கடும் குளிருடன் கூடிய பலத்த காற்று + புழுதி புயல்! குவைத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மாறிய காலநிலை!
குவைத்: அரபு நாடுகளில் வழக்கமாக வெயில்தான் மண்டையை பிளக்கும் என்றும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தற்போது குவைத்தில் கடும் குளிருடன் கூடிய பலத்த காற்று மற்றும் புழுதி புயல் வீசும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே குவைத் வாழ் மக்கள், குறிப்பாக இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
குவைத் முழுவதும் வடமேற்கு திசையில் இருந்து, மணிக்கு 60 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக. மணல் துகள்கள், தூசிகள் சாலையை ஆக்கிரமிக்கும். எனவே வாகன ஓட்டுனர்கள் கவனமாக இருக்க வேண்டும். புழுதி புயல் காரணமாக சாலைகளில் பார்வை திறன் 1,000 மீட்டருக்கும் குறைவாக குறையும் என்றும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.

புழுதி புயல் + வெப்பநிலை சரிவு
பாலைவனப் பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் மணல் சூழ்ந்துள்ளதால், சில இடங்களில் பார்வைத் திறன் சுத்தமாக இல்லாமல் போகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதைப்போல புழுதி புயல் மட்டுமல்லாது, குவைத்தில் வெப்பநிலையும் கடுமையாக குறையும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
உறைபனி
அதாவது வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸுக்கு கீழ் குறைந்து, கடும் குளிரை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பொதுவாக தண்ணீர் 0 டிகிரி செல்சியஸில் பனிக்கட்டியாக மாறும். எனவே, பாலைவன பகுதிகளில் அதிகாலை 1.30 மணி முதல் 8:30 மணி வரை உறைபனி உருவாக வாய்ப்புள்ளது. எனவே கால்நடைகளை வைத்திருப்பவர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
கடல் பகுதிகளிலும் வானிலை மோசமாக இருக்கிறது. குறிப்பாக அரேபியா வளைகுடாவில், அலைகள் 6-7 அடி உயரம் வரை எழ கூடும் என்றும், சிறிய படகுகளில் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை
புழுதி புயல் காரணமாக, சுவாச பிரச்சனைகள் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்க வேண்டும் என சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தவிர்க்க முடியாமல் வெளியே செல்பவர்கள், N95 முக கவசங்களை அணிய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. வாகன ஓட்டிகள் திடீரென பிரேக் போடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், முன் செல்லும் வாகனத்திற்கும் உங்கள் வாகனத்திற்கும் இடையே போதுமான இடைவெளியை பராமரிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
உதவி எண்
அதேபோல பால்கனி அல்லது வீட்டின் வெளிப்பகுதியில் காற்றில் பறக்கக்கூடிய குடைகள், பிளாஸ்டிக் நாற்காலிகள் போன்ற பொருட்கள் இருந்தால் அவற்றை வீட்டிற்குள் வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. புழுதி புயல் காரணமாக ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக 112 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வளிமண்டல அழுத்தத்தில் ஏற்பட்டுள்ள, ஆழ்ந்த மேற்பரப்பு குறைந்த அழுத்த மண்டலம்தான் இந்த கால நிலைக்கு காரணம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications