பெரிய பிளானா?.. பாபர் பேட்டிங்கை நோட்டமிட்ட தோனி.. பக்கத்து கேம்பிற்கு திடீரென விசிட் அடித்தது ஏன்?

Subscribe to Oneindia Tamil

துபாய்: 2021 டி 20 உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வரும் நிலையில் பாகிஸ்தான் அணியின் பயிற்சி ஆட்டங்களை இந்திய அணியின் ஆலோசகர் தோனி நேரில் பார்வையிட்டார்.

2021 டி 20 உலகக் கோப்பை போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தகுதி சுற்று ஆட்டங்கள் இலங்கை, வங்கதேசம், ஓமான் போன்ற நாடுகளுக்கு இடையில் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்திய அணியின் பயிற்சி ஆட்டங்கள் நேற்று முதல்நாள் தொடங்கியது. இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்தியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 188/5 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்தியா 19 ஓவரிலேயே எளிதாக 192/3 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

இந்தியா மென்டர்

இந்தியா மென்டர்

இந்திய அணியின் மென்டராக தற்போது தோனி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆலோசகராக இருந்த ஆட்டத்தின் முதல் போட்டியிலேயே இந்தியா வலிமையான இங்கிலாந்து அணியை வீழ்த்தி உள்ளது. அதிலும் கவனிக்க வேண்டிய விஷயம் கே. எல் ராகுல், இஷான் கிஷன், பண்ட் என்று கீப்பர்கள் சிறப்பாக பேட்டிங் செய்து அணியை வெற்றிபெற வைத்துள்ளனர். அஸ்வின் உள்ளிட்ட ஸ்பின் பவுலர்களும் நன்றாக பவுலிங் செய்தனர்.

தோனி

தோனி

தோனி இந்திய அணியின் மென்டராக கேப்டன் கோலிக்கு வியூகம் வகுக்கும் திட்டங்களில் ஆலோசனை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்திய அணியின் கீப்பர்களுக்கும் தோனி மிக தீவிரமாக பயிற்சி வழங்கிய புகைப்படமும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில்தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் தோனி தற்போது பக்கத்து கேம்ப்களுக்கும் விசிட் அடித்து வருகிறார்.

கேம்ப்

கேம்ப்

இந்திய அணி ஒரு பக்கம் பயிற்சி ஆட்டங்களில் ஆடிக்கொண்டு இருந்த போது இன்னொரு பக்கம் பாகிஸ்தான் மேற்கு இந்திய தீவுகளோடு பயிற்சி ஆட்டத்தில் ஆடிக்கொண்டு இருந்தது. பாகிஸ்தானின் இந்த பயிற்சி ஆட்டத்திற்குத்தான் தோனி விசிட் அடித்தார். பாகிஸ்தானும் மேற்கு இந்திய தீவுகளும் ஆடும் இந்த போட்டியை நீண்ட நேரம் கவனித்தார். பாகிஸ்தான் டி 20 போட்டிகளில் வலுவான அணியாக உள்ளது.

சிறப்பான வீரர்கள்

சிறப்பான வீரர்கள்

ஹசன் அலி, ஹபிஸ், ஷாகின் அப்ரிடி போன்ற சிறப்பான பவுலர்கள் அந்த அணியில் உள்ளனர். அதேபோல் பாபர் அசாம், ரிஸ்வான், ஹபிஸ் போன்ற உலகத்தரமான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பாகிஸ்தான் அணியை இந்தியா உலகக் கோப்பை தொடர்களில் எப்போதுமே வீழ்த்திவிடும். ஆனாலும் இந்தியா பாகிஸ்தானோடு பை லேட்டரல் தொடர்களை ஆடி பல காலம் ஆகிவிட்டது. இரண்டு அணிகளும் நேரடியாக மோதவில்லை.

 பலம் பலவீனம்

பலம் பலவீனம்

இதனால் பாகிஸ்தான் அணியின் பலம் எது, பலவீனம் எது என்று இந்திய அணிக்கு பெரிய அளவில் தெரியாது. இந்த நிலையில்தான் பாகிஸ்தான் அணியின் மேட்சை தோனி நேரில் பார்வையிட்டார். பாகிஸ்தான் வீரர்கள் எப்படி ஆடுகிறார்கள். அவர்களின் பவுலிங், பேட்டிங், வியூகம் எப்படி இருக்கிறது என்று நேரில் பார்வையிட்டார். அதேபோல் பாபர் அசாம் பேட்டிங்கை முழுவதாக தோனி பார்வையிட்டார். பாபர்தான் இந்தியா பாகிஸ்தான் போட்டியில் மிக முக்கியமான வீரராக இருக்க போகிறார்.

Recommended Video

    ICC தொடரில் Pakistan-ஐ India வீழ்த்த இதான் காரணம் - Sehwag கொடுத்த பதில்
    பாபர்

    பாபர்

    இதனால் அவரின் பேட்டிங்கை, திட்டங்களை தோனி நேரில் பார்த்தார். இதன்பின் தோனி இந்திய அணிக்கு பாகிஸ்தான் குறித்த மதிப்பீட்டை, ஆலோசனைகளை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோனி பாகிஸ்தான் மேட்சை நேரில் பார்த்தது இதனால்தான் என்று கருதப்படுகிறது. தோனி முறையான திட்டத்தோடு இதை செய்து வருவதாகவே தெரிகிறது. பாகிஸ்தான் அணியை வீழ்த்த வியூகம் வகுக்கும் வகையில் தோனி இப்படி களமிறங்கி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+