
குவைத்தின் 'அலி அல்-சலேம்' தளம்,
கத்தாரின் 'அல் உதித்' தளம்,
பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5-வது கடற்படைத் தலைமையகம்...
என அமெரிக்காவுக்கு அரபு நாடுகள் கொடுத்த இடங்கள்தான் இப்போது ஈரானின் முக்கிய இலக்குகள்.
தங்கள் மண்ணையும், மக்களையும் பணயக் கைதிகளாக்கி அமெரிக்காவுக்கு இடம் கொடுத்த அரபு நாடுகளுக்கு இப்போது மிஞ்சியது என்னவோ ஏமாற்றம்தான். ஈரான் ஏவுகணைகளை வீசும்போது, இஸ்ரேலுக்கு மட்டும் தனது நவீன 'ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை' (Anti-missile systems) வாரி வழங்கும் அமெரிக்கா, அரபு நாடுகளை மட்டும் நட்டாற்றில் விட்டிருப்பதுதான் இப்போதைய 'ஹாட்' விவாதம்.
பயன்படுத்திக் கொண்ட ட்ரம்ப் நிர்வாகம்!
"ஈரானை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" எனச் சொல்லி அரபு நாடுகளிடம் சமாதானம் பேசிய அமெரிக்கா, ஈரானின் உச்ச தலைவர் கமேனியைத் கொன்றுவிட்டு இப்போது அமைதியாக இருக்கிறது. ஆனால், அதன் விளைவுகளை இப்போது அனுபவிப்பது என்னவோ துபாயும் அபுதாபியும்தான்.
துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே ஏவுகணைச் சிதறல்கள் விழுந்தபோதும், அமெரிக்காவிடமிருந்து பெரிய அளவில் பாதுகாப்பு உதவிகள் வரவில்லை. "இஸ்ரேலுக்கு ஒரு நியாயம், அரபு நாடுகளுக்கு ஒரு நியாயமா?" என சவுதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் கொந்தளிக்கின்றன.
கூட்டணி உடையுமா?
"அமெரிக்காவை நம்பியது எங்களின் தப்புக்கணக்கு" என்ற தொனி இப்போது வளைகுடா நாடுகளின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளிலேயே எட்டிப்பார்க்கிறது. இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசும்போது மட்டும் முந்திக்கொண்டு தடுக்கும் அமெரிக்கா, துபாயிலும் ரியாத்திலும் குண்டுகள் விழும்போது எங்கே போனது என்பதுதான் ஷேக்குகளின் கோபம்.
அரபு நாடுகள் இப்போது ஒரு விஷயத்தை உரக்கச் சொல்லத் தொடங்கியுள்ளன: "எங்கள் மண்ணைப் பயன்படுத்தி நீங்கள் போர் நடத்தலாம், ஆனால் எங்களுக்கு ஆபத்து வரும்போது வேடிக்கை பார்ப்பீர்கள் என்றால், இந்த நட்பு யாருக்காக?" ஈரான் எங்களை தாக்குகிறது. அதை கண்டனத்தோடு நிறுத்திவிட்டீர்கள்.. பங்காளிகளுக்குள் சண்டை வந்துவிட்டது.. பகையாளி நீங்கள் வேடிக்கை பார்க்கிறீர்களா? என்று கேட்க தொடங்கி உள்ளனர்.
அமெரிக்காவின் 'இஸ்ரேல் பாசம்' அரபு நாடுகளுடனான பல வருட நட்பை உடைக்கும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. "இனி அமெரிக்காவை நம்புவதை விட, சொந்தக் காலில் நிற்பதே மேல்" என அரபு நாடுகள் முடிவெடுத்தால், அது உலக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்! அமெரிக்காவின் தளவாடங்களும் காலியாகும்! ஆனால் இதெல்லாம் நடக்குமா?
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications