குப்பையில் கிடந்த தங்கம்.. விற்க சென்றவரை பிடித்த போலீசார்.. அடுத்து நடந்ததுதான் நம்பவே முடியாத ட்விஸ்ட்
துபாய்: துபாயில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற இந்திய பெண் காமினி கண்ணன் என்பவர் தவறுதலாக, தங்கை நகை வைத்து இருந்த பையை குப்பைத் தொட்டியில் வீசியுள்ளார். இனி அவ்வளவுதான் நகை கிடைக்காது என வேதனையில் ஆழந்தார் காமினி.. ஆனால் அவரது கற்பனை செய்து கூட பார்க்காத சம்பவம் நடைபெற்றுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
ஐக்கிய அரபு அமீரகத்த்தில் உள்ள துபாயில் கடந்த 2021 ஆம் ஆண்டு வரை வசித்தவர் காமினி கண்ணன். அதன்பிறகு தாய்நாடான இந்தியா திரும்பிய காமினி சமீபத்தில் துபாயில் நடைபெற்ற திருமண்ம் ஒன்றிற்காக அங்கு சென்றுள்ளார்.

தெரியாமல் குப்பையில் வீசிய காமினி
தங்கம் விலை இப்படி தாறுமாறாக உயர்ந்து கொண்டே செல்கிறதே.. மலிவாக இருக்கும் போது வாங்கி குவித்து இருந்தால் எவ்வளவு லாபம் கிடைத்து இருக்கும் என பழைய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டு வந்தார் காமினி. அப்போது தான் தங்க காயின் வைத்து இருந்த பை கிழிந்து இருந்ததை கவனித்துள்ளார்.
உடனே, அதில் இருந்த அனைத்து தங்கத்தையும், புதிதாக ஒரு சிறிய பையில் போட்டுவிட்டு, டைனிங் டேபிளில் வைத்துள்ளார். அதில், 22 காரட் தங்க காயின் 8 கிராமும், 50 கிராம் தங்க கட்டியும் இருந்துள்ளது. அதேநாள் மாலை நேரத்தில் வீட்டை சுத்தம் செய்த காமினியின் மகன் தங்கம் இருந்த பையை தவறுதலாக குப்பை பை என நினைத்து குப்பையில் வீசிவிட்டார்.
12.35 லட்சம் மதிப்புள்ள தங்கம்
பிப்ரவரி 2 ஆம் தேதி காமினி தாய்நாடு திரும்ப இருந்த நிலையில், 1 ஆம் தேதிதான் தங்கம் மிஸ் ஆனது தெரிந்தது. குப்பையில் தனது மகன் தவறுதலாக வீசியது தெரியவந்ததால், இனி எங்கே கிடைக்க போகிறது என்று நம்பிக்கை இழந்துள்ளார். இருந்தாலும் சொல்லி வைப்போமே என்று பில்டிங் காவலாளியிடம் 12.35 லட்சம் மதிப்புள்ள தங்கம் எப்படி மிஸ் ஆனது என்று சொல்லிவைத்துள்ளார்.
தங்கள் மீதுதான் தவறு.. எப்படியும் கிடைக்காது என்று கருதிய காமினி குடும்பத்தினர் போலீசிடமும் புகார் அளிக்கவில்லை. இந்த நிலையில்தான் மூன்று நாட்கள் கழித்து பிப்ரவரி 4 ஆம் தேதி காமினியின் மகன் அபிமன்யூவிற்கு கட்டிடத்தின் பாதுகாவலரிடம் இருந்து போன் அழைப்பு வந்துள்ளது. அப்போது, காணாமல் போன தங்கள் உடைமைகளைப் பற்றி யாரோ விசாரிப்பதாக அந்தக் காவலாளி கூறியுள்ளார்.
தேடி வந்த போலீசார்
விசாரித்தவர்கள் காவல்துறையினர் என்பது பின்னர் தெரியவந்ததாகவும் அபிமன்யு கூறினார். உடனே அந்த போலீஸ் அதிகாரியை சந்திக்க அபிமன்யூ சென்றுள்ளார். அப்போது, போலீசார் கூறிய தகவல் அவருக்கு வியப்பை அளித்துள்ளது. அதாவது, குப்பை சேகரிக்கும் ஒருவர் தங்கத்தை கண்டுபிடித்து அதை தங்க கடைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு போலீசார் அந்த ஊழியரை விசாரித்தபோது, குப்பையில் அந்த தங்கத்தை கண்டெடுத்ததாக தெரிவித்துள்ளார். அதன் பிறகு அந்த தங்கத்தை தவற விட்டது யாராக இருக்கும் என்று விசாரித்து, நேராக அபிமன்யூ கட்டிடத்திற்கே போலீசார் வந்துவிட்டார்களாம்.
நவீன முறையில் டிராக் செய்யப்படுகிறதாம்
துபாயில் கழிவு மேலாண்மை கூட எந்த நளவு நவீன முறையில் டிராக் செய்யப்படுகிறது என்பது ஒவ்வொரு பையும் எந்த வீட்டில் இருந்து வீசுகிறார்கள் என்பது முதல் கொண்டு கண்காணிக்கப்படுவது போல் தெரிவதாக அபிமன்யூ கூறினார். மறுநாள் அவரை அபிமன்யூவை தங்கம் வாங்கியதற்கான ஆவணங்களுடன் காவல் நிலையம் வருமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதன்பிறகு மொத்த பிரச்சனையும் சுமூகமாக முடிந்துவிட்டதாகவும் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications