Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல கவர்ச்சி நடிகை கைது.. துபாயில் கொட்டிய "ஆபாச ரசம்".. அந்த வீடியோ வேற.. டக்குனு பார்த்த போலீஸ்

பிரபல நடிகை உர்பி ஜாபத் துபாயில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன

Subscribe to Oneindia Tamil

துபாய்: வளைத்து வளைத்து துபாயில் வீடியோ எடுத்த, பிரபல நடிகை உர்பி ஜாவத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.. இந்த கைது நடவடிக்கை அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பி வருகிறது.

பிரபல மாடல் உர்ஃபி ஜாவேத்.. இவர் ஒரு புகழ்பெற்ற நடிகையும் கூட.. இவரது ஆடை அலங்காரத்தினாலேயே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.. அதே காரணங்களுக்காக பல்வேறு தரப்பினரின் அதிருப்திகளையும் சம்பாதித்து வருபவர்.

முதன்முதலில் ஹிந்தி சீரியல்களில் நடிக்க வந்தவர்.. சீரியலில் நடித்தபோதே, பிரபலமாகிவிட்டார்.. இந்த பிரபலத்தை வைத்து, ஹிந்தி பிக் பாஸின் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.. அந்த நிகழ்ச்சியில்தான், வித்தியாசமான உடைகளை அணிந்து, மேலும் ஃபேமஸ் ஆனார்..

 குட்டி குட்டி பேப்பர்ஸ்

குட்டி குட்டி பேப்பர்ஸ்

பொதுவாக எல்லாரும், விதவிதமாக டிரஸ் அணிந்து போஸ் தருவார்கள்.. ஆனால், இவர் டிரஸ்ஸே அணியாமல் விதவிதமாக போஸ் தருவார்.. இந்த போட்டோக்களை சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டு கொள்வார்.. இப்படித்தான் ஒருமுறை, வெறும் கலர் நிற நூலை மட்டும் உடம்பில் சுற்றிக் கொண்டு வந்து நின்று போஸ் தந்தார்.. ஒருமுறை தன்னுடைய தலைமுடியை முன்பக்கம் மறைத்து நின்று போஸ் தந்தார்.. ஒருமுறை, குட்டி குட்டி பேப்பர்களை உடம்பெல்லாம் ஒட்டிக் கொண்டு வந்து நின்று போஸ் தந்தார்.. இப்படியெல்லாம் அரைகுறை ஆடையுடன் போட்டோக்களை போடுவதால் இவருக்கு ஏராளமான ஃபாலோயர்ஸ்கள் கிடைத்தனர்.. ஆனால், அதில் பெரும்பாலானோர் இவரை திட்டி தீர்த்து வருகிறார்கள்..

கேவலம்

கேவலம்

ஆனால், யார் என்ன சொன்னாலும், யார் எவ்வளவு கழுவி ஊற்றினாலும் அதைபற்றியெல்லாம் உர்பி கவலைப்பட்டதாக தெரியவில்லை.. கேவலமாக பிரபலம் ஆவதைகூட அவர் மனப்பூர்வமாக ரசிக்கவே செய்தார்.. முழு டிரஸ்ஸை இவர் அணிந்து போட்டோ போட்டதாக தெரியவில்லை.. சில ஆடை வடிவமைப்பாளர்கள் தன்னுடன் சேர்ந்து வேலை செய்ய விரும்பவில்லை என்று ஒருமுறை உர்பியே சொல்லியிருந்தார்.. அப்படியானால் இவரது டிரஸ், ஆடை வடிவமைப்பாளர்களுக்கே அலர்ஜியை தந்துள்ளதாக தெரிகிறது..

 லைம்லைட் கமெண்ட்ஸ்

லைம்லைட் கமெண்ட்ஸ்

நெகட்டிவ் கமெண்ட்கள் தனக்கு வந்தாலும், அதற்கு பதிலடிகளை தந்து, பிறரை உர்பி காயப்படுத்தியுள்ளாரே தவிர, தன்னை திருத்தி கொண்டதாகவோ, மாற்றிக் கொண்டதாகவோ தெரியவில்லை. எவ்வளவு விமர்சிக்கப்பட்டாலும், லைம்லைட்டிலேயே இருக்க வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்துள்ளார். "தலைமுறை சாபத்தை முறியடிக்கும் முதல் பெண்கள் நாங்கள்.. சொந்தமாக முடிவெடுக்கும் முதல் பெண்கள் நாங்கள்... எங்கள் குடும்பத்தில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் முதல் பெண்கள் நாங்கள்" என்றெல்லாம் கம்பீரத்துடன் சொல்லி வருபவர் உர்பி.. ஆனால், ஆபாசமாக டிரஸ் அணிவது மட்டும்தான் பெண்களின் சுதந்திரமா? என்ற கேள்வியை பலரும் கேட்காமல் இல்லை..

 பேச்சே வரல

பேச்சே வரல

இந்நிலையில்தான், இவர் துபாய் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் நேற்று வெளியானது.. மருத்துவமனையில் இருந்தபடி உர்பியே ஒரு வீடியோவையும் பதிவிட்டிருந்தார்.. குரல்வளை அழற்சி பாதிப்பு காரணமாக, சிகிச்சை பெறுவதாக கூறியிருந்தார்.. அந்த வீடியோவிலிருந்து எடுக்கப்பட்ட அவரது போட்டோக்களும், சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில் அவர் பேசும்போது, உர்பி ஜாவேத்தின் குரல் பாதிக்கப்பட்டிருப்பதும், அவருக்கு குரல்வளை அழற்சி பாதிப்பு ஏற்பட்டிருப்பதும் தெரியவருகிறது... அவருக்கு பின்னால் டாக்டர் நிற்கிறார். அவருடன் உர்பி பேச முயல்கிறார்,. ஆனால் அவரால் பேசமுடியவில்லை.

 கவர்ச்சியோ கவர்ச்சி

கவர்ச்சியோ கவர்ச்சி

உர்பியின் மருத்துவமனை போட்டோக்களை பார்த்து அவரது ரசிகர்கள் மிகவும் கவலைக்குள்ளாகினர்.. விரைவில் குணமாகவேண்டுமென அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்தபடி இருந்தனர்.. இந்நிலையில், உர்பி கைதானார் என்று திடீரென செய்திகள் வெளியாகி உள்ளன.. இதற்கு காரணம், துபாயில் ஒரு வீடியோவை எடுத்துள்ளார்.. தன்னுடைய இன்ஸ்டாகிராமுக்காக துபாயில் அந்த வீடியோவை ஷூட் செய்துள்ளார்.. ஆனால், அவர் அணிந்திருந்த "டிரஸ்ஸில்" வழக்கம்போல் சர்ச்சை இருந்தாலும், அவர் அந்த வீடியோவை எங்கு எடுத்தார் என்பதுதான் சிக்கலாகி உள்ளது.

 சொட்ட சொட்ட

சொட்ட சொட்ட

கவர்ச்சிகரமான ஆடகளுடன் நடமாட தடை உள்ள பகுதியில், அளவுக்கு அதிகமான கவர்ச்சியுடன் டிரஸ் அணிந்து வீடியோ ஷூட் செய்துள்ளார்.. இதுகுறித்த புகார் போலீசுக்கு பறந்த நிலையில், உடனடியாக வந்த உர்பியை கைது செய்துள்ளதாக தெரிகிறது.. அவரிடம் விசாரணையும் நடக்கிறது.. எப்போதுமே பரபரப்புக்காக எதையும் செய்யக்கூடிய உர்பி இந்த வீடியோவையும் பரபரப்புக்காக வேண்டுமென்றே ஷூட் செய்தாரா? அல்லது அந்த இடம் தடை செய்யப்பட்ட பகுதி என்பது உண்மையிலேயே உர்பிக்கு தெரியவில்லையா? என தெரியவில்லை.. எந்த ஆபாசம் உர்பியை உச்சத்துக்கு கொண்டு போனதோ, அதே ஆபாசம் தான், இன்று ஜெயில் வரை கொண்டுபோய் விட்டுள்ளதாக தெரிகிறது.. விசாரணை நடக்கிறது.. பார்ப்போம்!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+