UAE, கத்தாருக்கு காத்திருக்கும் பெரிய சிக்கல்! ஈரான் போரால் இக்கட்டான நிலை.. அமெரிக்கா உதவுமா!
துபாய்: ஈாரன் போர் இதே வேகத்தில் சென்றால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் வைத்திருக்கும் இடைமறிப்பு தாக்குதல் ஏவுகணைகள் தீர்ந்துவிடும். எனவே, தற்போது அமெரிக்காவிடம் அவசரமாக ஆயுதங்களை இந்த நாடுகள் கேட்டிருக்கின்றன.
அதேபோல, எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதால் வளைகுடா நாடுகள் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொள்ள இருக்கின்றன. எனவே அமெரிக்காவிடம் போரை முடிக்க வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவிடம் கெஞ்சும் வளைகுடா நாடுகள்
அமெரிக்கா ஈரானுக்கு எதிராக எடுக்கும் ராணுவ நடவடிக்கைகளை விரைவில் நிறுத்தும்படி, அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் பேசும்படி ஐக்கிய அரபு அமீரகமும் கத்தாரும் தங்களது நட்பு நாடுகளிடம் ரகசியமாகச் சொல்லி வருகின்றன. இந்தப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிப்பதையும், எரிபொருள் விலை நீண்ட காலத்துக்கு உயர்வதையும் தடுக்கவே அவர்கள் இப்படிச் செய்கிறார்கள். ஒரு பெரிய கூட்டணியை உருவாக்கி, பேச்சுவார்த்தை மூலம் விரைவான தீர்வைக் காண அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
எரிபொருள் விலை
இந்த வாரத்தின் நடுப்பகுதியில் கப்பல் செல்லும் பாதைகள் பாதிக்கப்பட்டால், இயற்கை எரிவாயு விலை இன்னும் அதிகமாக உயரும் என்று கத்தார் மதிப்பிட்டது. இந்த தகவல் ப்ளூம்பெர்க் செய்தி ஊடகம் முன்பே உறுதி செய்திருந்தது. ஈரான் ஆளில்லா விமானத்தால் தாக்குதல் நடத்திய பிறகு, உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதி மையத்தில் கத்தார் உற்பத்தியை நிறுத்தியது. இதனால், ஐரோப்பாவில் எரிவாயு விலை 50%க்கும் மேல் உயர்ந்தது.
4 நாட்களுக்கு மட்டும்தான்
இந்த சூழ்நிலையில், அமீரகமும் கத்தாரும் தங்களது வான் பாதுகாப்பு வசதிகளை ரகசியமாக மேம்படுத்தி வருகின்றன. அமீரகம் நடுத்தர தூர வான் பாதுகாப்பு உதவிகளை எதிர்பார்க்கிறது. கத்தார் ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தடுப்பதற்கான உதவிகளை நாடுகிறது. ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகளை விட பெரிய அச்சுறுத்தல் என்று கூறப்படுகிறது. கத்தாரிடம் இருக்கும் பேட்ரியாட் ஏவுகணைகள், இப்போதுள்ள வேகத்தில் பயன்படுத்தினால், நான்கு நாட்களுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இடைமறிப்பு ஏவுகணைகள்
ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் கத்தார் அமீர் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோர் சமீபத்தில் இங்கிலாந்தின் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸின் இம்மானுவேல் மேக்ரான், ஜெர்மனியின் ஃபிரெட்ரிக் மெர்ஸ் போன்ற பல ஐரோப்பிய தலைவர்களுடன் தொலைபேசியில் பேசியுள்ளனர். இந்த உரையாடலில் எரிபொருள் சப்ளை குறித்து விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் அமெரிக்காவிடமிருந்து இடைமறிப்பு ஏவுகணைகளை இந்த நாடுகள் கோரியுள்ளன.
இதற்கிடையில், ஈரானுடன் ஒரு போர் நடந்தால் அது 4-5 வாரங்கள் நீடிக்கலாம் என்றும், நீண்ட காலப் போருக்கு அமெரிக்கா தயாராக இருக்கிறது என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்பு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications