இதுதான் சூட்சமம்.. வலுவான பாகிஸ்தானை இலங்கை வீழ்த்தியது எப்படி? காரணமே சிஎஸ்கேதானாம்.. என்ன நடந்தது?
துபாய்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இலங்கை அணி வென்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் பேட்டிங்கை பார்க்கும் போது கண்டிப்பாக அந்த அணி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்றுதான் கருதப்பட்டது.
ஆனால் கணிப்புகளை எல்லாம் தூளாக்கி இலங்கை அணி அதிரடியாக ஆடி வென்றுள்ளது. இந்த சீசனில் கோப்பையை வெல்ல போகும் அணி என்ற லிஸ்டில் இலங்கைதான் கடைசியில் இருந்தது. இந்தியா, பாகிஸ்தானுக்கே கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு.
அப்படி இல்லை என்றால் ஆப்கானிஸ்தான் அணிக்கே கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு என்று கூறப்பட்டது. ஆனால் அந்த கணிப்புகளை எல்லாம் சுக்குநூறாக உடைத்து நேற்று நடந்த போட்டியில் இலங்கை அணி வென்றுள்ளது.
இந்த போட்டியில் இலங்கை எப்படி வென்றது என்று பார்க்கலாம்!

டாஸ்
நேற்று போட்டியில் பாகிஸ்தான் அணிதான் டாஸ் வென்றது. எதிர்பார்த்தபடியே டாஸ் வென்று பாகிஸ்தான் முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அமீரகத்தில் நடக்கும் போட்டிகளில் சேசிங் செய்யும் அணிதான் வெற்றிபெறுகிறது என்பதால் பாகிஸ்தான் சேசிங் செய்யவே விரும்பியது. அதேபோல் முதலில் இறங்கிய இலங்கை அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. நிஷான்கா, மெண்டிஸ் தலா 8, 0 ரன்களுக்கு அவுட் ஆனார்கள்.

அடுத்தடுத்து அவுட்
இன்னொரு பக்கம் குணாதிலகா 1 ரன்னில் அவுட் ஆக, சில்வா மட்டும் பொறுமையாக ஆடி 28 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் ராஜபக்சே இறங்கி பொறுமையாக விக்கெட் விழாமல் கட்டுப்படுத்தினர், குணாதிலக அவுட் ஆனதும் கேப்டன் ஷனாகா இறங்கி தேவையில் இல்லாமல் ஸ்வீப் அடிக்க முயன்று அவரும் அவுட் ஆனார். இதனால் இலங்கை கதை ஓவர் என்றே கருதப்பட்டது. ஆனால் அதன்பின் இறங்கிய ஹசாரங்கா நிதானமாக ஆட தொடங்கினார்.

சின்ன பார்ட்னர்ஷிப்
ஹஸரங்கா, ராஜபக்சே இடையே சின்ன பார்ட்னர்ஷிப் இருந்தது. 45 பந்துகள் பிடித்த ராஜபக்சே 3 சிக்ஸ், 6 பவுண்டரி என்று கடைசி வரை விக்கெட் இழக்காமல் 71 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் ஹஸரங்கா 21 பந்தில் 5 பவுண்டரிகளை அதிரடியாக அடித்தார், 1 சிக்ஸ் உட்பட இவர் 36 ரன்கள் எடுத்தார். இதனால் 150ல் சுருளும் என்று எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அணி 170-6 ரன்கள் எடுத்தது. ஆனால் பாகிஸ்தானுக்கு இது எட்டக்கூடிய இலக்குதான்.

அதிரடி ஆட்டம்
எதிர்பார்த்தபடியே பாபர் இந்த முறையும் பாகிஸ்தானில் சொதப்ப அவர் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் ரிஸ்வான் மீண்டும் நிதானமாக ஒன் டே இன்னிங்ஸ் ஆடி, 49 பந்தில் 55 ரன்கள் எடுத்தார். இதன்பின் இறங்கியதில் இப்திகார் மட்டும் 32 ரன்கள் எடுத்தார். பகார் சாமான், ஆசிப் அலி, குஷித்தில், முகமது நவாஸ், சதாப் கான், ஹாரிஸ் ராப், என்று யாருமே 15 ரன்கள் கூட எடுக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

15 ஓவர்கள்
15 ஓவர்கள் வரை 102 -4 என்று பாகிஸ்தான் வலிமையாகவே இருந்தது. ஆனால் கடைசி 5 ஓவரில் 70 ரன்கள் அடிக்க வேண்டும் என்றதும் அவசரமாக ஆட போய் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. 17வது ஓவரில் மட்டும் வரிசையாக 3 விக்கெட்டுகளை ஹஸரங்கா எடுத்தார். பின்னர் அடுத்தடுத்து ஒவ்வொரு ஓவரில் ஒவ்வொரு விக்கெட் சென்றதால் பாகிஸ்தான் ஆல் அவுட் ஆனது. இதில் பிரமோத் மதுஷன் எதிர்பார்க்காத விதமாக 4 விக்கெட்டுகளை எடுத்தார். மதுஷன், ஹஸரங்கா இருவரும்தான் ஆட்டத்தையே மாற்றியது.

எப்படி?
பொதுவாக அமீரகத்தில் டாஸ் வெல்லும் அணிதான் ஆட்டத்தை வெல்லும் என்ற கருத்து இருந்தது. இதை நேற்று இலங்கை மாற்றியது. இதற்கு முன் 2021 ஐபிஎல் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே 192/3 எடுத்தது. அப்போது இரண்டாவது ஆடிய கொல்கத்தா 165/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் இப்போதுதான் இறுதிப்போட்டியில் ஒரு அணி டிபன்ஸ் செய்து வென்றுள்ளது. இலங்கை கேப்டன் ஷனாகவும் இதைத்தான் குறிப்பிட்டுள்ளார். சிஎஸ்கே அணியின் 2021 வெற்றியை நாங்கள் பார்த்தோம். அவர்களின் வியூகத்தை நான் மனதில் வைத்து இருந்தேன். டாஸ் தோல்வி அடைந்ததும், சிஎஸ்கே போலவே ஆட வேண்டும் என்று ஆடினேன் என்று குறிப்பிட்டு உள்ளார்,
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications