காசு வேறு எங்கிருந்து வரும்? ஓய்விற்கு பின் ஓப்பனாக பேசிய ரவி சாஸ்திரி.. ஐபிஎல் பற்றி பரபர பேட்டி!
துபாய்: 2021 உலகக் கோப்பை டி 20 தொடரில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றுள்ளது. முதல்முறை ஆஸ்திரேலியா இதில் கோப்பையை வென்றுள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி செமி பைனல் கூட செல்லாமல் தோல்வி அடைந்துள்ளது.
Recommended Video
2021 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு ஐபிஎல் போட்டிகள்தான் காரணம் என்று விமர்சனம் வைக்கப்பட்டது. ஐபிஎல் போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து ஆடியதால் அவர்கள் சோர்வு அடைந்துவிட்டதாகவும், உலகக் கோப்பை போட்டிகளில் அவர்களால் சரியாக ஆட முடியவில்லை என்று விமர்சனம் வைக்கப்பட்டது. பும்ரா போன்ற வீரர்கள் கூட பயோ பபுள் குறித்து பேசி இருந்தார்.

பும்ரா
பும்ரா அளித்த பேட்டியில், நாங்கள் 6 மாதமாக வெளியே இருக்கிறோம். ஒரு பபுள் விட்டு இன்னொரு பபுளுக்கு சென்று கொண்டு இருக்கிறோம். ஆனால் நீண்ட காலம் பபுளில் இருப்பதும், வீட்டை விட்டு தொடர்ந்து வெளியே இருப்பதும் ஒரு வகையில் அணி வீரர்களின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். மன ரீதியான சோர்வை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் பிசிசிஐ எங்களை நன்றாக பார்த்துக்கொள்வதற்காக அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது, என்று பயோ பபுள் குறித்தும், தொடர்ந்து கிரிக்கெட் ஆடுவது குறித்தும் பேசி இருந்தார்.

சாஸ்திரி
இதையடுத்து ஐபிஎல் போட்டிகளை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இணையத்தில் பலர் ஐபிஎல் போட்டிகளை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில்தான் ஐபிஎல் போட்டிகள் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற பின் ரவி சாஸ்திரி பேட்டி அளித்துள்ளார்.

ஐபிஎல்
அவர் அளித்துள்ள பேட்டியில், ஐபிஎல் என்பது மிக மிக முக்கியமானது. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நான் கவலைப்படவில்லை. ஐபிஎல் என்பது மற்ற பார்மெட்கள் பெரிதாக வளர காரணமாக இருந்தது. பிசிசிஐக்கு வருமானம் கொடுத்தது. இதில் இருந்து வந்த பணம் மற்ற பார்மெட்களில் முதலீடு செய்ய பிசிசிஐக்கு உதவி செய்தது.

நிதி
அதேபோல் முதல் தர போட்டிகள் தொடங்கி அனைத்திலும் அதிக நிதி முதலீடு செய்ய ஐபிஎல்தான் உறுதுணையாக இருந்தது. பல வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது. இளம் வீரர்களுக்கு அடையாளம் கொடுத்தது. பலர் பார்மிற்கு திரும்ப இதுவே காரணமாக இருந்தது.

பயோ பபுள்
பயோ பபுள் விதிகளில் மாற்றம் வேண்டுமானால் கொண்டு வரலாம். இதனால் வீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து 24 மாதமாக வீரர்கள் பயோ பபுளில் இருப்பது மிகவும் கடினம். அவர்களுக்கு பிரேக் தேவை. ஆனால் ஐபிஎல் போட்டிகளும் முக்கியமானது என்பதை உணர வேண்டும் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications