மனைவிக்கு தெரியாமல் வாங்கிய டிக்கெட்டிற்கு அடித்த பரிசு.. கேரள தம்பதிக்கு யோகத்தை பாருங்க!
துபாய்: கேரளாவை சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கு தெரியாமல் அவரது பெயரில் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்துள்ளது. இதை கேட்டதும் அந்த தம்பதியினர் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்துள்ளனர். அமீரகத்தில் வசித்து வரும் அந்த தம்பதிக்கு லாட்டரியில் 35 லட்சம் பரிசாக அடித்து இருக்கிறது.
ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் இந்தியர்கள் பலரும் வேலைக்கு செல்கிறார்கள். கட்டுமான தொழில்கள், டிரைவர்கள் என பல்வேறு பணிகளிலும் இந்தியாவை சேர்ந்த பலரும் அங்கு பணியாற்றுவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பலரும் அபுதாபி, துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக பகுதிகளில் பல ஆண்டுகளாக பணியாற்றுகிறார்கள்.

மனைவிக்கு தெரியாமல் வாங்கினார்
இந்தியாவில் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரிகள் விற்பனை செய்யப்படுவதை போல அபுதாபி உள்ளிட்ட இடங்களில் லாட்டரி டிக்கெட்டுகள் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த டிக்கெட்டுகளை இந்தியர்கள் பலரும் விரும்பி வாங்குவதை பார்க்க முடிகிறது. வாழ்நாளில் நமக்கும் ஒருநாளாவது அதிர்ஷ்டம் அடித்துவிடாதா? என்ற ஆர்வத்தில் பலரும் டிக்கெட்டுகளை வாங்குகிறார்கள்.
இதில் இந்தியாவை சேர்ந்த சிலருக்கு எப்போதாவது அதிர்ஷ்டம் அடித்துவிடுகிறது. சமீபத்தில் சென்னையை சேர்ந்த ஒருவருக்கு ரூ.230 கோடி லாட்டரியில் பரிசாக அடித்தது. மொத்த வாழ்க்கையும் ஒரே நாளில் புரட்டி போடும் அளவுக்கு அதிர்ஷ்டம் அவருக்கு அடித்து இருந்தது. இதேபோல இந்தியாவை சேர்ந்த மேலும் சிலருக்கும் அதிர்ஷ்டம் அடித்து இருப்பதை கேள்வி பட்டு இருப்போம்.
அந்த வகையில்தான் கேரளாவை சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கு தெரியாமல் அவரது பெயரில் லாட்டரி டிக்கெட்டை வாங்கியியிருக்கிறார். இந்த டிக்கெட்டிற்கு பரிசு அடித்துவிட்டதாம். இது குறித்த விவரத்தை பார்க்கலாம்.
தொலைபேசியில் வந்த அழைப்பு
கேரளாவை சேர்ந்தவர் ஸ்ரீஜா நந்தகுமார். இவர் அபுதாபியில் 2002 ஆம் ஆண்டு முதல் வசித்து வருகிறார். இவருக்கு திடீரென லாட்டரியில் பரிசு விழுந்ததை அறிவிக்கும் ரிச்சர்டு என்பவர் தொலைபேசியில் அழைத்து உங்களுக்கு பரிசு விழுந்து இருக்கிறது என்று கூறியிருக்கிறார். நாம் தான் லாட்டரியே வாங்கவில்லையே நமக்கு எப்படி லாட்டரி விழுந்தது என்ற ஒரு நிமிடம் ஜெர்க் ஆன ஸ்ரீஜா, நீங்கள் என்ன கலாய்க்கிறீர்களா? என்று கேட்டுள்ளார்.
ஆனால், உண்மையில் உங்கள் பெயருக்குதான் பரிசு விழுந்து இருக்கிறது என்று ரிச்சர்டு கூறவே, தனது கணவரிடம் ஒருமுறை கேட்டுவிடலாம் என்று கேட்டுள்ளார். அப்போதுதாதன் தனது கணவர் வாராந்திர பரிசு குலுக்கல் டிக்கெட்டை வாங்கியதை சொல்லியிருக்கிறார். இதனால், மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற ஸ்ரீஜா, பத்தாண்டுகளாக லாட்டரி வாங்கிய நிலையில் தற்போதுதான் அதிர்ஷ்டம் அடித்து உள்ளதாக கூறியுள்ளார்.
முதலில் நம்பவே இல்லை
இது குறித்து ஸ்ரீஜா மேலும் கூறியதாவது:- நாங்கள் தொடர்ந்து லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வருகிறோம். இந்த முறை (054565) என்ற எண்ணிற்கு பரிசு அடித்துள்ளது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், டிக்கெட் வாங்கியதை எனது கணவர் என்னிடம் சொல்லவில்லை. பரிசு அடித்ததாக எனக்கு அழைப்பு வந்ததும் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். முதலில் நம்பவே இல்லை.
என்னை யாரோ ஏமாற்றுகிறார்கள் என்றே நான் நினைத்தேன். தற்போது வரை பரிசு அடித்ததை என்னால் நம்ப முடியவில்லை. தற்போது அடித்து இருக்கும் பரிசை வைத்து என்ன செய்வது என்று இன்னும் முடிவு செய்யவில்லை" என்றார்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications