ஒரு நொடியில் பஸ்பம்.. 'லேசர்' ஆயுதத்தை களமிறக்கிய இஸ்ரேல்.. ஈரானை அதிர வைத்த ரகசிய தொழில்நுட்பம்!

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: ஈரான் தாக்குதலில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தன்னைத் தற்காத்துக் கொள்ள, இஸ்ரேல் தனது நவீன ஆயுதங்களை வழங்கியிருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்த 'லேசர்' தொழில்நுட்பத்தை இஸ்ரேல் அமீரகத்திற்கு வழங்கியிருப்பது பாதுகாப்பு ஒத்துழைப்பின் புதிய உச்சமாகக் கருதப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்தது. இதில் முதற்கட்ட தாக்குதலிலேயே ஈரானின் உயர்மட்ட கமேனி உயிரிழந்தார். அதன் பிறகும் சரணடைய மறுத்த ஈரான், தொடர்ந்து அமெரிக்கா இஸ்ரேலுக்கு எதிராகப் போராடி வருகிறது. இந்த போர் சில வாரங்களை வரை நீடித்தது. இப்போது போர் முடிவுக்கு வந்தாலும் கூட இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை.

Israel UAE relation Israel Iran UAE

ஈரான்

இதற்கிடையே மோதல் இருந்தபோது, ஈரான் தனது அண்டை நாடுகள் மீது தொடர்ச்சியாக ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வந்தது. அந்த நாடுகள் நேரடியாகப் போரில் ஈடுபடவில்லை என்ற போதிலும், தொடர்ந்து அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகளை மீது ஈரான் தாக்குதல் நடத்தி வந்தது. இதனால் அமீரகம் ரொம்பவே மோசமாகப் பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே இஸ்ரேல் தனது அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளை அமீரகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. வெறும் ஆயுதங்களை மட்டும் அனுப்பாமல், அவற்றை இயக்க பல டஜன் ராணுவ வீரர்களையும் இஸ்ரேல் அமீரகத்திற்கு அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பஸ்பமாக்கும்

இஸ்ரேல் அனுப்பிய ஆயுதங்களில் முக்கியமானது அயர்ன் பீம் .. இது ஒரு லேசர் பாதுகாப்பு அமைப்பாகும். இது குறுகிய தூர ராக்கெட்டுகள் மற்றும் ட்ரோன்களை லேசர் கதிர்கள் மூலம் ஆவியாக்கி அழிக்கும் திறன் கொண்டது. லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், இப்போது அமீரகத்தைக் காக்க அனுப்பப்பட்டுள்ளது. அதாவது தாக்க வரும் ஏவுகணை அல்லது டிரோன்களை இவை நொடியில் பஸ்பமாக்கும்!

இது ஒரு நவீனக் கண்காணிப்பு அமைப்பாகும். 20 கிலோமீட்டர் தொலைவில் வரும் ஷாஹித் போன்ற ட்ரோன்களை முன்கூட்டியே கண்டறிந்து தற்காத்துக் கொள்ள இது உதவுகிறது. அடுத்து அயர்ன் டோம்.. இஸ்ரேலின் புகழ்பெற்ற வான் பாதுகாப்பு அமைப்பான அயர்ன் டோமும் அமீரகத்தின் பாதுகாப்பு வளையத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் கொடுத்த உளவு தகவல்கள்

மோதல் உச்சத்தில் இருந்தபோது ஈரான் சுமார் 500 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும், 2,000 ட்ரோன்களையும் அமீரகத்தின் மீது ஏவியது. இருப்பினும், இஸ்ரேல் சரியான நேரத்தில் வழங்கிய புலனாய்வுத் தகவல்கள் மற்றும் பாதுகாப்பு தளவாடங்கள் மூலம் பெரும்பாலான ஏவுகணைகள் வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தப்பட்டன குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் ராணுவம் இன்னும் முழுமையாகத் தனது சொந்தப் படைகளில் இணைக்காத, சோதனைக் கட்டத்தில் இருக்கும் ஆயுதங்களைக் கூட அமீரகத்திற்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது..இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஆழமான ராணுவ நம்பிக்கையைக் காட்டுகிறது.

ஏன் இந்த நெருக்கம்?

2020ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான 'அப்ரஹாம் உடன்படிக்கை' (Abraham Accords) தான் இந்த மாற்றத்திற்குக் காரணம். இந்த உடன்படிக்கையை அமீரகம் ஏற்கொண்டதையே ஈரான் விமர்சித்து இருந்தது. இதன் காரணமாகவே போரில் அமீரகத்தையும் ஈரான் குறிவைத்து தாக்கியது. ஏற்கனவே பராக் மற்றும் ஸ்பைடர் போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகளை இஸ்ரேல் அமீரகத்திற்கு வழங்கியிருந்தாலும், தற்போதைய போர்ச் சூழல் இந்த உறவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+