வேலைக்கு போன இடத்தில் அடித்த அதிர்ஷடம்.. யுஏஇ லாட்டரியில் இந்தியருக்கு விழுந்த ரூபாய் 2 கோடி!
துபாய்: ஓவர் நைட்டில் ஓபாமா ஆவது என சொல்வார்களே அதேபோல ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார் கேரளாவை சேர்ந்த நபர். ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்து வரும் அவருக்கு லாட்டரியில் ரூபாய் 2 கோடி பரிசாக கிடைத்துள்ளது. இதனால் அவர் எல்லையில்லா ஆனந்தத்தில் துள்ளி குதித்து வருகிறார்.
ஒரே நாளில் பணக்காரர் ஆக வேண்டும் என்றால் அது லாட்டரியால் தான் சாத்தியம் என்று சொல்ல முடியும். சினிமாவில் ஒரே பாட்டில் பணக்காரர் ஆகுவது போல் லாட்டரியில் பரிசு அடித்தாலும் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகிவிடலாம். அந்த வகையில் தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிந்து வரும் இந்தியர் ஒருவருக்கு 1 மில்லியன் திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ. 2 கோடி) லாட்டரியில் பரிசு விழுந்து ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார். இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

கேரள மாநிலத்தை சேர்ந்த அப்துல்லா சுலைமான் என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார். அக்கவுண்டண்ட்டாக பணியாற்றி வரும் சுலைமானுக்கு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக லாட்டரி டிக்கெட்டுகளை அவர் வாங்கி வந்துள்ளார். ஆனால், இதுவரை பரிசு அடித்தது இல்லை.
இருந்தாலும் சரி என்றாது ஒரு நாள் நமக்கு லாட்டரி அடித்து நாமும் கோடீஸ்வரர் ஆகிவிட மாட்டோமா என எண்ணி லாட்டரிகளை வாங்கி வந்து இருக்கிறார். இந்த நிலையில்தான் அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரி டிக்கெட்டை அண்மையில் வாங்கிய இவருக்கு அதிர்ஷ்ட காற்று வீசியுள்ளது. கனவில் கூட நினைக்காத அளவுக்கு லாட்டரியில் 1 மில்லியன் திர்ஹாம் பரிசுத்தொகை விழுந்துள்ளது.
இந்திய மதிப்பில் சுமார் 2 கோடியாகும். சவுதி அரேபியாவில் கடந்த ஆறு மாதங்களாக பணியாற்றி வரும் சுலைமான் குலுக்கல் எண் 271-ல் வாங்கிய 019362 என்ற டிக்கெட்டிற்கு தான் பரிசு அடித்துள்ளது. ஓவர் நைட்டில் ஓபாமா ஆவது என சொல்வார்களே அதேபோல ஒரே நாளில் கோடீஸ்வர் ஆன மகிழ்சியில் துள்ளி குதித்து வருகிறார் அப்துல்லா சுலைமான்.
தனக்கு பரிசு விழுந்தது குறித்து பேசியுள்ள சுலைமான் கூறியதாவது:- லாட்டரியில் எனக்கு பரிசு அடித்து இருப்பதாக தொலைபேசியில் அழைப்பு வந்ததும் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன். பரிசாக விழுந்த முழு தொகையையும் நான் மட்டுமே பெற இருக்கிறேன். எனக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம் அடிக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. தற்போது விழுந்துள்ள பரிசுத்தொகையை கொண்டு எனது கடன்களை அடைப்பேன். எனது குடும்பத்திற்கு கொடுத்து உதவுவேன்" என்றார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பணியாற்றுகிறார்கள். ஐக்கிய அரபு அமீரகத்தில் லாட்டரிக்கு அனுமதி உள்ள நிலையில், அங்கு பணியாற்றும் இந்திய தொழிலாளர்களும் இந்த லாட்டரிகளை வாங்கி விளையாடுகிறார்கள். இதில் ஒரு சிலருக்கு பரிசுத்தொகை அடிப்பதையும் காண முடிகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்தியர்கள் 4 பேர் மற்றும் ஒரு வங்கதேச நட்டவருக்கு இந்திய மதிப்பில் தலா ரூ.10 லட்சம் பரிசாக கிடைத்தது. இவர்களில் ஒருவர் தொழிலதிபர், மற்றொருவர் கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆவார்












Click it and Unblock the Notifications