மரணப்படுக்கையில் தாய்.. இந்தியாவிற்கு எதிராக சளைக்காமல் பேட்டை தூக்கிய பாபர்.. உருக்கமான பின்னணி
துபாய்: இந்தியாவிற்கு எதிரான டி 20 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் ஆடிய போது பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸமின் தாயார் மருத்துவமனையில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
2021 டி 20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் சிறப்பாக ஆடி வருகிறது. இந்த தொடரில் இந்தியாவை மட்டுமின்றி அடுத்தடுத்து ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட அணிகளையும் வீழ்த்தி பாகிஸ்தான் கெத்து காட்டிக்கொண்டு இருக்கிறது.
இந்த தொடரில் மிக சிறப்பான, வலிமையான அணியாக பாகிஸ்தான் உருவெடுத்து வருகிறது. பாகிஸ்தான் அணி இதனால் மற்ற அணிகளுக்கு பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவமனையை
இந்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான டி 20 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் ஆடிய போது பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸமின் தாயார் மருத்துவமனையில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பாகிஸ்தான் வெற்றிபெற்ற போட்டியில் பாபரின் பேட்டிங்தான் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது.

தாயார்
இந்த நிலையில் பாபர் அந்த மேட்சில் ஆடிய போது, அவரின் தாயார் வெண்டிலேட்டர் உதவியோடு மருத்துவமனையில் ஐசியூவில் இருந்ததாக பாபரின் அப்பா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாபரின் அப்பா ஆசம் சித்திக் தெரிவித்துள்ள கருத்தில், பாபரின் தாயார் அப்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். அவருக்கு ஆக்சிஜன் அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

போராட்டம்
அவர் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். ஆபரேஷன் செய்யப்பட்டு இருந்தது. ஆனாலும் பாபர் அதை பற்றி யோசிக்காமல் ஆட்டத்தில் கவனம் செலுத்தினார். பாபர் மிகுந்த வேதனையில் இருந்தார். அந்த வேதனையில்தான் அவர் ஆடினார். இந்தியா மேட்ச் மட்டுமின்றி மூன்று போட்டியிலும் பாபர் மிகுந்த வேதனையில்தான் இருந்தார்.

வேதனை
அவர் கடும் மனக்கஷ்டத்திலும் ஆட்டத்தின் மீது கவனம் செலுத்தினார், என்று பாபரின் அப்பா சித்திக் ஆஸம் கூறியுள்ளார். தனது தயார் உயிருக்கு போராடிய போதும் இந்தியாவிற்கு எதிராக பாபர் அபாரமாக ஆடிய விதம் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்துள்ளது. பாபரின் தாயார் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆபரேஷன் முடிந்த நிலையில் அவர் நல்ல உடல்நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications