அறுவை சிகிச்சைக்கு அவசரம், விசா காலாவதியாகி விட்டது.. துபாயில் தவிக்கும் தமிழரை மீட்க நடவடிக்கை தேவை

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் பணிபுரிந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர், தனது உடல் நலப் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, உடனடியாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்குமாறு உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார். இவரது கோரிக்கையை மத்திய அரசும், இந்திய தூதரகமும் உடனடியாக பரிசீலிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Recommended Video

    துபாயில் சிக்கித் தவிக்கும் தமிழர்...அரசின் உதவுக்காக காத்திருக்கிறார்
    Tamilnadu man, living in Dubai, want to return to India

    இதுபற்றி கருப்பசாமி கூறியதாவது: நான் துபாயில் பணிபுரிந்து வந்தேன். கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி என்னை கம்பெனி வேலையிலிருந்து நிறுத்தியது. என்னுடைய விசா அனுமதி காலம் பிப்ரவரி 11ம் தேதி முடிவடைந்தது.

    Tamilnadu man, living in Dubai, want to return to India

    நான் கடந்த மூன்று மாதமாக ரூமிலேயே இருக்கிறேன். அதன்பின்பு தாய்நாடு திரும்ப Indian embassyயில் ஆன்லைன் பதிவு செய்துள்ளேன். கடந்த 30 நாட்களாக நான் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

    Tamilnadu man, living in Dubai, want to return to India

    என்னை இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பு கொள்வார்கள் என்று எதிர்பார்த்தேன். இதுவரையில் என்னை அவர்கள் தொடர்பு கொள்ளவில்லை. எனக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளது. இது கடந்த மூன்று வருடங்களாக உள்ளது. மருத்துவரின் ஆலோசனையின்படி, நான் மார்ச் மாதத்தில் அறுவை சிகிச்சை செய்ய இருந்தேன். ஆனால் தற்போது உள்ள நிலைமையால் நடக்கவில்லை.

    Tamilnadu man, living in Dubai, want to return to India

    இதற்கு வேண்டிய மருந்துகளை, நான் தினந்தோறும் சாப்பிட்டு வருகிறேன். சில சமயங்களில் வயிற்று வலியை உணர்கிறேன். நான் பலமுறை இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டேன். ஆனால் அது பலனளிக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இவரது பாஸ்போர்ட் எண்: J3469574 (Passport number)

    Tamilnadu man, living in Dubai, want to return to India

    சேருமிடம்: திருவனந்தபுரம், மதுரை அல்லது சென்னை (Destination : Thiruvananthapuram or chennai or madurai) எந்த நகராக இருந்தாலும் சரிதான். இவ்வாறு கருப்பசாமி கோரிக்கைவிடுத்துள்ளார். மேலும், தனது, உடல்நலப் பிரச்சினை தொடர்பாக எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளையும், பகிர்ந்துள்ளார்.

    Tamilnadu man, living in Dubai, want to return to India

    கருப்பசாமியின் Email : [email protected] . தொடர்பு எண் : 0561751805, 0525106799

    நடவடிக்கை எடுத்து நாடு திரும்ப உதவுமா, மத்திய அரசு?

    Tamilnadu man, living in Dubai, want to return to India
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+