"ப்ளீஸ்".. பயிற்சி முடித்து திரும்பிய இந்திய வீரர்களிடம் பாக். பெண் சொன்ன விஷயம்.. தோனி செம பதில்!
துபாய்: பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகை ஒருவருக்கு இந்திய அணியின் ஆலோசகர் தோனி அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இந்தியா பாகிஸ்தான் இடையிலான டி 20 உலகக் கோப்பை ஆட்டம் இன்று நடக்க உள்ளது. 2019ல் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 336/5 ரன்கள் எடுத்தது. இதில் ரோஹித் சர்மா 140 ரன்கள் எடுத்தார்.
இதன்பின் இறங்கிய பாகிஸ்தான் 212 ரன்கள் மட்டுமே எடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

தோல்வி
அதன்பின் தற்போது டி 20 உலகக் கோப்பை ஆட்டத்தில் இரண்டு அணிகளும் இன்று மோதுகின்றன. இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் மிக தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார்கள். நேற்று சாதாரண பயிற்சி மேற்கொண்ட இந்திய வீரர்கள் அதற்கு முந்தைய நாட்களில் கடுமையான பயிற்சி மேற்கொண்டனர்.

பயிற்சி
இந்த நிலையில்தான் நேற்று பயிற்சி முடித்துவிட்டு இந்திய வீரர்கள் திரும்பும் போது அவரிடம் பாகிஸ்தான் பெண் ஒருவர் ஜாலியாக கோரிக்கைகளை வைத்துக் கொண்டு இருந்தார். பெவிலியன் அருகே நின்று கொண்டு இருந்த பெண், பயிற்சி முடித்து திரும்பி வந்த கே. எல் ராகுலிடம்... ராகுல் ப்ளீஸ் நீங்கள் நாளை நன்றாக ஆட வேண்டாம்.

ப்ளீஸ்
ப்ளீஸ் நாளை ஒருநாள் மட்டும் சுமாராக ஆடுங்கள். அதன்பின் நீங்கள் நன்றாக ஆடுங்கள். நாளை பாகிஸ்தான் வெற்றிபெற வேண்டும் என்று குறிப்பிட்டார். இதை கேட்டு கே.எல் ராகுல் பெரிதாக எதுவும் சொல்லவில்லை. அந்த பெண்ணை பார்த்து சிரித்துக்கொண்டே அவர் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

பும்ரா
அதன்பின் அவருக்கு பின் தோனி மற்றும் பும்ரா இருவரும் வந்தனர். இருவரும் பேசிக்கொண்டு வந்த போது பெவிலியன் அருகே வந்த அந்த பெண் தோனியை நிற்க சொல்லி கத்தினார். இதையடுத்து தோனி உடனே தான் நடக்கும் வேகத்தை குறைத்தார். அப்போது அந்த பெண் மஹி இந்த மேட்சை விட்டுக்கொடுங்கள்.. இந்த ஒரு மேட்சை மட்டும் விட்டுவிடுங்கள்.

வெல்ல வேண்டாம்
அடுத்த போட்டியில் பார்த்துக்கொள்ளலாம். இந்த போட்டியில் வெல்ல வேண்டாம், என்று குறிப்பிட்டார். இதற்கு தோனி எதோ சிரித்தபடி தோனி நோ சொன்னார். அதன்பின், கிரிக்கெட் ஆடுவது எங்களுடைய வேலை.. என்று சிரித்துக்கொண்டே குறிப்பிட்ட்டார். தோனி அந்த பெண்ணிடம் இயல்பாக சிரித்துக்கொண்டே பதில் சொன்னது இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications