தலைக்கு மேல் குவிந்த கடன்.. மன வேதனையில் இந்தியத் தொழிலாளர் தூக்குப் போட்டு தற்கொலை
துபாய்: சமுதாய சேவையில் அதிக நாட்டம் கொண்டு ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தால் பாராட்டப்பட்ட இந்தியத் தொழிலாளர் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சந்தீப் வெள்ளலூர் என்ற 35 வயது கொண்ட அந்த இந்தியர், ஐக்கிய அரபு அமீரகத்துக்குட்பட்ட ராஸ் அல் காய்மா பகுதியில் பணிபுரிந்து வந்தார். பல்வேறு தன்னார்வ பணிகளில் தம்மை அவர் ஈடுபடுத்தி வந்துள்ளார்.

தாம் குடியிருந்த ராஸ் அல் காய்மா பகுதியில், சந்தீப் பல்வேறு பொதுச்சேவைகளில் இறங்கி பல நல்ல காரியங்களை செய்து வந்திருக்கிறார். தொடர்ந்து ரத்ததான முகாம்களை நடத்தி வந்த அவரின் சேவையை பாராட்டி, அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் 2016ம் ஆண்டு கவுரவித்து சான்றிதழ் ஒன்றையும் வழங்கியுள்ளது.
அதுதவிர, 2017ம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் சிக்கி ஊனமுற்று பின்னாளில் உயிரிழந்த இந்திய தொழிலாளி ஒருவரின் குடும்பத்துக்கு 4 லட்சம் நிவாரண தொகையை சந்தீப் வழங்கி உள்ளார்.
இந்நிலையில், தங்கியிருந்த தமது இல்லத்திலேயே அவர் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உயிரை மாய்த்து கொள்ளும் போது, உடன் தங்கியிருந்த மற்ற இருவரும் இல்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் சந்தீப், டிராவல்ஸ் கம்பெனி நடத்தி வந்ததாகவும், அதில் போதிய வருவாய் இல்லாமல் அவர் சிக்கலில் இருந்து வந்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். கடன் தொல்லையால் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும்,சடலம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், முறையான அரசு நடவடிக்கைகளுக்கு பிறகு உடல் ஒப்படைக்கப்படும் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications