ஈரோடு ஈர்க்குதே.. திடீர்னு ஒரு ஸ்வீட் நியூஸ்.. நாலே மாசம்தான்.. பூரிப்பில் ஈரோட்டு மக்கள்.. அரசு மாஸ்
ஈரோடு: ஈரோடு மாவட்டத்துக்கு ஒரு மகிழ்ச்சி செய்து வந்துள்ளது.. இன்னும் நாலே மாசத்தில் பெருத்த பலனை ஈரோடு மக்கள் அடைய போவதாகவும் சொல்கிறார்கள்.
ஈரோடு மாநகர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 60 வருடங்களுக்கு முன்பு, ஈரோட்டின் மையப்பகுதியில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் ஈரோடு பஸ் ஸ்டாண்டு அமைக்கப்பட்டது.

விரிசல்கள்: அதேபோல, சேலம், மதுரைக்கு என்று தனியாக ரேக்குகளும், மாநகர பஸ்கள் வந்து செல்வதற்காக தனியாக ரேக்குகளும், கோயம்புத்தூர், சென்னை பஸ்கள் நிற்பதற்காக தனியாக ரேக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இவைகளை சுற்றி ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், நாளடைவில், சில ரேக்கு பகுதிகளில் விரிசல் வந்துவிட்டது. கட்டிடங்களும் வலிமையிழந்து காணப்பட்டன.
இதற்கு பிறகுதான், ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் ரூ.43 கோடி மதிப்பில் ஈரோடு பஸ் ஸ்டாண்டு விரிவுபடுத்தும் பணி ஆரம்பமானது.. இப்படிப்பட்ட சூழலில், இதனால் ஈரோடு மத்திய பேருந்து நிலைய பகுதிகளில், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமானது.. குறிப்பாக, மேட்டூர் சாலை, சத்தி ரோடு சாலை பகுதிகளிலும், வாகனங்கள் வரிசைகட்டி நீண்ட தூரத்துக்கு நிற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதிரடி அறிவிப்பு: எனவேதான், மதுரை, திருநெல்வேல், கன்னியாகுமரி குமரி போன்ற தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள், சோலார் பகுதிக்கு வந்து செல்லும் வகையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஈரோடு மாவட்டத்துக்கு 2 புதிய பஸ் ஸ்டாண்டுகள் அமைக்கப்படும் என்று இதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2022-ம் ஆண்டு அறிவித்திருந்தார்.
அத்துடன், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம், ஈரோடுக்கு வருகை தந்திருந்த முதல்வர், சோலார் பகுதியில் நவீன பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல்லையும் நாட்டிவிட்டு சென்றார். இதைத்தொடர்ந்து 63.50 கோடி ரூபாய் மதிப்பில், சுமார் 24 ஏக்கர் பரப்பளவில் பஸ் ஸ்டாண்டு கட்டும் பணி துரிதமாக ஆரம்பித்தது.
நேரடி ஆய்வுகள்: இந்த பேருந்து நிலைய பணிகள் குறித்து, நேரடி ஆய்வுகளை அமைச்சர் முத்துசாமி அடிக்கடி மேற்கொண்டிருந்தார். அதிகாரிகளிடமும் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுவாறே இருந்து வருகிறார். முற்றிலும் நவீன மயமாக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த பஸ் ஸ்டாண்டாக இது அமைய போவதாகவும், சுமார் 75 பஸ்கள் நிற்கக் கூடிய அளவு வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் கூறியிருக்கிறார்.

இதைத்தவிர, பயணிகள் காத்திருப்பு அறையில் இருந்து கண்ணாடி சுற்றுச்சுவர் மூலம், பஸ்கள் உள்ளே வந்து செல்வதை காண முடியும் என்றும், மாற்றுத்திறனாளிகள் வந்து செல்லும் பாதைகள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் பயணிகள் காத்திருப்பு அறைக்கு மேல்தளத்தில் டிரைவர், கண்டக்டர்களுக்கான கழிவறைகள், பயணிகளுக்கான கழிவறைகள் மற்றும் வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
டூவீலர்: இந்த பணிகள் அனைத்துமே நடந்து வரும்நிலையில், இந்த நவீன பேருந்து நிலையத்தில் 134 கடைகள் இடம் பெற போவதாக சொல்கிறார்கள்.. இதைத்தவிர, டூவீலர் பார்க்கிங் வசதி, ரிசர்வேஷன் பதிவு செய்யும் இடம், ஹோட்டல்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளுடனும் இந்த பஸ் ஸ்டாண்டு ரெடியாகி கொண்டிருக்கிறது.
ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, இந்த பேருந்து நிலைய பணிகள் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார்.. அதில், "சோலார் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி வேகமாக நடைபெற்று வருவதாகவும், கட்டுமான பணிகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும்" என்றும் உறுதி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி: இந்த புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டுவிட்டால், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, கரூர், கன்னியாகுமரி பகுதிகளை சேர்ந்த பஸ்கள் இங்கே நிறுத்தப்படும் என தெரிகிறது. இதனால், ஈரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் இனி குறையும் என்பதுடன், ஈரோடு மாவட்டத்துக்கே இந்த பஸ் ஸ்டாண்டு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications