பிரபல யூடியூபர் திடீர் மரணம்.. வெறும் 32 வயசு தானே ஆகுது.. ரசிகர்கள் அதிர்ச்சி! என்ன நடந்தது
துபாய்: டிராவல் தொடர்பான வீடியோக்களை பதிவிட்டுப் பிரபலமானவர் அனுனய் சூட்.. 32 வயதான இவர் தொடர்ச்சியாக டிராவல் தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இதற்கிடையே அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இது அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் காலத்தில் சினிமா நட்சத்திரங்களுக்கு இணையாக.. சில சமயம் சினிமா நட்சத்திரங்களை விடவும் அதிகமாகவே சமூக வலைத்தளப் பிரபலங்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். குக்கிங், காமெடி எனப் பல்வேறு பிரிவுகளில் அவர்கள் வீடியோக்களை பதிவிடுகிறார்கள். அதில் முக்கியமான ஒரு பிரிவு தான் டிராவல். உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் டிராவல் செய்து அதை வீடியோவாக பதிவிடுவார்கள்.

அனுனய் சூட்
அப்படிச் சமூக வலைத்தளங்களில் டிராவல் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டுப் பிரபலமானவர் அனுனய் சூட். துபாயை சேர்ந்த இவர், ஒரு போட்டோகிராபரும் ஆவர். அவருக்கு வயது 32. இவருக்கு உலகெங்கும் ரசிகர்கள் உள்ளனர். இதற்கிடையே அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்ததாக நேற்றைய தினம் அறிவிப்பு வெளியானது. இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது மறைவிற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்தக் கடினமான நேரத்தில் குடும்பத்தினருக்கு பிரைவசி தருமாறு கோரி, அவரது குடும்பத்தினர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
குடும்பத்தினர்
இது தொடர்பாக அவர்கள் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்களது அன்பு மகன் அனுனய் சூட் மறைந்த செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் துயரமான தருணத்தில் நீங்கள் நிலைமையைப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். தயவுசெய்து வீட்டிற்கு அருகே கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.
அனுனய் சூட்டின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் இருந்து பதிவிடப்பட்டது. அவர் ஒரு கார் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அது தொடர்பாகப் பல படங்களைப் பகிர்ந்திருந்தார். கடந்த புதன்கிழமை அவர் வெளியிட்ட பதிவில், "நான் எனது வீக் எண்ட்டை ஜாம்பவான்கள் மற்றும் எனது கனவு வாகனங்களுக்கு மத்தியில் செலவிட்டதை இன்னும் நம்ப முடியவில்லை. இதில் எதை நீங்கள் ஓட்டிப் பார்க்கலாம்?" என்று பதிவிட்டுள்ளார். அப்படியிருக்கும்போது அவர் திடீரென மரணமடைந்தது பலருக்கும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த அனுனய் சூட்?
அனுனய் சூட் ஒரு டிராவல் இன்ஃப்ளூயன்ஸர் ஆவர். மேலும், அவர் போட்டோ கலைஞராகவும் வேலை செய்து வந்துள்ளார்.. அவருக்கு இன்ஸ்டாகிராமில் 14 லட்சத்திற்கும் அதிகமான பலோயர்ஸ்களும், யூடியூப் சேனலில் 3.8 லட்சம் பலோயர்ஸ்களும் உள்ளனர். அவர் தனது டிராவல் போட்டோ, ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் பிரபலமானார்.
குழப்பம்
ஃபோர்ப்ஸ் இந்தியாவின் முதல் 100 டிஜிட்டல் நட்சத்திரங்கள் பட்டியலில் அனுனய் சூட் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் (2022-2024) இடம் பெற்றார். துபாயைச் சேர்ந்த போட்டோ கிராபரான அனுனய் சூட், முதலில் தனது டிரிப்கள் குறித்த தகவல்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்தார். அதுவே அவரை பிரபலமாக்கியது. மேலும், அவர் ஒரு மார்க்கெட்டிங் நிறுவனத்தையும் நடத்தி வந்தார். இந்தச் சூழலில் தான் அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார். அவரது திடீர் மரணத்திற்கு என்ன காரணம் என்பதை அவரது குடும்பத்தினர் அறிவிக்காத நிலையில், இது அவரது ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.!












Click it and Unblock the Notifications