துபாயில் வீட்டை ஷேர் செய்தால் கோடி கணக்கில் அபராதம்.. இந்தியர்களே இந்த ரூல்ஸ் தெரிஞ்சுகோங்க!

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் பலரும் செலவை குறைக்க ஒரே வீட்டில் ஷேர் செய்து தங்குவது இயல்பான ஒன்றுதான். ஆனால், இதுபோல ஷேரிங்கில் இருக்கும் போது சில முக்கியமான விதிமுறைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அதுவே பெரிய பிரச்சனையாக மாறிவிடும். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்..

வேலைக்காக அமீரகம் செல்லும் இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் இருந்தே அதிகபட்ச இளைஞர்கள் அமீரகம் செல்கிறார்கள். இதனால் அங்கிருக்கும் முக்கியமான சட்டங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இல்லையென்றால் சிறிய தவறுக்கும் பெரிய தண்டனையை நாம் பெறும் சூழல் உருவாகும்!

Dubai Middle east India

வாடகை வீடு

அதாவது வாடகை வீடுகளை அனுமதியின்றி மற்றவர்களுக்கு உள்வாடகைக்கு விடுவது சட்டவிரோதம். முறையான அனுமதி இல்லாமல் ஒருவருக்கு உள்வாடகைக்கு விட்டாலும் கூட இது சட்டவிரோதமாகும். இது தொடர்பான ரூல்ஸை கடுமையாக்கும் வகையில் துபாய் அரசு புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்தச் சட்டம் வாடகை, உள்வாடகை மற்றும் ஷேரிங் என அனைத்திற்கும் வேறுபாடுகளை தெளிவாக வரையறுக்கிறது.

இந்த புதிய சட்டத்தின் கீழ் துபாயில் ரூம்மேட்களுடன் ஒரே வீட்டில் வசிக்க எந்தவொரு தடையும் இல்லை. ஆனால், முறையான அனுமதியில்லாத உள்வாடகைக்கு விடுவது தவறு. மேலும், ஒரே ரூமில் பலரை சட்டவிரோதமாக தங்க வைப்பது அல்லது ஒரு வீட்டை ரூம் கணக்கில் பிரித்து பிரித்து வாடகைக்கு விடுவது போன்றவை கடுமையாக கண்காணிக்கப்படும்.

அனுமதி தேவை

துபாய் வாடகை விதிகளின்படி, ஒருவர் வாடகைக்கு எடுத்துள்ள வீட்டை அல்லது அதன் ஒரு பகுதியை மற்றொருவருக்கு வாடகைக்கு விட வேண்டுமானால், வீட்டின் உரிமையாளரின் அனுமதி கட்டாயம் பெற வேண்டும். முதலில் வாடைக்கு எடுக்கும்போதே இந்த ஒப்பந்தம் போட்டிருந்தால் பிரச்சனை இல்லை. அப்படி எந்தவொரு ஒப்பந்தமும் போடவில்லை என்றால் நிச்சயம் உரிமையாளரின் அனுமதி தேவை! அதுவும் வெறும் வாய் வார்த்தையாக இல்லாமல்.. எழுத்துப்பூர்வ அனுமதியை நிச்சயம் பெற வேண்டும்.

உதாரணமாக ஒருவர் வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் ஒரு ரூமை மட்டும் மற்றொருவருக்கு வாடகைக்கு விட விரும்பினால், அது சப்-லீஸ் ஆக கருதப்படும். இதற்கு உரிமையாளரின் அனுமதி இல்லையெனில், வாடகை ஒப்பந்தத்தை மீறியதாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

தெளிவான விதிகள்

குடும்பத்தினருடன் சேர்ந்து வசிப்பது, முறையான ஒப்பந்தப்படி ஷேர் செய்து தங்குவது ஆகியவைக்கு எந்தவொரு தடையும் இல்லை. அதேநேரம் தனித்தனியாக பெட்களை அல்லது ரூம்களை வாடகைக்கு விடுவது, அனுமதியின்றி கூடுதல் அறைகள் உருவாக்குவது, அதிகளவில் நபர்களை தங்க வைப்பது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.

ஷேரிங் ஹவுசிங் ஒரு கட்டிடத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் துபாய் மாநகராட்சியிடம் அதிகாரப்பூர்வ அனுமதி கட்டாயம் பெற வேண்டும். கட்டிடம் பாதுகாப்பு விதிமுறைகள், இடவசதி உள்ளிட்ட பல நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே இந்த அனுமதி கிடைக்கும். மேலும், இந்த அனுமதி ஒரு ஆண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன் பிறகு உரிமம் காலாவதியாகும் 30 நாட்களுக்கு முன்பே மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

அபராதம்

இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 5 லட்சம் திர்ஹாம், அதாவது சுமார் ரூ.1.15 கோடி வரை அபராதம் விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் விதிமுறைகளை மீறினால் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மிக பெரிய அபராதம் விதிக்கப்படுவதாலும் சிறைக்கும் வாய்ப்பு இருப்பதாலும் இந்தியர்கள் இந்த ரூல்ஸை முறையாக தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+