அமீரகம் முழுக்க திடீரென பரவும் துர்நாற்றம்.. அடுத்தடுத்து மூடப்படும் கடற்கரைகள்! உச்சக்கட்ட குழப்பம்

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஐக்கிய அமீரகத்தில் கடலில் ஏற்பட்ட எண்ணெய் கசிவைத் தொடர்ந்து, ராஸ் அல் கைமா எமிரேட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளும் மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஏற்கெனவே அண்டை எமிரேட்டுகளான உம் அல் குவைன் மற்றும் ஷார்ஜாவில் கடற்கரைகள் மூடப்பட்ட நிலையில், தற்போது இங்கும் கடற்கரை மூடப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கில் உள்ள முக்கியமான நாடு ஐக்கிய அமீரகம். இது ஏழு அமீரகங்கள்- அதாவது துபாய், அபுதாபி, ஷார்ஜா, ராஸ் அல் கைமா, உம் அல் குவைன், அஜ்மான், புஜைரா ஆகியவை இணைந்தே ஐக்கிய அமீரகம் என்று அழைக்கப்படுகிறது.

UAE Oil Spill UAE Middle east

கச்சா எண்ணெய் கசிவு

கடந்த வெள்ளிக்கிழமை கடலில் நின்றிருந்த கப்பல் ஒன்றிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக அமீரகம் தெரிவித்திருந்தது. இந்த கச்சா எண்ணெய் கசிவு ஏற்படக்கூடிய பாதிப்புகளை மதிப்பிடுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வும் தனியாக நடந்து வருகிறது. இதன் காரணமாக ஏற்கனவே உம் அல் குவைன் நகரை சுற்றியுள்ள அனைத்து கடற்கரைகளும் கடலோர பகுதிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

தொழில்நுட்பக் குழுக்கள் ஆய்வுகளை முடித்து, பாதிப்புகளின் தீவிரத்தை உறுதி செய்யும் வரை இந்த கட்டுப்பாடுகள் தொடரும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மீனவர்களும் கடலில் செல்லும்போது கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடற்கரை மூடல்

எமிரேட்டுகளான உம் அல் குவைன் மற்றும் ஷார்ஜாவில் கடற்கரைகள் மூடப்பட்ட நிலையில், தற்போது ராஸ் அல் கைமா கடற்கரையும் மூடப்பட்டுள்ளது. அதேநேரம் எண்ணெய் கசிவால் தான் கடற்கரைகளை மூடியுள்ளோம் என்பதை ராஸ் அல் கைமா உறுதி செய்யவில்லை.

அமீரகத்தின் வடக்கு கடற்கரையில்.. உம் அல் குவைன் எல்லைக்கு அருகே அமைந்துள்ள அல் ஹம்ரியா கடற்கரையையும் ஷார்ஜா அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடியுள்ளனர். இதற்கிடையே ஷார்ஜா, அஜ்மான் மற்றும் உம் அல் குவைன் பகுதிகளில் வசிப்பவர்கள் வழக்கத்திற்கு மாறான நாற்றம் வீசுவதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக வெள்ளிக்கிழமை உம் அல் குவைன் பகுதியில் கடுமையான நாற்றம் நீடித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த நாற்றத்தால் உடல்நலத்துக்கு ஆபத்து இல்லை என்று அமீரக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

போர்

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தொடங்கியதிலிருந்து, வளைகுடா கடல் வழித்தடங்களில் வணிக கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதனால் கடல்சார் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த கவலைகளும் அதிகரித்துள்ளன. இருப்பினும், தற்போது எந்த கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது.. இந்த கசிவுக்கான காரணம் என்ன என்பது குறித்து அமீரகம் எந்தவொரு தகவலையும் அதிகாரப்பூர்வமாக பகிரவில்லை.

ராஸ் அல் கைமா

ராஸ் அல் கைமா பகுதி தனது கடற்கரைகள் மற்றும் சொகுசு விடுதிகளுக்கு பெயர் பெற்றது. அங்குள்ள அல் மர்ஜான் தீவில், அமெரிக்காவின் வின் ரிசார்ட்ஸ் நிறுவனம் சூதாட்ட விடுதியுடன் கூடிய சொகுசு ரிசார்ட்டை உருவாக்கி வருகிறது. இஸ்லாமிய நாடான அமீரகத்தில் சூதாட்டத்திற்கு தடை இருந்தது. இருப்பினும், அமீரகம் தனது சுற்றுலா துறையை டெவலப் செய்து வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாகவே கடந்த 2024ல் இந்த வின் ரிசார்ட்ஸ் நிறுவனத்திற்கு சூதாட்ட அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+