துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் வாழும் இந்தியர்கள் அறிய வேண்டிய சூப்பர் பாஸ்போர்ட் மாற்றங்கள்
துபாய்: இந்தியாவில் யாராவது புதிதாக பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தால், மிகப்பெரிய மாற்றத்தை சந்திப்பார்கள். துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் உள்ள இந்தியர்கள் பாஸ்போர்டை புதுப்பித்தால் பல்வேறு புதிய விஷயங்களை பெறுவார்கள். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் பயன்பபெறும் வகையில் பாஸ்போர்ட்டில் சில மாற்றங்களும் வந்துள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அறிய வேண்டிய பாஸ்போர்ட் தொடர்பான மாற்றங்களை பார்ப்போம்.
இந்தியர்கள் இந்த 2025 ஆம் ஆண்டில் பாஸ்போர்டிற்கு விண்ணப்பித்தால், இ பாஸ்போர்ட் தான் கிடைக்கும். மிக உயர்ந்த தொழில்நுட்பத்தின் பாஸ்போர்ட் பெறுபவர்களின் பல்வேறு விவரங்களை, எளிதாக அறிய முடியும். சிப்புடன்இணைக்கப்பட்ட கார்டு வடிவிலான இ பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.இந்த மாற்றங்கள் ஐக்கிய அரபு அமீகத்தில் வசிக்கும் 3.5 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களுக்கு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

சிப் வடிவில் உள்ள இ-பாஸ்போர்ட்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை சேர்க்க எளிதான ஆவண முறை பல்வேறு விரிவான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்னென்ன மாற்றங்கள் வந்துள்ளது என்பதை பார்ப்போம்.
1. இ-பாஸ்போர்ட் முறை இந்தியாவில் வந்துள்ளது
கைரேகைகள், டிஜிட்டல் கையெழுத்துக்கள் மற்றும் முகத் தரவு போன்ற பயோமெட்ரிக் விவரங்களைச் சேமிக்கும் RFID சிப்புடன் பதிக்கப்பட்ட இ-பாஸ்போர்ட்களை இந்தியா வெளியிடத் தொடங்கி இருக்கிறது. இந்த இபாஸ்போர்டுகள் சர்வதேச அளவிலான ICAO தரநிலைகளுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே எளிதாக குடியுரிமை அதிகாரிகள் உங்களை செக் இன் செய்ய முடியும். உங்கள் தரவுகளை உடனடியாக டிஜிட்டலில் அறிய முடியும். நீங்கள் விமான நிலையங்களில் விரைவாக சோதனைகளை முடித்துக் கொண்டு வெளியேறிவிட முடியும். ஐக்கிய அரபு அமீரகத்தல் வசிக்கும் இந்தியர்கள் புதிய பாஸ்போர்ட் அல்லது புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கும் போது, மேம்படுத்தப்பட்ட புதிய இ பாஸ்போர்ட்டை எளிதாக பெற முடியும்
2. ஐக்கிய அரபு அமீகத்தில் வசிப்பவர்கள் பாஸ்போர்டில் உங்கள் மனைவியின் பெயரைச் சேர்க்க போறீங்களா? அதற்காக திருமணச் சான்றிதழ் தேவையில்லை.
அதற்கு பதில் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், திருமணம் ஆகிவிட்டது என்பதை என்று சுயசான்று அளிக்கும் பிரமாணப் பத்திரத்தைப் இணைத்து, ங்கள் மனைவியின் பெயரைச் சேர்க்கலாம். தனியாக பதிவு செய்யப்பட்ட திருமணச் சான்றிதழ் தேவையில்லை. அதேபோல் திருமணத்திற்குப் பிறகு பெண்கள் தங்கள் குடும்பப் பெயரைப் புதுப்பிக்க அல்லது மாற்ற அதே படிவத்தைப் பயன்படுத்த முடியும்.
3. பிறப்புச் சான்றிதழ் இப்போது கட்டாயம்
உங்கள் குழந்தை அக்டோபர் 1, 2023 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்திருந்தால், அவர்களின் பிறந்த தேதியை நிரூபிக்க அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழை நீங்கள் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிறந்த குழந்தைகளுக்கு, சான்றிதழ் பின்வருமாறு இருக்க வேண்டும்:
ஐக்கிய அரபு அமீரக சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்
ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சகத்தால் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும்
பெற்றோரின் பாஸ்போர்ட் மற்றும் திருமணச் சான்றிதழ் போன்ற ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
வயதான விண்ணப்பதாரர்கள் என்றால் பள்ளி பதிவுகள், பான், வாக்காளர் ஐடி அல்லது ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்தி பாஸ்போர்ட் பெறலாம்.
4. குடியிருப்பு முகவரி டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருக்கிறது.
ஒருவரின் தனியுரிமையைப் பாதுகாக்க, குடியிருப்பு முகவரிகள் உங்களுடைய பாஸ்போர்ட்டின் கடைசி பக்கத்தில் அச்சிடப்படாது. அதற்கு பதிலாக அவை டிஜிட்டல் முறையில் சேமிக்கப்படும். QR குறியீடு அல்லது பார்கோடு வழியாக இணைக்கப்பட்டிருக்கும். குடியுரிமை அதிகாரிகள் உள்பட பாஸ்போர்ட் தொடர்பான அதிகாரிகளால் மட்டுமே அணுக முடியும். இந்த மாற்றம் தவறாக உங்கள் விவரங்களை ஒருவர் பயன்படுத்துவதை தவிர்க்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டுள்ளது.
5. பெற்றோரின் பெயர்கள் இனி கட்டாயமில்லை
பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்களின் பெயர்கள் இனி புதிய இந்திய பாஸ்போர்ட்களில் தோன்றாது. ஒற்றை-பெற்றோர் குடும்பங்கள்
பிரிந்து வாழும் குடும்பங்கள், LGBTQ+ அல்லது பாரம்பரியமற்ற குடும்ப கட்டமைப்புகள் உள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
6. பாஸ்போர்ட் அட்டைகளில் வண்ணக் குறியீடு கிடைக்கும்
ஒருவர் யார் என்பதை அடையாளம் காண்பதை எளிதாக்க வண்ணக் குறியீடு கொண்ட பாஸ்போர்ட் அட்டை முறையை இந்தியா அறிமுகம் செய்துள்ளது.
வெள்ளை நிறம் - அரசு அதிகாரிகள்
சிவப்பு - இராஜதந்திரிகள்
நீலம் - சாதாரண குடிமக்கள் (மாறவில்லை)
7. புதிய பாஸ்போர்ட் மையங்கள் வருகின்றன
காத்திருப்பு நேரத்தைக் குறைத்து விரைவாக பாஸ்போர்ட் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், இந்தியா தனது பாஸ்போர்ட் சேவை மையங்களை 2030 ஆம் ஆண்டுக்குள் 442 இலிருந்து 600 மையங்களாக விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறது, குறிப்பாக கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற பகுதிகளில் அதிகமான பாஸ்போர்ட் மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
நீங்கள் துபாயில் பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க போறீங்களா அல்லது அபுதாபியில் உங்கள் குழந்தைக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கிறீர்களோ, இந்த புதிய மாற்றங்கள் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications