கொடுமுடி காசிபாளையம் காவிரியாற்றில் மூழ்கி 3 பேர் பலி.. ஆழமான பகுதியில் சிக்கியதால் நடந்த துயரம்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் காவிரியாற்றில் மூழ்கிய 3 பேர் பலியாகிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி காசிபாளையத்தில் காவிரியாறு பாய்கிறது. பொதுவாகவே காவிரியில் நிறைய தண்ணீர் ஆர்ப்பரிக்கும். இந்த முறை தென் தமிழகத்தில் மழையின் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி காவிரி, வைகை, பவானி உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீரின் வேகம் அதிகமாகவே உள்ளன.

இந்த நிலையில் இன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவதை அடுத்து ஆற்றங்கரைகளில் மக்கள் பூஜைகளை செய்து புது திருமாங்கல்யத்தை மாற்றுகிறார்கள். மேலும் விளைச்சல் நன்றாக இருக்க வேண்டும் என காவிரி அன்னையை வழிபட்டு பலர் பயிர் வைக்கும் பணிகளையும் செய்தனர்.
இந்த நிலையில் காசிபாளையத்தில் கொந்தாளம் புதூர் மதுரை வீரன் கோயிலுக்கு தீர்த்தம் எடுக்கச் சென்ற 3 பேர் நீரில் மூழ்கி பலியாகிவிட்டனர். காவிரி ஆற்றில் மூழ்கி கொந்தாளம்புதூரை சேர்ந்த ஜெகதீஷ் (18), சவுத்ரி (14), குப்புராஜ் (17) ஆகியோர் பலியாகிவிட்டனர். இது குறித்து கொடுமுடி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையில் காவிரியாற்றின் வேகம் அதிகரித்தது. இதில் அந்த மூவரும் இழுத்துக் கொண்டு ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கி இறந்தனர். இந்த சம்பவத்தில் சவுத்ரியின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மற்ற இருவரது உடலை கொடுமுடி தீயணைப்பு துறையினர் தேடி வருகிறார்கள். காசிபாளையத்தில் மலேசிய முருகனை போல் பெரிய முருகன் சன்னதியும் உள்ளது. இங்கு கந்த சஷ்டி விழா விமரிசையாக நடைபெறும்.
-
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications