அய்யய்ய... சஞ்சு சாம்சன் பற்றி தமிழ் கமெண்டரியில் ஸ்ரீகாந்த் சொன்ன "அந்த வார்த்தை.." அதிர்ந்த இணையம்
துபாய்: ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் குறித்து தமிழ் கமெண்டரியில் ஸ்ரீகாந்த் கூறிய ஒரு வார்த்தை சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாகியுள்ளது.
அதேநேரம், ஸ்ரீகாந்த் அந்த வார்த்தையை பயன்படுத்தியதில் தப்பு இல்லை, அது மலையாள பாஷையில் நல்ல வார்த்தைதான் என்று சொல்வோரும் இருக்கிறார்கள்.
அப்படி என்ன நடந்தது, ஏன் ஸ்ரீகாந்த் மீது திடீர் விமர்சனங்கள் எழுந்துள்ளன.. விஷயம் இதுதான்.

ராஜஸ்தான் ராயல்ஸ்
ஐபிஎல் தொடரில் நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் விளையாடின. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அந்த அணி கேப்டன் சஞ்சு சாம்சன் 57 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார்.

சஞ்சு சாம்சன் பேட்டிங்
சஞ்சு சாம்சன் அதிரடியாக இறுதிகட்டத்தில் ஆடியபோது, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் கமெண்டரி செய்து கொண்டிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்தும் உணர்ச்சிவசப்பட்டவராக காணப்பட்டார். அப்போது அவர் இப்போது சஞ்சு சிக்ஸ் அடித்தால் ஸ்கோர் இன்னும் உயரும் என்று கூறிக்கொண்டே இருந்தார்.

சொன்னாரே ஒரு வார்த்தை
ஒரு கட்டத்தில், பவுலர் சஞ்சுவிற்கு பந்து போட ஓடி சென்றபோது, கமெண்டரி செய்த ஸ்ரீகாந்த், எப்படியாவது சிக்ஸ் அடிச்சிடுறா.. சஞ்சு என் குஞ்சு.. என்று பேசினார். இதை வீட்டில் கேட்டுக் கொண்டிருந்த பெற்றோர்கள் குழந்தைகள் காதுகளை மூடினர். சமூக வலைத்தளங்களில் அந்த கமெண்டரி வீடியோவை போட்டு விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர். இதனிடையே அந்த பந்தில் சஞ்சு அவுட்டானார்.

நல்ல வார்த்தையாம்
இது ஒரு பக்கம் என்றால்.. மலையாளத்தில், குஞ்சு என்பது, சின்ன குழந்தை என்ற பொருளில் அழைக்கப்படும் வார்த்தை. சஞ்சு சாம்சன், கேரளாவைச் சேர்ந்தவர். எனவே, ஸ்ரீகாந்த் டைமிங்காக அப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்தினார். நல்ல வார்த்தையை கெட்ட வார்த்தையாக நாம் மாற்றி வைத்துள்ளோம். இதில் ஸ்ரீகாந்த் தவறு எதுவும் இல்லை என்பது சில நெட்டிசன்கள் வாதமாக உள்ளது.

தமிழே வராது
அதேநேரம், ஸ்டார் ஸ்போர்ட்ஸ்சில் தமிழ் கமெண்டரி செய்வோர் குறித்து விமர்சனம் வருவது புதிது கிடையாது. ஹேமங்க் பதானி பேசுவது இப்போதுதான் தமிழ் கற்றுக் கொள்ளும் குழந்தையை போல இருக்கும். அர்னால்டு பேசுவது, கற்ற தமிழை கூட மறக்கடிப்பது போல இருக்கும். புகழ் பெற்ற வினுசக்கரவர்த்தி மீம்ஸ் போல, இவர்கள் பேசும்போது, கேட்பவர்கள் இரு கைகளாலும் இரு காதுகளையும் பொத்திக் கொள்ள வேண்டிய நிலைதான் இருக்கும்.

சடகோபன் ரமேஷ்
சடகோபன் ரமேஷ், முத்து போன்றவர்கள்தான், கிரிக்கெட் தொடர்புள்ள சில பழைய அனுபவங்கள், புள்ளி விவரங்கள் போன்றவற்றை கொடுப்பார்கள். பாலாஜி பேசுவது சிரிப்பை வரவழைத்து டென்ஷனை குறைக்கும். ஆனால் இவரது கமெண்டரிக்கும் சில நேரங்களில் விமர்சனம் வருவது உண்டு.

ஸ்ரீகாந்த் கமெண்டரி
ஸ்ரீகாந்த்தை பொறுத்தளவில் அவரது நீண்ட அனுபவங்களை கமெண்டரி செய்யும்போது சொல்லிக் கொண்டிருந்தாலே இளம் தலைமுறைக்கு பல விஷயங்கள் தெரிய வரும். ஆனால், அவரும் ஜாலியாக பேசுகிறேன் என்று பேசிக்கொண்டேஏஏஏஏஏ இருப்பாரே தவிர புள்ளி விவரங்களும், கிரிக்கெட் சுவாரசிய சம்பவங்களும் அவரிடமிருந்தும் வருவதில்லை. அது மட்டுமல்லாது, எல்லா வீரர்களையும், அவனே.. இவனே.. என்று ஒருமையில் கூப்பிடுவதும் பல ரசிகர்களுக்கு பிடிப்பதில்லை. இந்த நிலையில்தான், சஞ்சு பற்றிய இந்த கமெண்டரியும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications