துபாயில் தெறிக்கவிடும் அஜித்.. ரேசிஸ் அவருடன் பயணிக்க விருப்பமா? கட்டணம் இவ்வளவுதான்!
துபாய்: சினிமாவை தாண்டி, கார் பந்தையத்திலும் அஜித் கலக்கி வருகிறார். இந்நிலையில் துபாயில் இவர், தனது அஜித் ரேசிங் அணியின் சார்பில் ரேஸில் பங்கேற்க இருக்கிறார். இந்த ரேஸில், நீங்களும் அஜித் குமாருடன் பயணிக்க விரும்பினால் கட்டணம் செலுத்தி பயணிக்கலாம்.
துபாயில் உள்ள 'துபாய் ஆட்ரோட்ரோம்' மைதானத்தில் ஜன.26ம் தேதி கார் பந்தயம் நடைபெறுகிறது. இந்த பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்கிறார். நீங்களும் அவருடன் ரேஸில் பங்கேற்க வேண்டும் எனில், அதற்கு முன்பதிவு செய்ய வேண்டும்.

கட்டணம் எவ்வளவு?
இதற்காக 3,800 திர்ஹம்ஸ் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில், ரூ.86,500 ஆகும். கட்டணம் செலுத்திய நபர் ரேசிஸ் அஜித் உடன் பங்கேற்கலாம். இந்த பந்தயத்தில் போர்ஷே போன்ற உயர் ரக கார்கள் பயன்படுத்தப்படும். இதில் பங்கேற்பதன் மூலம் அஜித்துடன் உரையாடவும், புகைப்படம் எடுக்கவும் வாய்ப்பு கிடைக்கும். மிக முக்கியமாக, சர்வதேச தரத்தில் ரேஸிங் அனுபவத்தை நேரில் உணர முடியும்.
எப்படி முன்பதிவு செய்வது?
இந்த ரெய்டு, 'Taxi raid' அல்லது 'Raid with AK' என அழைக்கப்படுகிறது. இந்த ரெய்டில் பங்கேற்க ajithkumarracing.com என்கிற வெப்சைட் மூலம் விண்ணப்பிக்கலாம். அல்லது துபாய் ஆட்ரோட்ரோம் அதிகாரப்பூர்வ வெப்சைட்க்கு சென்று விண்ணப்பிக்க முடியும். கூடுதல் தகவல்களுக்கு [email protected] என்கிற மின்னஞ்சலை தொடர்பு கொள்ள வேண்டும்.
உடல் தகுதி
மிக முக்கியமாக இந்த பந்தயத்தில் பங்கேற்க உடல் தகுதி அவசியம். கட்டாயம் 16 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். மட்டுமல்லாது, இதய நோய், முதுகு தண்டு பாதிப்பு இல்லாதவராக இருக்க வேண்டும். ஹெல்மெட் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் ரேஸ் நிர்வாகம் சார்பில் வழங்கப்படும்.
அஜித் குமார் தனது அணியின் கார், ஹெல்மெட் மற்றும் உடைகளில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை பயன்படுத்தி, தமிழக விளையாட்டு துறையை உலக அரங்கில் முன்னெடுத்து செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications