இந்தியாவின் மாஸ்டர் மூவ்.! ஒரு பக்கம் அமீரகம் உடன் டீல்.. இன்னொரு பக்கம் சவுதி உடன் மீட்டிங்!
துபாய்: சமீபத்தில் தான் அமீரக அதிபர் இந்தியாவுக்கு வந்து சென்ற நிலையில், பாதுகாப்பு கூட்டாண்மை குறித்து முக்கிய கடிதம் கையெழுத்தாகி இருந்தது. அந்தக் கடிதம் கையெழுத்தான உடனேயே இந்தியா நேராக சவுதியிடம் சென்றுள்ளது. சவுதி - அமீரகம் இடையே மோதல் உள்ள சூழலில், இந்தியாவின் இந்த நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் பல லட்சம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். இதனால் மத்தியக் கிழக்கு நாடுகள் உடனான உறவு நமக்கு ரொம்பவே முக்கியம். இதன் காரணமாகவே அங்குள்ள எல்லாத் தரப்பு நாடுகளுடனும் இந்தியா முடிந்தவரை இணைந்து செயல்படும். நடுநிலையான ஒரு நிலைப்பாட்டையே எடுக்கும்.

அமீரகம்
கடந்த வாரம் தான் அமீரக அதிபர் இந்தியாவுக்கு வந்து சென்றிருந்தார். அவர் வெறும் 3 மணி நேரம் மட்டுமே இந்தியாவுக்கு வந்தாலும் அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. குறிப்பாகப் பாதுகாப்பு சார்ந்து முக்கியமான கடிதமும் கையெழுத்தானது. இதற்கிடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தான உடனேயே சவுதி உடனும் இந்தியா ஆலோசனை நடத்தியுள்ளது.
சவுதி
நேற்றைய தினம் சவுதி தலைநகர் ரியாத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய மற்றும் சவுதி மூத்த அதிகாரிகள் சந்தித்துப் பேசினார். இரு தரப்பிற்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டதுடன், உலகளவிலும் தங்கள் பிராந்தியங்களிலும் பயங்கரவாத குழுக்களால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்தும் விவாதித்தனர்.
இது மூன்றாவது இந்தியா-சவுதி அரேபியா பாதுகாப்பு மீட்டிங் ஆகும். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பயங்கரவாத எதிர்ப்பு இணைச் செயலாளர் வினோத் பஹாடேவும், சவுதி உள்துறை அமைச்சகத்தின் சட்ட விவகாரங்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு இயக்குநர் ஜெனரல் அகமது அல்-ஈசாவும் இணைந்து இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர்.
முக்கியமான மீட்டிங்
தீவிரவாதம், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதைத் தடுத்தல், பயங்கரவாத நோக்கங்களுக்காகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தடுத்தல், குற்றங்களுக்கும் பயங்கரவாதத்திற்கும் இடையேயான தொடர்பு, பயங்கரவாத எதிர்ப்புகளில் உள்ள சவால்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த வழக்கமான மீட்டிங் என்றாலும் கூட இந்தியா அமீரகம் இடையேயான பாதுகாப்பு கூட்டாண்மைக்கான உறுதிமொழி கடிதம் கையெழுத்திடப்பட்ட சில நாட்களில் இந்தச் சந்திப்பு நடந்ததால் அது கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனென்றால் ஏமன் விவகாரத்தால் சவுதிக்கும் அமீரகத்திற்கும் இடையேயான உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏன் முக்கியம்
இரு நாடுகளும் நேரடியாக மோதிக் கொள்ளவில்லை என்றாலும் ஏமன் மற்றும் மேற்கு ஆசியா, வட ஆப்பிரிக்காவின் லிபியா, சூடான் போன்ற பிற பகுதிகளில் நிலவும் சூழல்களில் நேர் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. இதில் இரு தரப்பும் சில காட்டமான விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறது. இதனால் மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆனால் மத்தியக் கிழக்கில் இரு நாடுகள் உடனான உறவும் இந்தியாவுக்கு முக்கியம். சவுதி அரேபியா மற்றும் அமீரகம் ஆகிய இரு நாடுகளும் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் முதலீடுகளுக்கு மிக முக்கியமானவை. மேலும், அங்கு ஏராளமான இந்தியர்களும் பணியாற்றுவதால், இரண்டுமே இந்தியாவுக்கு முக்கியமானது. அமீரகம் உடனான ஒப்பந்தத்தால் இந்தியா- சவுதி உறவில் சிக்கல் வராது என்பதைக் காட்டவே இந்தியா உடனடியாக இந்த சந்திப்பை நடத்தியிருக்கிறது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
'கோஸ்ட் டெலிவரி..' சிலிண்டர்களை வைத்து ஏஜென்சிகள் ஆடும் கேம்.. கதறும் பொதுமக்கள் -
துபாய் போட்ட திடீர் உத்தரவு.. இந்தியர்களுக்கு தான் மோசமான பாதிப்பு.. இன்னும் 10 நாளே தானே இருக்கு! -
ஹார்முஸ் நீரிணை.. கட்டுப்பாட்டை கையில் எடுக்கும் US! டிரம்ப் போட்ட உத்தரவால் இந்தியாவுக்கு சிக்கல் -
நட்புன்னா.. இதுதான்! வேலையைவிட்டுட்டு நண்பனுக்காக உதவ நடுரோட்டுக்கு வந்த சயின்டிஸ்ட்! -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள்












Click it and Unblock the Notifications