துபாயை மட்டும் தொடர்ந்து தாக்குவது ஏன்? ஈரானுக்கும் - அமீரகத்துக்கும் என்ன தான் பிரச்சனை! முழு விவரம்
துபாய்: அமெரிக்கா, இஸ்ரேல் போருக்கு பதிலடியாக ஈரான் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தை தான் குறிவைத்து அடித்து வருகிறது. குறிப்பாக துபாய் மற்றும் அபுதாபியை தான் குறிவைத்து தாக்குகிறது. சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், ஓமன் உள்ளிட்ட நாடுகளை விட துபாய் மீது தான் ஈரான் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வரும் நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுக்கிறது. அமெரிக்காவின் ராணுவ தளம், விமானப்படை தளம், கடற்படை தளம் இருக்கும் நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது. அந்த வகையில் சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்பட பல நாடுகள் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம் மீது தான் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பிற நாடுகளை ஒப்பிடும்போது தினந்தோறும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் அபுதாபி நகரங்களை குறிவைத்து ஈரான் அடிக்கிறது. துபாய் விமான நிலையம், பிற உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குடியிருப்பு பகுதிகளும் குறிவைக்கப்பட்டுள்ளது. புர்ஜ் அல் அரப்க்கு அருகே உள்ள முக்கிய கட்டங்கள் சேதமடைந்துள்ளன. துறைமுகங்களில் தீ விபத்துகளும் பதிவாகியுள்ளன. மொத்தம் 6 பேர் வரை பலியாகி உள்ளனர். ஒரு இந்தியர் காயமடைந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் இருநகரங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் சார்பில் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள், டிரோன்கள் இந்த நகரங்களை தாக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிற அரபு நாடுகளை விட ஐக்கிய அரபு அமீரகமே அதிக தாக்குதலை சந்தித்துள்ளது. மார்ச் 15ம் தேதி நிலவரப்படி அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், '' ஐக்கிய அரபு அமீரகத்தின் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் 298 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 15 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 1,606 டிரோன்களை இடைமறித்து அழித்துள்ளது'' என தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்கள் உள்ள கத்தார், பஹ்ரைன், சவுதி அரேபியா அல்லது குவைத் போன்ற அண்டை நாடுகளின் மீதான ஈரானின் தாக்குதல்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் அதிகமாகும்.
இப்படியான சூழலில் தான் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரத்தை குறிவைத்து ஈரான் தாக்குவதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஐக்கிய அரபு அமீரகமும் அமெரிக்காவும் நெருங்கிய நட்பு நாடுகள். இங்கு அமெரிக்காவின் அல் தாஃப்ரா விமானப்படை தளம் உள்ளது. இதுதான் ஐக்கிய அரபு அமீரகத்தை ஈரான் குறிவைக்க முதல் காரணமாகும்.
அமெரிக்காவும், ஈரானும் நேரடியாக எல்லைகளை பகிர்ந்து கெள்ளவில்லை. இதனால் அமெரிக்காவை பழிவாங்க ஈரான், தனது அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்காவின் தளங்களை தாக்கி அழிக்கிறது. ஆனால் பிற அரபு நாடுகளிலும் அமெரிக்காவின் தளங்கள் உள்ளது. அப்படி இருக்கும்போது துபாய், அபுதாபியை ஈரான் டார்க்கெட் செய்வதற்கு பின்னணியிலும் முக்கிய காரணம் உள்ளது.
அதாவது ஐக்கிய அரபு அமீரகம் அமெரிக்காவின் விமானப்படை தளம் சார்ந்த விவகாரம் மட்டும் இல்லை. இருநாடுகள் இடையேயும் ராணுவ ஒப்பந்தம் உள்ளது. கடந்த 2024ம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் கூட்டுப் பயிற்சிகளை இருநாடுகளும் மேற்கொள்ள வழிவகுத்துள்ளது. இது ஈரானுக்கு பிரச்சனையாக உள்ளது.
எப்போது, வேண்டுமானாலும் ஐக்கிய அரபு அமீரகம் ஈரானுக்கு எதிராக திரும்பலாம். இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தை தாக்குவதன் மூலம் அங்கு பாதிப்பு ஏற்படும். இதனால் ஐக்கிய அரபு அமீரகம் அமெரிக்காவுக்கு போரை நிறுத்த பிரஷர் தரும். இதனால் தங்களுக்கு எதிரான தாக்குதலை அமெரிக்கா குறைக்கும் என்று ஈரான் நம்புகிறது.
அதேபோல் ஐக்கிய அரபு அமீரகம் தான் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கும், அரபு நாடுகளுக்கும் இடையே பலாமாக உள்ளது. நிதி, சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத்திற்கான உலகளாவிய மையமாக ஐக்கிய அரபு அமீரகம் தான் இருக்கிறது. ஆனால் ஈரான், தொடர்ந்து அமெரிக்காவை எதிர்த்து வருகிறது.
இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தை அடித்தால் வரும்காலத்தில் அந்த நாடு தனது நிலைப்பாட்டை மாற்றலாம். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடன் தொடர்பை குறைக்கலாம். இது பிற அரபு நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தலாம் என்று ஈரான் நம்புகிறது.
அதேபோல்,கடந்த 2020ம் ஆண்டு ஆபிரகாம் ஒப்பந்தத்தின்படி இஸ்ரேலுடன், ஐக்கிய அரபு அமீரகம் உறவுகளை வலுப்படுத்தியது. இது ஈரானுக்கு பிரச்சனையாக மாற்றி உள்ளது. இது ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரானுக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படி அமெரிக்கா - இஸ்ரேலுடன் நெருக்கமாக செயல்பட்டு வருவதால் ஈரான் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தை தாக்கி வருகிறது.
இதனால் தான் ஐக்கிய அரபு அமீரகத்தை சிதைக்க ஈரான் முடிவு செய்துள்ளது. மேலும் துபாய், அபுதாபி நகரங்கள் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் நகராக உள்ளது. தற்போதைய தாக்குதல் நடவடிக்கையால் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை குறைக்கலாம்.
இதனால் அந்த நாட்டின் வருமானம் பாதிக்கப்படும். அதேபோல், ராணுவ திறன்களில் ஐக்கிய அரபு அமீரகம் பலவீனமாக உள்ளது. சவுதியை விட பலவீனமாக உள்ளது. இதனால் தான் ஈரானால் எளிதாக ஐக்கிய அரபு அமீரகத்தை தாக்க முடிகிறது. இதுனை பயன்படுத்தி ஐக்கிய அரபு அமீரகத்தை முடிந்தவரை சேதப்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது.
-
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
'ஓமன்'ஐயும் தகர்த்துவிடுவேன்.. நட்பு நாடு என்றும் பாராமல் மிரட்டிய டிரம்ப்! மத்திய கிழக்கில் டென்ஷன் -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
மாட்டிக்கிட்ட பங்கு.. டிரம்ப்-ன் கழுத்தை நெறிக்கும் ஈரான்.. தேவையில்லாமல் இறங்கிவிட்டோம் புலம்பும் USA!! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications