"பரந்து விரியும் உறவு".. முதல்வர் ஸ்டாலினின் துபாய் ட்ரிப்.. அமீரக ஊடகங்கள் சொன்னது என்ன தெரியுமா?
துபாய்: முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணம் மற்றும் சந்திப்புகள் குறித்து அரபு ஊடகங்கள் மற்றும் துபாயில் இருக்கும் மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
முதல்வர் ஸ்டாலின் 4 நாள் பயணமாகி துபாய் சென்று இருக்கிறார். துபாயில் பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டார்.
முதலீட்டாளர் அமைப்பு உறுப்பினர்கள் & முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார்.

ஸ்டாலின் துபாய்
இந்த சந்திப்பையடுத்து 9,700 பேர்களுக்கு வேலைவாய்ப்பளித்திடும் வகையில் 2,600 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் தமிழ்நாட்டை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளன. guidance தமிழ்நாடு மற்றும் நம்பர் 1 தமிழ்நாடு என்ற பெயர்களில் இந்த முதலீடு ஏற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிரபல லூலூ குழுமம் தமிழ்நாட்டில் இரண்டு மால் மற்றும் உணவு பதனிடும் ஒப்பந்தங்களை இன்று மேற்கொள்ள இருக்கிறது. இதன் மூலம் தனியாக 3000 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.

ஸ்டாலின் அமீரகம்
இதன் பின்பாக நேற்று முதல்வர் ஸ்டாலின் அமீரகத்தில் வாழும் தமிழர்களுடன் உரையாடினார். அங்கு பேசிய முதல்வர், அயலக மண்ணில் இருக்கிறேனா அல்லது தமிழ்நாட்டில் இருக்கிறேனா என்று தெரியாத அளவிற்கு அமீரக வாழ் தமிழர்களின் அன்பில் மிதக்கிறேன். 'உங்களில் ஒருவன்' என அடையாளப்படுத்திக் கொள்ளும் என்னை, 'நம்மில் ஒருவர் நம்ம முதல்வர்' என வாரி அணைத்து எனக்கு அரவணைப்பு கொடுத்தனர். உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களுக்கு இந்த அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும், அதற்கு உக்ரைன் சாட்சி என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு துபாய்
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணம் மற்றும் சந்திப்புகள் குறித்து அரபு ஊடகங்கள் மற்றும் துபாயில் இருக்கும் மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இது தொடர்பாக பிரபல அரபு ஊடகமான அல் காலீஜ் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும், வெளியுறவுத்துறை அமைச்சர் தானி பின் அகமதுவும் மேற்கொண்ட சந்திப்பு மிக முக்கியமானது.

தமிழ்நாடு முதலீடு
பொருளாதாரம், முதலீடு ரீதியாக முக்கியாமானது. பல்வேறு புதிய முதலீடுகளை செய்வது பற்றியும், தமிழ்நாட்டில் இருந்து இறக்குமதியை மேற்கொள்வது பற்றியும் இதில் ஆலோசனை செய்யப்பட்டது. இந்தியா அமீரகம் இடையிலான வர்த்தக உறவை விரிவுபடுத்துவதற்கான சந்திப்பாக இது அமைந்துள்ளது. இரண்டு நாட்டு உறவை மேம்படுத்துவதற்கான பறந்த வாய்ப்பை இந்த சந்திப்பு ஏற்படுத்தி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

பயணம் முக்கியம்
முதல்வர் ஸ்டாலினின் இந்த பயணம் முக்கியமானது என்று அந்த ஊடகம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. அதேபோல் மீடியா ஒன் மற்றும் அமீரகத்தில் இயங்கும் மலையாள ஊடகங்களும் முதல்வர் ஸ்டானின் இந்த பயணத்தை பாராட்டி உள்ளது. இந்த பயணம் மிக முக்கியமானது. தமிழ்நாட்டின் உணவு ஏற்றுமதி, விவசாய பொருட்கள் ஏற்றுமதி பற்றி இதில் ஆலோசனை செய்யப்பட்டது. இந்த சந்திப்பு புதிய வர்த்தக கதவுகளை திறந்துள்ளது என்று தெரிவித்துள்ளன.

அமீரக ஊடகங்கள்
லூலூ க்ரூப் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைவர் யூசுப் அலி முஸலிமான் வீட்டில் அப்துல் காதருடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று நேரில் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பை தொடர்ந்து இவ்வளவு பெரிய முதலீடு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. லூலூ க்ரூப் இண்டர்நேஷனலின் யூசுப் அலி கேரளாவை சேர்ந்தவர். இதனால் மலையாள ஊடகங்களில் அது தொடர்பான செய்திகள் அதிக முக்கியத்துவம் பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications