"அடி பலமோ..." ஷமி வீசிய பவுன்சர்.. அடுத்த நொடி கிடைத்த இடி.. ஹர்திக் பாண்டியா விஸ்வரூபம்
துபாய்: பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வீசிய பவுன்சரால் கோபமடைந்த ஹர்திக் பாண்டியா அதன்பிறகு விசுவரூபம் எடுத்து மும்பை அணியை வெற்றி பெறச் செய்தார்.
அபுதாபியில் நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி நடைபெற்றது.
தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த ரோகித் சர்மா படை வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்த போட்டியை சந்தித்தது.

பவுலிங் சூப்பரப்பு
வழக்கம் போல ரொம்ப சிறப்பாக பந்து வீசினார் பும்ரா. ஒட்டுமொத்த அணியும் பந்துவீச்சில் அற்புதமாக செயல்பட்டதால் பஞ்சாப் அணியால் மும்பைக்கு 136 ரன்களை மட்டும்தான் இலக்காக நிர்ணயிக்க முடிந்தது. இருப்பினும் மும்பை அணி எளிதாக இந்த இலக்கை எட்ட முடியவில்லை. இறுதி கட்ட ஓவர்களில் பந்துக்கும், ரன் தேவைக்குமான இடைவெளி கணிசமாக உயர தொடங்கியது. அப்போது களத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் கிரன் பொலார்டு ஆகிய இருவரும் இணைந்து நின்றனர்.

பாண்ட்யாவுக்கு ஃபார்ம் இல்லை
இருவருமே அதிரடி ஆட்டக்காரர்கள் தான் என்ற போதிலும், ஹர்திக் பாண்டியா அடித்து ஆடக்கூடிய ஃபார்ம் இல்லாமல் இருந்தார். கடந்த போட்டியில் ஃபீல்டிங்கிலும் கோட்டை விட்டு தடுமாறினார். மொத்தத்தில் அவர் பழைய ஹர்திக் பாண்ட்யாவாக இல்லை. இந்த நிலையில்தான் முகமது ஷமி வீசிய ஒரு பந்து இன் சுவிங்கிங் ஆக வந்து பவுன்சராக மாதிரி தோள்பட்டை வரை எழுந்து வந்தது. அதை அடிக்க முடியாமல் கையில் வாங்கிக் கொண்டார் ஹர்த்திக் பாண்டியா. ஆனால் இந்த அடி அவருக்கு உள்ளே இருந்த ஆவேசத்தை தட்டி எழுப்பி விட்டது என்று தான் சொல்லவேண்டும்.

ஷமிக்கு தேங்ஸ்
முகமது ஷமி, ஹர்திக் பாண்டியாவுக்கு வீசிய அடுத்த ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசி வெற்றிக்கனியை பறித்து கொடுத்தார் ஹர்திக் பாண்டியா. 30 பந்துகளில் 40 ரன்கள் விளாசி அவுட்டாகாமல் நின்றார். இதுபற்றி தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில் ஹர்திக் பாண்டியா கூறுகையில், நான் பழையபடி அதிரடியாக ஆடுவதற்கு முகமது ஷமிக்குதான் நன்றி தெரிவிக்க வேண்டும். அவர் வீசிய பந்து என் மீது பட்டு நான் திணறியதும் நான் விழித்துக் கொண்டேன். எதிரே நின்று கொண்டிருந்த பொலார்டிடமும் இதை நான் கூறினேன். ஆனால், அதற்கு முன்பாக ஷாட் அடிப்பதில் நான் கொஞ்சம் சிரமமாக உணர்ந்தேன். இந்த சம்பவத்திற்கு பிறகு சைட் அடிப்பது எனக்கு எளிதாக மாறிவிட்டது.

புதிய வாய்ப்பு
பழைய அனைத்தையும் நான் மறந்துவிட்டேன். ஒவ்வொரு போட்டிகளிலும் புதிதாக களம் இறங்குவது போல நினைத்துக் கொள்கிறேன். ஒவ்வொரு ஆட்டமும் புதிய வாய்ப்பு என்றுதான் நான் நினைக்கிறேன். இவ்வாறு ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
Recommended Video

வெஸ்ட் இண்டீஸ் ஷாட்
தனது பவுன்சர் பந்து வீச்சால் பாண்ட்யா திணறுவது நினைத்துக்கொண்டு ஷமி மீண்டுமொரு பவுன்சரை வீசியதை, ஆப் சைடில் , பாயிண்ட் திசைக்கு மேலே கட் ஷாட் அடித்து பவுண்டரிக்கு விரட்டினார் பாண்ட்யா . அந்த ஷாட் அடித்த பிறகுதான் அவருக்கு நிறைய தன்னம்பிக்கை வந்திருக்கவேண்டும் என்று பார்த்துக்கொண்டு இருந்த ரசிகர்களுக்கே புரிந்துவிட்டது. ஏனென்றால், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் என்றாலே நினைவுக்கு வரக்கூடிய பேக் ஃபுட் அப்பர் கட் ஷாட் அதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications