அவங்க வருவாங்கன்னு நினைக்கலை.. ஸ்டன் ஆன ரசிகர்கள்.. டெல்லி vs பஞ்சாப் போட்டியில் செம டிவிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஐபிஎல் தொடரில் இந்த முறை ரசிகர்கள் இன்றி போட்டி நடக்கிறது. இந்த நிலையில்தான் இன்று நடந்த ஐபிஎல் போட்டியில் செம திருப்பம் ஒன்று நடந்துள்ளது.

இன்று பஞ்சாப்பிற்கும், டெல்லிக்கு இடையில் ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது. நேற்று மும்பை மற்றும் சென்னை இடையே ஐபிஎல் போட்டி நடைபெற்ற நிலையில், இன்று பஞ்சாப் மற்றும் டெல்லி இடையே போட்டி நடைபெற்றது.

இதில் முதலில் பஞ்சாப் அணி டாஸ் வென்றது. இரண்டாவது இன்னிங்சில் பவுலிங் போடுவது கஷ்டம் என்பதால் பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்தது.

அந்த சின்னப் பையனுக்காக கிறிஸ் கெயிலை தூக்குவீங்களா? விளாசிய ரசிகர்கள்!

பஞ்சாப் எப்படி

பஞ்சாப் எப்படி

இதில் முதலில் ஆடிய டெல்லி அணி மொத்தம் 157 ரன்களை எடுத்தது. கடைசி ஓவரில் மட்டும் சுமார் 30 ரன்கள் எடுத்தது. இந்த ஐபிஎல் தொடர் கொரோனாவிற்கு இடையே நடக்கிறது. இதனால் மக்கள் கூட்டம் இன்றி நடக்கிறது. இதனால் ஆன்லைன் வியூவர்ஸ் அதிகம் ஆகியுள்ளார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

அதோடு போட்டி துபாயில் நடக்கிறது. இதனால் மைதானத்திற்கு வீரர்கள், பயிற்சியாளர்கள், பிசிசிஐ நிர்வாகிகள் மட்டுமே வருகிறார்கள். அதிலும் சில அணியின் உரிமையாளர்கள் கூட களத்திற்கு வரவில்லை. ரசிகர்கள் இல்லாமல் மைதானம் வெறிச்சோடி காணப்படுகிறது.

எப்படி நடக்கிறது

எப்படி நடக்கிறது

இதனால் ரசிகர்கள் சத்தம் எழுப்புவது போல ரெக்கார்ட் செய்யப்பட்ட ஆடியோக்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. டிவியில் பார்ப்பவர்களின் அனுபவத்திற்காக இப்படி மாற்றப்பட்டுள்ளது. நிலைமை இப்படி இருக்க இன்று நடக்கும் போட்டியில் எப்படியும் பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா வர மாட்டார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் எல்லோருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பிரீத்தி ஜிந்தா வந்தார். மைதானத்தில் பார்வையாளர்கள் அரங்கிற்கு வருகை தந்து அணி வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் கூச்சலிட்டார். இந்த புகைப்படங்கள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

ஸ்டன் ஆனார்கள்

ஸ்டன் ஆனார்கள்

கொரோனா அச்சம் காரணமாக பிரீத்தி ஜிந்தா வர மாட்டார் என்று பலரும் நினைத்த நிலையில், மைதானத்திற்கு வந்து ஜிந்தா ஷாக் கொடுத்தார். சிவப்பு நிற உடையில் இவரை டீவியில் பார்த்த ரசிகர்கள் ஸ்டன் ஆனார்கள். இந்த கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் இன்றி பலரும் தேடிய முகம் ஜிந்தாவுடையது. சரியாக மைதானத்திற்கு வந்து.. ரசிகர்களின் கனவை நிறைவேற்றி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+