Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துபாயில் ‛கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா’’.. அமீரகத்தில் ஒன்றிணைந்த திமுகவினர்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: திமுகவினர் சார்பில் துபாயில் ‛கலைஞர் நூற்றாண்டு விழா' சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. இதன் நிறைவு விழா துபாயில் நடந்த நிலையில் துபாயில் உள்ள திமுகவினர் ஒன்றிணைந்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் போட்டோவுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதோடு அவர் செய்த சாதனைகளை பட்டியலிட்டு பேசினர்.

திமுகவின் நீண்டகால தலைவராக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது பிறந்தநாளையொட்டி ஓராண்டாக தமிழகத்தில் திமுகவினர் ‛கலைஞர் நூற்றாண்டு விழா' கொண்டாடினர். அதேபோல் துபாயிலும் திமுக சார்பில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் நிறைவு விழா, அமீரக திமுக அமைப்பாளர் எஸ்எஸ் மீரான் தலைமையில் நடந்தது.

dubai dmk karunanidhi centenary celebration

இதில் திமுக மாணவரணித் தலைவர் ராஜிவ் காந்தி, அயலக தமிழர்கள் நல வாரிய உறுப்பினர் சிங்கப்பூர் வெங்கட் ரமணன், திமுக ரைடர்ஸ் ராசா தமிழ் மாறன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

முதலாவதாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இவ்விழாவில் ராஜிவ் காந்தி பேசினார். அப்போது அவர், ‛‛உலகிலேய ஒருவன் என்னைப் பார்த்து , நீ இந்த சாதி என்று என் சாதியைச் சொல்லி நீ இழி பிறவி என்றால் , கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் என்னால் அவனை வெல்லவே முடியாது. இந்த நேரத்தில்தான் சமூகநீதி எனும் ஆயுதத்தை தந்தைப் பெரியார் கொண்டு வந்தார். அதைஅண்ணா இறுகப் பற்றிக் கொண்டார். இருவரும் பேசிச் சென்றார்கள்.

ஆனால் பெரியார், அண்ணா கண்ட கனவை , தன் வாழ்நாள் முழுக்க சமூகநீதி தளத்தில் நின்று செய்து செய்து யாரைப் பார்த்து தாழ்ந்தவன் என சொன்னாய் இதோ பார் நிமிர்ந்து நிற்கிறேன் என நம் தோள்கள் சொல்கிறதென்றால் அந்தப் பெருமை யெல்லாம் கருணாநிதியையே சாரும். ஒரு அரசியல்வாதி தன் மொழிக்காய் தன் வாழ் முழுக்க முழங்கினான் என்றால் , உலகத்திலேயே கலைஞரைத் தவிர , வேறு யாருமே இருக்க முடியாது. ' தமிழ் வெல்லும் ' என சொன்ன அந்த கருணாநிதிக்கு தான் நாம் இன்று நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம்.

dubai dmk karunanidhi centenary celebration

கருணாநிதி இல்லை. இனி , தி.மு.க. இல்லை என்றவர்கள். இன்று கருணாநிதி இட்ட அந்த பாதையில் , அடிபிசகாமல் அதே ஆற்றலுடன் நம் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி நடத்துவதைக் கண்டு எதிர் கட்சியினரே வியந்து பார்க்கின்றனர். கருணாநிதியின் குறும்பு , கிண்டல் , திறமை யாவும் ஒருங்கே பெற்ற உதயநிதி ஸ்டாலின் செயல்பாட்டைக் கண்டவர்கள் இன்று சொல்கிறார்கள் , தி.மு.க.வை இன்னும் 50 வருடத்திற்கு யாரும் அசைத்துக் கூட பார்க்க முடியாது என்கின்றனர். இவையாவும் கருணாநிதி இட்ட அந்த விதைதான்'' என்றார்.

எழுத்தாளர். அ.ராசா தமிழ் மாறன் பேசும் போது, ‛‛சினிமாவைப் போல் கொஞ்சம் பின்னோக்கி நினைத்துப் பாருங்களேன். ஒரு வேளை கலைஞர் இல்லாமல் இருந்திருந்தால் , நம் மீது இந்தி கட்டாயமாக திணிக்கப்பட்டிருக்கும். நம் தாய்த் தமிழ் புறக்கணிக்கப் பட்டிருக்கும். நாம் நம் இன அடையாளத்தைத் தொலைத்திருப்போம் முகவரி தொலைந்தவர்களாய் வாழ்ந்து கொண்டிருப்போம். அதை மீட்டெடுத்து கொடுத்த கருணாநிதிக்கு இன்று நாம் நன்றி கூறுகிறோம்'' என்றார்.

எழுத்தாளரும் , கவிஞருமான சசிகுமார் அவர்கள் பேசும் போது, ‛‛கருணாநிதியின் சொல்லாடல் பற்றியும் கலைஞர் தன் வெற்றி , தோல்வி யாவற்றிலும் கலங்காது நின்று மக்கள் பணியாற்றினார். இன்று கருணாநிதிக்கு நினைவு நாள் என்கின்றனர். தலைவா ! உன்னை மறந்தால் அல்லவா நினைக்க ... நீ ம்போதும் எங்களுடனே இருக்கின்றாயே ... என்று , தன் கவிதை வரிகளால் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார்.

மர்யம் கபீர் பேசும் போது, ‛‛கருணாநிதியிடம் எனக்கு மிகவும் பிடித்த குணம் போராடும் அந்தக் குணம். ஆரிய மாயையை வீழ்த்த வந்த கலைஞர் என்றும் சாகா வரம் பெற்றவர் என்று , தன் அழகு தமிழ் சொல்லாடலால்'' என புகழ்ந்தார். எழுத்தாளர் ஜெஸிலா பானு பேசும் போது, ‛‛கருணாநிதியை பற்றி சொல்வதாக இருந்தால் , இன்னும் இன்னும் நிரம்ப சொல்லலாம் என்றாலும் , எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் அன்றே கருணாநிதி பெண்களுக்கு சொத்துரிமையில் சம பங்கு உண்டு என்று , சட்டம் கொண்டு வந்தார். அந்த ஒன்றுக்காகவே கருணாநிதியை எவ்வளவு புகழ்தாலும் தகும்'' என்றார். டயானா பேசும்போது , ‛‛13 வயதில் நான் எப்படி இருந்தேன் என்றே எனக்குத் தெரியாது. ஆனால் , கருணாநிதி தன் 13 ஆம் வயதிலேயே மக்களுக்காய் களம் கண்டுள்ளார். அவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே எனக்குப் பெருமை‛‛ என்றார்.

ரெங்கராஜன் பேசும்போது, ‛‛கருணாநிதியின் மேடைப்பேச்சில் எப்போதும் இருக்கும் நகைச்சுவை உணர்வை பற்றி (சர்காசத்தை) இரண்டு மேடை சம்பவங்களை குறிப்பிட்டு பேசியிருந்தார் , கன்னிமாரா நூலகத்தின் நூற்றாண்டு விழாவில் பேசும்போது பொன்னாடைகளுக்கு பதிலாக சிறந்த நூல்களை கொடுத்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன் சொல்லும்போது மேடையில் இருந்த நல்லி குப்புசாமி அவர்கள் சொல்லக்கூடும் பொன்னாடைகளும் நூலினால் செய்யப்பட்டது தானே என்று மேடையில் இருந்த அவரையும் , ஹைக்கூ கவிதைகளைப் பற்றிய விழாவில் எத்தனை பேருக்கு இதில் ஹைக்கூ என்றால் என்னவென்றே தெரியாது என்பது எனக்கு தெரியும் அந்த விஷயம் எனக்கு தெரியும் என்பதும் அவர்களுக்கு தெரியும். ஆனால் அனைத்தும் தெரிந்தது போல் தலையை ஆட்டி மிகவும் அழகாக ரசித்துக் கொண்டிருந்ததையும் நான் கவனித்தேன் என்று பார்வையாளர்களையும் மெல்ல கிண்டல் அடிக்கும் நகைச்சுவை உணர்வு கொண்டவர் என்றார்.

விழாவைத் தொகுத்து வழங்கிய ஆசிப் மீரான் பேசுகையில், "கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் கருணாநிதி குறித்துச் சொல்ல நூறு விஷயங்கள் உண்டெனினும் அவரது நகைச்சுவையுணர்வு, நாவன்மை, அரசியல் சாணக்கியத்தனம், தமிழ்ப்பற்று, தமிழ் மீதான படைப்பாளுமை, நொடியில் எதிராளியின்‌ கேள்விகளுக்கு அவர்களே வியக்கும் மறுமொழி தரும் திறமை, நிர்வாகத் திறன், கட்சிக்காரர்களோடு இணக்கம், அரசியலில் நாகரிகம், பெரியாரிடம் கற்றுத் தேர்ந்த சமூகநீதி, அண்ணாவின் வழியில் சிறுபான்மை சமூகத்திடம் காட்டும் பரிவு, தோல்வியிலும் கலங்காத நெஞ்சுரம், இறுதி மூச்சு வரை கடைப்பிடித்த போர்க்குணம் போன்ற ஆளுமை குணங்களாலேயே இன்றளவும் தமிழக மக்கள் மனதில் அரியணையிட்டு அமர்ந்திருக்கிறார்" என்று குறிப்பிட்டார்

நிகழ்ச்சியில் மீரான் மைதீன், ஷா, பத்திரிகை நிருபர் முதுவை ஹிதாயத் பிளாக்துளிப் செந்தில், அபுதாபி ஜாகிர், ரெங்கராஜன்,இன்ஜினியர் பாலா,இர்ஷாத், செந்தில் பிரபு,பி.ஆர்.ஓ.கபீர், பொதக்குடி தாரிக்,சேக் தாவுது, பன்னீர்செல்வம், உதயநிதி பாலா, சுலைமான் , மணிவேல், இஸ்மாயில், பாலா,பருத்தி க்பால், மச்சேந்திரநாதன், வீ.பாண்டியன், அமீன், பாரூக், ரமேஷ், கமல், ஜின்னா, சாகுல் ஹமீது , அப்துல் காதர் உட்பட அமீரக திமுகவை சார்ந்த ஏராளாமானேர்கள் கலந்து கொண்டு கருணாநிதிக்கு மரியாதை செலுத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+