வாட்ச்மேனுக்கு 2 கோடி பரிசு.. ஒரே நாளில் தலைவிதியே மாறிடுச்சு! அபுதாபியில் இந்தியருக்கு அடித்த யோகம்
துபாய்: அபுதாபியில் வாட்ச் மேனாக பணியாற்றும் இந்திய தொழிலாளி ஒருவருக்கு லாட்டரியில் ரூபாய் 2 கோடியே 32 லட்சம் பரிசு அடித்துள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த ராஜமல்லையா என்ற தொழிலாளி ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார். லாட்டரியில் பரிசு அடித்து இருப்பதால் தற்போது மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டு இருக்கிறாராம் ராஜமல்லையா. இது பற்றிய விவரங்களை இங்கு பார்க்கலாம்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பலரும் பணியாற்றி வருகிறார்கள். அந்த வகையில், இந்தியாவை சேர்ந்த பலரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டுமானம், டிரைவர் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள். எண்ணெய் வளம் மிக்க ஐக்கிய அரபு அமீரகத்தில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனைக்கும் அனுமதி உள்ளது.

இந்தியாவில் கேரளா, சிக்கிம், பஞ்சாப், நாகலாந்து போன்ற மாநிலங்களில் உள்ளதை போல ஐக்கிய அரபு அமீரகத்திலும் லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. எண்களை பிரெடிக்ட் செய்வது, ஸ்க்ராட்ச் லாட்டரி என பல்வேறு லாட்டரிகள் அங்கு உள்ளன. ஐக்கிய அரபு அமீரக லாட்டரியை அங்கு வசிப்பவர்கள் யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்பதால், அங்கு பணியற்றும் வெளிநாட்டினருக்கு கூட லாட்டரியில் பரிசு விழும் செய்திகள் வெளியாகி வருவதை பார்க்க முடியும்.
ரூ.44 கோடி லாட்டரியில் பரிசு
கடந்த ஜனவரி மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்த இந்தியரான முனாவர் பைரோஸ்க்கு ரூ.44 கோடி பரிசு அடித்தது. தனது நண்பர்களுடன் இணைந்து வாங்கிய லாட்டரியில் அவருக்கு இவ்வளவு பெரிய தொகை அடித்து இருந்தது. அதேபோல, கடந்த பிப்ரவரி மாதம் கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு அபுதாபி பிக் டிக்கெட் குலுக்கலில் ரூ.34 கோடி பரிசு விழுந்தது.
இப்படி அவ்வப்போது, இந்திய தொழிலாளர்களுக்கும் அபுதாபியில் அதிர்ஷ்டம் கொட்டுகிறது. இதனால், அபுதாபியில் லாட்டரி விளையாடுவதில் இந்திய தொழிலாளர்கள் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். லாட்டரியை பொறுத்தவரை ஏதோ ஒருவருக்கு பணம் அடித்து பலரை நஷ்டம் ஆக்கிவிடும் என்பதும் மறுப்பதற்கு இல்லை.. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்..
வாட்ச்மேனுக்கு அடித்த பரிசு
அபுதாபி லாட்டரியில் இந்தியர் ஒருவருக்கு தற்பொது 1 மில்லியன் திர்ஹம் ( இந்திய மதிப்பில் ரூபாய் 2 கோடியே 32 லட்சத்து 59 ஆயிரத்து 990) பரிசாக அடித்துள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ராஜமல்லையா. 60 வயதான ராஜமல்லையா, அபுதாபியில் வாட்ச் மேனாக பணியாற்றி வருகிறார். குடும்ப வறுமையை போக்க கடல் கடந்து பணிக்கு சென்றவருக்கு தற்போது அதிர்ஷ்ட தேவை கண் திறந்துள்ளது.
நான்கு ஆண்டுகளாக லாட்டரி வாங்கும் பழக்கம் அவருக்கு இருந்துள்ளது. இந்த நிலையில் டிசம்பர் மாதத்திற்கான பிக் டிக்கெட் லாட்டரியை வாங்க்கியுள்ளார். வாராந்திர டிக்கெட்டின் குலுக்கல் நடைபெற்ற நிலையில் அவருக்கு 1 மில்லியன் திர்ஹாம் பரிசாக அடித்துள்ளது. தனக்கு பரிசு விழுந்த தகவலை கேட்டதும் மகிழ்ச்சியில் துள்ளிகுதித்த ராஜமல்லையா, இந்த பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்ய இருப்பதாக கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "இந்த பணத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். மீதம் உள்ள பணத்தை குடும்பத்திற்காக சேமிக்க உள்ளேன். லாட்டரியில் பரிசு அடிப்பது எனக்கு இதுவே முதல் முறை. பரிசு விழுந்து இருப்பதாக எனக்கு தொலைபேசியில் அழைப்பு வந்ததும், என்னால் நம்பவே முடியவில்லை" என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications