• search
துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

பாலைவனத்தையே பால் போல் மாற்றிய பனிப்பொழிவு! சவுதி அரேபியாவில் குவியும் மக்கள்! ஈர்க்கும் போட்டோக்கள்

Google Oneindia Tamil News

துபாய்: சகாரா பாலைவனத்தில் மெய்சிலிர்க்க வைக்கும் அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.. அளவுக்கு அதிகமான பனிபொழிவு காரணமாக, அந்த பனிக்கட்டிகள், மணலில் பிரமிக்க வைக்கும் வடிவங்களை உருவாக்கியுள்ளது.. யதேச்சையாக ஏற்பட்ட இந்த வடிவங்கள் அனைத்தும் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.

பொதுவாக, வெப்பமான காலநிலை நிலவும் நாடான சவுதி அரேபியாவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது என்றால் நம்ப முடிகிறதா... நம்பித்தான் ஆக வேண்டும்.. சவுதி அரேபியாவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பாலைவனம் என்றாலே அரேபிய நாடுதான் ஞாபகம் வரும்.. கடுமையான வெப்பம் என்றாலும் சவுதி அரேபியாதான் ஞாபகத்துக்கு வரும்..!

ஒரே குறி இதுதான்.. மதுரைக்கு புதிய திட்டங்களா? இதுவரை திமுக என்ன செய்தது? கேட்கிறார் செல்லூர் ராஜூஒரே குறி இதுதான்.. மதுரைக்கு புதிய திட்டங்களா? இதுவரை திமுக என்ன செய்தது? கேட்கிறார் செல்லூர் ராஜூ

 தபூக் பகுதி

தபூக் பகுதி

ஆனால், இங்குதான் பனிப்பொழிவு ஏற்பட்டு, அந்த காட்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள். தபூக் அருகே அல்-லாட்ஜ் என்ற மலைப்பகுதி உள்ளது.. இங்குதான் இயற்கை எழில் கொள்ளை போகும் அளவுக்கு பனிப்போர்வைகள் காணப்படுகின்றன.. கடந்த வருடம் பிப்ரவரியிலும் இப்படித்தான், இதே மாதிரியான கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது.. அந்த பனியானது 50 வருட சாதனையை முறியடித்திருந்தது.

 வீடியோ

வீடியோ

சோஷியல் மீடியாவில் இந்த பனிப்போர்வை காட்சிகள்தான் வைரலாகி கொண்டிருக்கிறது.. நிறுத்தப்பட்டிருந்த கார்களை முழுவதுமாக பனி மூடிவிட்டது.. அதேபோல ஒரு வீடியோவும் வைரலாகிறது.. அதில், பனிப்பொழிவை பார்த்ததுமே, அங்குள்ள ஆண்கள் பாரம்பரியமான டான்ஸ் ஆடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.. பனியில் இப்படி நடனமாடுவது கடினம் என்றாலும், இந்த டான்ஸ் வீடியோ இணையத்தில் பலரால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

 குவியும் மக்கள்

குவியும் மக்கள்

சவூதி அரேபியர்கள் தபூக்கின் வடமேற்குப் பகுதியில் உள்ள அல்மண்ட் மலை என்று அழைக்கப்படும் ஜபல் அல்-லாஸ் பகுதியில் பனி முற்றிலும் மூடப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.. ஒவ்வொரு ஆண்டும், மக்கள் பனி பொழியும்போது 8464 அடி (2580 மீட்டர்) உயரமுள்ள இந்த இடத்துக்கு வந்து, கூடாரங்களை அமைத்து இந்த குளிரை அனுபவிக்கின்றனர்.. இப்போதும் அப்படித்தான், பனிப்பொழிவும், ஆலங்கட்டி மழையும், குன்றுபோல படிந்து கிடப்பதை காண முடிகிறது..

 நுழைவாயில்

நுழைவாயில்

இதில், ஐன் செஃப்ரா என்ற பாலைவனத்திற்கான நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது... கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,000 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த இடம் அட்லஸ் மலைகளால் சூழப்பட்டுள்ளது... கடந்த 42 ஆண்டுகளில், 1979, 2016, 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில், பனிப்பொழிவு ஏற்பட்ட நிலையில், நகரத்தின் மீது பனிப்பொழிவு இப்போது ஏற்பட்டுள்ளது 5வது முறையாகும்.

 அழகான போட்டோக்கள்

அழகான போட்டோக்கள்

வடமேற்கு அல்ஜீரியாவில் உள்ள சஹாரா பாலைவனத்தில் இந்த வார தொடக்கத்தில் வெப்பநிலை -2 டிகிரியாகக் குறைந்திருந்த நிலையில் இப்படிப்பட்ட பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.. சவூதி அரேபியாவின் போட்டோகிராபர் ஒருவர் ஜனவரி 11 அன்று மதீனா நகரின் தென்மேற்கே உள்ள பத்ர் கவர்னரேட்டில், மக்கள் கூடிநின்று இந்த பனிப்பொழிவை அனுபவித்த காட்சியை போட்டோ எடுத்துள்ளார்.. அந்த போட்டோக்களும் வைரலாகி கொண்டிருக்கின்றன.

 சாத்தியமற்றதா?

சாத்தியமற்றதா?

பாலைவனத்தில் பனிப்பொழிவு என்பது அரிதான விஷயம் என்றாலும், அது சாத்தியமற்றது கிடையாது.. குளிர்ந்த காற்றின் உயர் அழுத்த அமைப்புகள், நிலத்தின் மீது படிந்து பாலைவனங்களுக்குள் ஊடுருவும்போது, அங்கு குறைந்த வெப்பநிலையை அது ஏற்படுத்துகிறது.. இதுவே குளிருக்கு காரணமாகவும் அமைகிறது. அதுமட்டுமல்ல, சஹாரா இன்று மிகவும் வறண்டிருந்தாலும், சுமார் 15,000 ஆண்டுகளில் மீண்டும் பசுமையாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 பனிப்பொழிவு

பனிப்பொழிவு

கடந்த ஆண்டு, கோடை மற்றும் குளிர்கால மாதங்களில் வட ஆப்பிரிக்காவில் ஒட்டகங்கள்கூட பனியால் சூழப்பட்டிருந்தன... கடந்த 2018ல் ஐன் செஃப்ரா என்ற பகுதி 40 ஆண்டுகளுக்கு பிறகு மூன்றாவது முறையாக பனியில் சூழப்பட்டது.. அதற்கு முன்பு கடைசியாக 1979ல் இந்த பகுதி பனிப்பொழிவால் சூழப்பட்டிருந்தது.. அதேபோல, இங்கு வெப்பநிலையானது பொதுவாக ஜனவரியில் 12டிகிரி செல்சியஸ் முதல் ஜூலையில் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.. சவூதி அரேபியாவின் ஆசிர் என்ற கடந்த ஜனவரியில், 50 வருடங்களுக்கு பிறகு முதல் பனிப்பொழிவு ஏற்பட்டது.. இப்படி பனிப்புயல் வீசுவதால், அங்கு குடியிருக்கும் மக்களை பாதுகாப்பாக வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 டீ போட்டு குடிக்கும் மக்கள்

டீ போட்டு குடிக்கும் மக்கள்

எதிர்பாராத விதமாக திடீரென பனி கட்டி கட்டியாக பொழிந்ததுமே, பனிக்கட்டி மணலில் பிரமிக்க வைக்கும் வடிவங்களை உருவாக்கிவிட்டது.. அந்த வடிவங்கள் பார்ப்பதற்கே ஆச்சரியத்தை கிளப்பிவிட்டு வருகின்றன.. அதுமட்டுமல்ல, சகாரா பாலைவனத்திலேயே பெட்ஷீட்டை விரித்து, அங்கேயே சூடாக டீ குடித்து வருவதை பார்க்கவே வியப்பாக இருக்கிறது.. சோஷியல் மீடியாக்கள் முழுவதுமே, பனி மூடிய சஹாரா பாலைவனத்தின் போட்டோக்களும், மற்றும் வீடியோக்களும் வைரலாகி, மக்களை மெய்சிலிர்க்க வைத்து வருகிறது..!

English summary
Saudi arabia deserts blanketed snow ice and hailstorms cover desert, Photos and videos
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X