1020 நாள் வனவாசம்! சோகம்! கோபம்! டிப்ரஷன்! கோலி முகத்தில் அந்த சிரிப்பு.. செஞ்சுரி அடித்தது எப்படி?
துபாய்: 1020 நாட்கள்.. சரியாக 1020 நாட்களுக்கு நாட்களுக்கு பின்பாக கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சதம் அடித்து இருக்கிறார். இப்போது அடிப்பார்.. அப்போது அடிப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில்.. யாரும் எதிர்பார்க்காத ஒரு நாளில் சதம் அடித்து மொத்த கிரிக்கெட் உலகையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார் கோலி.
"கொரோனா காலத்தில் நான் 1 மாதாமாக பேட்டை தொடவே இல்லை. நான் சமீபத்தில்தான் உணர்ந்து கொண்டேன்.. நான் என் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தாமல் பொய்யாக நடிக்கிறேன் என்று.
நான் ஆக்ரோஷமாக இருக்கிறேன் என்று எனக்கு உள்ளேயே சொல்லிக்கொண்டேன். ஆனால் உன் உடல் என்னை நிறுத்த சொன்னது, என்று கோலி ஆசிய கோப்பை தொடருக்கு முன்பா கசொன்னார்.
மிகவும் சோகமாக இவர் அளித்த பேட்டி கிரிக்கெட் உலகத்தியே உலுக்கிப்போட்டது.

என்ன சொன்னார்?
"பொய்யாக நடிக்க வேண்டாம். கொஞ்சம் ஓய்வு எடு என்று என் மனமும் என்னிடம் சொன்னது. ரவி சாஸ்திரி கூட என்னை கொஞ்சம் ஓய்வு எடுக்கும் படி கூறினார். நான் ஒரு வலிமையான மனது கொண்ட நபராக பார்க்கப்பட்டேன். நான் அப்படித்தான் இருந்தேன். ஆனால் எல்லோரும் ஒரு லிமிட் இருக்கும். எனக்கும் ஓரும் லிமிட் இருக்கிறது. அந்த லிமிட்டை நாம் கண்டுபிடிக்கவில்லை என்றால் அதுவே நமக்கு சிக்கலாக மாறிவிடும்.

சோகம்
அதுவே நம் ஆரோக்கியத்தை பாதிக்கும். இந்த காலம் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தது. உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு வேலையை விட இன்னும் பல விஷயங்கள் உள்ளன. உங்களை சுற்றி இருக்கும் எல்லோரும் உங்களை உங்களின் வேலையை வைத்து மட்டுமே அடையாளம் காணும் போது.. நீங்கள் உங்களுக்குள் இருக்கும் மனித தன்மையை இழக்க நேரிடும். கடந்த சில நாட்களாக நான் என்னுடைய உள் உணர்வுகளை சரியாக புரிந்துகொள்ளவில்லை. பிரச்னையை வெளிப்படுத்துவது, உணர்வுவது என்பது அதை மறைப்பதை விட சிறப்பானது என்று விராட் கோலி உருக்கமாக குறிப்பிட்டு இருந்தார்.

டிப்ரஷன்
தன் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வந்த பின் அவர் இந்த பேட்டியை கொடுத்து இருந்தார். அவரின் இந்த பேட்டி வெறும் பேட்டி அல்ல.. நான் மீண்டு வந்துவிட்டேன்.. நான் பழைய மாதிரி ஆட போகிறேன் என்று கோலி கொடுத்த ஸ்டேட்மென்ட் அது! பேட்மேன் வருவதற்கு முன்பாக வானத்தில் தோன்றும் ஒளியை போன்ற கோலி கொடுத்த வார்னிங்தான் அந்த பேட்டி! கொரோனாவிற்கு முன்பு வரை நல்ல பார்மில் இருந் கோலி கொரோனா காலத்தில் பார்மை இழந்தார். நான் ஒரு மாதமாக பேட்டை தொடவே இல்லை. 1 மாதம் கழித்து பேட்டை எடுத்த போது நான் மிக வித்தியாசமாக உணர்ந்தேன் என்று கோலியே குறிப்பிட்டு இருந்தார். அப்போது பார்மை இழந்த கோலி அதன்பின் 2021, 2022. ஆசிய கோப்பை தொடர் வரை பார்மிற்கு வரவே இல்லை.

தொடர்
அவரும் மாறி மாறி பல தொடர்களை ஆடினார். ஐபிஎல் போட்டிகளை ஆடினார். சில போட்டிகளில் 70+ ரன்களை கூட எடுத்தார். ஆனால் இவரால் செஞ்சுரி அடிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் விராட் கோலி ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக மொத்தமாக ஓய்வு எடுத்தார். பெரிதாக மேட்ச் ஆடி பார்மிற்கு திரும்ப முயற்சி செய்யாமல், ஓய்வு எடுத்து மனசை தயார் படுத்துவோம் என்ற முடிவை எடுத்தார். அனுஷ்காவுடன் அவுட்டிங்..சுற்றுலா என்று விராட் கோலி கிரிக்கெட் மீது கவனம் செலுத்தாமல் தன் சொந்த வாழ்க்கை பற்றி கவனம் செலுத்தினார்.

என்ன நடந்தது?
ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக எல்லோரும் தீவிரமாக பயிற்சி எடுத்த போது கோலி மட்டும் 15 நாட்கள் பேட்டையே தொடாமல் அமைதியாக இருந்தார். அவர் எடுத்த இந்த ஓய்வுதான் தற்போது ஆசிய கோப்பையில் கோலி பார்மிற்கு திரும்ப முக்கிய காரணம் ஆகி உள்ளது. தொடர்ந்து ஆடி ஆடி பார்மிற்கு திரும்பி விடலாம் என்று நினைத்த கோலி.. அதில் தோல்வி அடைந்து.. எங்கே கொஞ்சம் ஓய்வு எடுத்து பார்க்கலாமே என்று எடுத்த ஓய்வுதான் அவர் மீண்டும் பார்மிற்கு வர காரணம் ஆகி உள்ளது.

பார்ம்
இந்த ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அரை சதம், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அரை சதம் என்று மிரண்டு போட்டிகளில் அதிரடியாக கோலி பெரிய அளவில் நம்பிக்கை கொடுத்தார். ஆனால் இன்றிய போட்டியில் பழைய அதே ஆக்ரோஷத்துடன் கோலி ஆடிய விதம் பலரையும் கவர்ந்தது. ஆக்ரோஷம் மட்டுமின்றி ஓவர்களுக்கு இடையில் நின்றபடி இவர் டான்ஸ் ஆடிக்கொண்டே கூலாக ஆடிய விதமும் கவனம் பெற்றது. பழைய கோலியிடம் இருந்த அதே வேகம்.. வியூகம்.. குறும்புத்தனம் அனைத்தும் இன்று அவரின் ஆட்டத்தில் இருந்தது.

70
அதிலும் 12 பவுண்டரி.. 6 சிக்ஸ் என்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இன்று கோலி ஆடியது எல்லாம் ருத்ர தாண்டவம். 70 ரன்கள் எடுத்த பின் கோலி காட்டிய வேகம் பை பாஸில் செல்லும் பிரைவேட் பஸ்ஸை விட வேகமாக இருந்தது. 90 ரன்கள் கடந்த பின் ஒரு பவுண்டரி.. அடுத்த பந்தே சிக்ஸ் என்று கோலி சதத்தை தொட்டது மொத்த மைதானத்தையும் ஒரு நிமிடம் "பாஸ்" செய்தது. லாங்க் ஆன் திசையில் போன அந்த சிக்ஸ்.. இதைவிட வேறு எப்படி ஒரு 71வது சதத்தை எடுக்க முடியும் சொல்லுங்கள்..? 71வது செஞ்சுரியை அடித்தது.. தனது செயினில் உள்ள ரிங்கை எடுத்து கோலி முத்தமிட்ட அந்த நொடி.. மூன்று வருட தவம்! 1020 நாட்கள் வனவாசத்திற்கான திமிரான பதிலடிதான் அந்த நீண்ட முத்தம்!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications