Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீவிரவாத இயக்கத்தில் சேரும் அமீரக மாணவர்கள்? கல்வி உதவித்தொகையை நிறுத்த UAE திட்டம்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து, சில மாணவர்கள் பிரிட்டனில் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால், இந்த மாணவர்களில் சிலர், அமீரகத்தால் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், எனவே அந்த மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை நிறுத்தி வைப்பதாகவும் அமீரகம் தெரிவித்திருக்கிறது.

பிரிட்டிஷ் கல்வி நிறுவனங்களில், தங்களது மாணவர்கள் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான முஸ்லீம் பிரதர்ஹூட் மூலம் தீவிரமயமாக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக, இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படிக்கும் அமீரக மாணவர்களுக்கான நிதியுதவியை நிறுத்துவதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முடிவு செய்துள்ளது.

UAE UK student

பட்டியலில் இல்லை

இந்த விவகாரத்தால் இங்கிலாந்துக்கும், அமீரகத்துக்கும் இடையிலான உறவுகளில் பல்வேறு சிக்கல்கள் தொடர்கின்றன. தங்களால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு கல்வி நிறுவன பட்டியல்கள் உள்ளன. இந்த லிஸ்ட்டில் இல்லாத நிறுவனங்களின் பட்டங்களை அங்கீகரிக்க மாட்டோம் என்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது. அதன்படி சில பிரிட்டிஷ் கல்வி நிறுவனங்களின் பெயர்கள் இந்த லிஸ்டில் இல்லை.

காரணம் பிரிட்டனை பொறுத்தவரை முஸ்லீம் பிரதர்ஹூட் என்கிற அமைப்புக்கு எந்த தடையும் கிடையாது. எனவே இந்த அமைப்பு வலுவாக உள்ள பிரிட்டிஷ் கல்வி நிறுவனங்களின் பெயரை அமீரம் லிஸ்ட்டிலிருந்து தூக்கியுள்ளது.

வெளியான தகவல்

பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் தங்கள் மாணவர்களுக்கான அரசு நிதியுதவியை கட்டுப்படுத்த அமீரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. முஸ்லீம் பிரதர்ஹூட் அமைப்பை ஐக்கிய அரபு எமிரேட்ஸும், பல இஸ்லாமிய நாடுகளும் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள நிலையில், இங்கிலாந்து அரசு அதை தடை செய்ய மறுத்ததைத் தொடர்ந்தே இந்த முடிவு வந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதமே கல்வி உதவித்தொகைக்கான நிதி நிறுத்தப்பட்டது. இருப்பினும் இது தொடர்பான தகவல்கள் தற்போதுதான் வெளியாகியுள்ன.

பெயர்கள் நீக்கம்

அந்த அறிக்கைகளின்படி, அமீரக உயர்கல்வி அமைச்சகம், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கான திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்டது. இதில் அரசு உதவித்தொகை மற்றும் அதிகாரப்பூர்வ பட்டச் சான்றிதழ்கள் பெற தகுதி வாய்ந்த நிறுவனங்கள் இடம்பெற்றிருந்தன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் நாடுகளின் நிறுவனங்கள் பட்டியலில் இருந்தபோதிலும், உலகின் பல உயர்தர கல்வி நிறுவனங்களுக்கு தாயகமாக இருக்கும் இங்கிலாந்துப் பல்கலைக்கழகங்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து திட்டமிட்டு நீக்கப்பட்டிருந்தன.

முஸ்லீம் பிரதர்ஹூட்

இந்த நீக்கம் வேண்டுமென்றே செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து அதிகாரிகள் இது குறித்து கேள்வி எழுப்பியபோது, "எங்கள் பிள்ளைகள் வளாகத்தில் தீவிரமயமாவதை அமீரகம் விரும்பவில்லை" என்று அமீரக அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு இங்கிலாந்து அதிகாரிகள் கல்விச் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பதிலளித்தனர். இங்கிலாந்து வளாகங்களில் இஸ்லாமிய செல்வாக்கு, குறிப்பாக முஸ்லீம் பிரதர்ஹூட் உடன் தொடர்புடைய ஆபத்து குறித்து அமீரகம் கவலைப்படுகிறது.

ஆதாரம் இல்லை

ஏனெனில், முஸ்லீம் பிரதர்ஹூட்டை ஒரு பயங்கரவாத அமைப்பாக அமீரகம் நீண்டகாலமாக கருதுகிறது, மேலும் ஐரோப்பிய அரசுகளை அதைத் தடை செய்யுமாறு வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், இங்கிலாந்து இந்தக் கோரிக்கைகளை எதிர்த்து வருகிறது. சவுதி அரேபியாவிடம் இருந்து கிடைத்த எச்சரிக்கைகளுக்குப் பிறகு 2015-ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு நடத்திய விரிவான ஆய்வு, அந்த அமைப்பின் நம்பிக்கைகள் பிரிட்டிஷ் விழுமியங்களுக்கு முரணாக இருந்தாலும், இங்கிலாந்துக்கு உள்ளேயோ அல்லது அதற்கு எதிராகவோ பயங்கரவாத நடவடிக்கையில் இந்த அமைப்பு ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை.

அபுதாபி முஸ்லீம் பிரதர்ஹூட்டை தனது சர்வாதிகார ஆட்சியான ஆனால் ஒப்பீட்டளவில் மதச்சார்பற்ற அரசியல் அமைப்புக்கு ஒரு தீவிர அச்சுறுத்தலாக பார்க்கிறது.

அமீரகத்தின் ஆதரவு

முஸ்லீம் பிரதர்ஹூட் உடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்பட்ட டஜன் கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், மேலும் 2013 இல் தலைவர் முகமது மோர்சியை நீக்குவதற்காக எகிப்தின் இராணுவ ஆட்சிக்கு அமீரகம் ஆதரவளித்திருந்தது. லிபியா மற்றும் சூடானில் இந்த குழுவை எதிர்ப்பதாக நம்பப்படும் பிரிவினருக்கும் அமீரகம் ஆதரவளித்துள்ளது. இந்த முஸ்லீம் பிரதர்ஹூட் அமைப்பு, அல்லது இக்வான் அல்-முஸ்லீமுன், ஒரு பள்ளி ஆசிரியர் மற்றும் இஸ்லாமிய அறிஞரான ஹசன் அல்-பன்னா என்பவரால் 1928 இல் எகிப்தின் இஸ்மாயிலியாவில் நிறுவப்பட்ட ஒரு பன்னாட்டு சன்னி இஸ்லாமிய அமைப்பாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+