துபாய் ஏர்போர்ட் மீது தாக்குதல்.. இந்தியர் ஒருவர் உட்பட 4 பேர் காயம்! உச்சத்தை எட்டும் ஈரான் போர்
துபாய்: ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இதர வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று துபாய் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், ஓர் இந்தியர் உட்பட 4 பேர் காயமடைந்திருக்கின்றனர்.
துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அருகே 2 ட்ரோன்கள் விழுந்து வெடித்தன. இதனால் ஏற்பட்ட தீ மற்றும் அதிர்வு பாதிப்புகளில் 4 பேர் காயமடைந்திருக்கின்றனர்.

ட்ரோன் தாக்குதல்
இது குறித்து துபாய் ஊடக அலுவலகம் தனது x பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "துபாயில் புதன்கிழமை அன்று, விமான நிலையத்திற்கு அருகே ட்ரோன்கள் விழுந்த சம்பவத்தில், ஒரு இந்தியர் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். இதில் இந்திய நாட்டவருக்கு மிதமான காயங்களும், இரண்டு கானா மற்றும் ஒரு பங்களாதேஷ் நாட்டவருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டிருக்கிறது. விமானப் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கி வருகிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியர் காயம்
உலகின் மிகவும் பிஸியான விமான நிலையங்களில் துபாய் விமான நிலையம் முதலிடத்தில் இருக்கிறது. இது மேற்கு நாடுகளையும், கிழக்கு நாடுகளையும் இணைக்கும் முனையமாக செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் போர் காரணமாக பாதிக்கப்பட்டிருப்பது, ஐக்கிய அரபு அமீரகத்தின் சுற்றுலா வருவாயை பாதித்திருக்கிறது.
சிக்கலில் வளைகுடா நாடுகள்
அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் இப்போது வரை அமெரிக்கா சார்பு நிலையில்தான் இருக்கின்றன. எனவே இந்த நாடுகளின் ராணுவ மையங்கள் மற்றும் பொருளாதார மண்டலங்களை குறி வைத்து ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் இடைமறித்து தடுத்துள்ளன. ஆனால் முழுமையாக தடுக்க முடியவில்லை. எனவே துபாய் நகரத்திலிருந்து மொத்த சுற்றுலா பயணிகளும் உடனடியாக வெளியேறியிருக்கின்றனர்.
எரிவாயு தட்டுப்பாடு
எப்போதும் பரபரப்பாக இருக்கும் துபாய் நகரம், தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. மறுபுறம் இந்த மோதல் காரணமாக உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. எனவே ஓட்டல்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்றன.
-
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
ஈரான் போர் முடிவுக்கு வருகிறது! திங்கட்கிழமைக்குள் விடிவுகாலம்.. முதலீட்டுச் சந்தையில் மிகப்பெரிய'ரீசெட்'! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
அடங்காத போர் வெறி.. அமெரிக்க தாக்குதலில் பறிபோன 3 இந்தியர்களின் உயிர்! ஓமனில் அதிர்ச்சி! -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி












Click it and Unblock the Notifications