ஈரோடு கிழக்கில் வஞ்சனையில்லாமல் வாக்களித்த மக்கள்..இரவு வரை வரிசையில் நிற்க காரணம் இதுதானாம்!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் 75 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 2021ஆம் சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை விட 9 சதவிகிதம் அதிகமாகும்.
ஈரோடு: வீசிய அனல் காற்றுக்கு நடுவே அமைதியாக நடந்து முடிந்துள்ளது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல். கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 66.56 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில் இடைத்தேர்தலில் 75 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. பரிசுகளை அள்ளிக்கொடுத்த அரசியல் கட்சியினருக்கு கடும் வெயிலையும் கருத்தில் கொள்ளாமல் இரவு வரை காத்திருந்து வாக்களித்துள்ளனர்.
ஈரோடு மாநகராட்சியின் 33 வார்டுகளை உள்ளடங்கிய ஈரோடு கிழக்கு தொகுதியில், கடந்த 2011ஆம் ஆண்டு 77.60 சதவீதமும், 2016-ம் ஆண்டு 69.57 சதவீதமும், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 66.56 சதவீத வாக்குகளும் பதிவாகின.
கடந்த ஜனவரி மாதம் 4ஆம் தேதி உடல்நலக்குறைவால் திருமகன் ஈவெரா காலமானதையடுத்து, ஈரோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு உள்பட 77 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மொத்தம் 75 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன. 82,138 ஆண்கள், 88,037 பெண்கள், 17 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்திருந்தனர். கடந்த தேர்தலைவிட 9 சதவிகித வாக்குகள் கூடுதலாக பதிவாகி இருந்தது.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் கடந்த 1984ஆம் ஆண்டு அதிமுகவும், 89-ம் ஆண்டு திமுகவும், 1991-ம் ஆண்டு அதிமுகவும், 1996-ம் ஆண்டு திமுகவும், 2001-ம் ஆண்டு அதிமுகவும், 2006-ம் ஆண்டு திமுகவும், 2011-ம் ஆண்டு தேமுதிகவும் வென்ற தொகுதி.
இந்நிலையில், 2016-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தேமுதிக எம்.எல்.ஏ. வி.சி.சந்திரகுமார், அக்கட்சியில் இருந்து விலகி, மக்கள் தேமுதிக என்ற பெயரில், திமுக ஆதரவுடன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வெற்றி பெற்றார்.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளராக போட்டியிட்ட திருமகன் ஈவேரா 67,300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் யுவராஜா பெற்ற வாக்குகள் 58,396 திருமகன் ஈவேரா 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக சட்டசபைக்குள் நுழைந்தார். தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் கோமதி 11,629 வாக்குகள் பெற்றார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் ராஜ்குமார் 10,005 வாக்குகள் பெற்றார். நோட்டாவிற்கு 1546 வாக்குகள் கிடைத்தன.
திருமகன் ஈவேராவின் மறைவை அடுத்து ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை சந்தித்தது. அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களை கவனித்ததில் கடும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் இரவு வரை வரிசையில் காத்திருந்து வாக்களித்துள்ளனர். 75 சதவிகித வாக்குகள் பதிவானதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
அதற்கான காரணமாக கூறப்படுவது டோக்கன் சிஸ்டம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆளும்கட்சி, எதிர்கட்சி என இரண்டு கட்சியினருமே வாக்களிக்க டோக்கன் கொடுத்ததாகவும் தேர்தலில் தங்கள் கட்சி வெற்றி பெற்ற பின், இந்த டோக்கனைக் கொடுத்து பணம் மற்றும் பரிசுப்பொருள் பெற்றுக் கொள்ளலாம் என வாக்காளர்களுக்கு உறுதி
அளிக்கப்பட்டுள்ளதாம். இதன் காரணமாகவே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து விட்டு முகவர்களிடம் வாக்களித்ததை உறுதி செய்துள்ளனர். வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு வரவழைக்க அரசியல் கட்சியினர் உபயோகித்த புது யுக்தி பலனளித்துள்ளதாக தொகுதியில் பேசிக்கொண்டனர். இதன் காரணமாகவே கடந்த தேர்தலை விட இடைத்தேர்தலில் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் அடங்கிய நகரம் சார்ந்த தொகுதி. நெசவாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள் பரவலாக உள்ளனர். கொங்கு வேளாளக் கவுண்டர், முதலியார் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். முஸ்லீம் மற்றும் வட மாநிலங்களை சேர்ந்த கணிசமான வாக்காளர்கள் இத்தொகுதியில் உள்ளனர். அனைவரையுமே அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு கவனித்தனர். துணி துவைத்துக்கொடுத்து, பாத்திரம் துலக்கி கொடுத்து கூட வாக்கு சேகரித்தனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் 238 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்களை வேட்பாளர்களின் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் அதிகாரிகள் சீல் வைத்தனர். பின்னர் ஜி.பி.ஆர்.எஸ். பொருத்தப்பட்ட சரக்கு வாகனங்கள் மூலமாக வாக்கு எண்ணும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி பொறியியல் கல்லூரிக்கு மின்னணு எந்திரங்களை அனுப்பி வைத்தனர்.
சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்பட்டன. இறுதியாக வாக்குப்பதிவு முடிவடைந்த ராஜாஜிபுரம் 153-ம் எண் வாக்குச்சாவடி வாக்குப்பதிவு எந்திரங்கள் மட்டும் சுமார் 11.30 மணிக்கு மேல் வாக்கு எண்ணும் மையத்தை வந்தடைந்தன. வாக்கு எண்ணும் மையத்துக்கு மின்னணு எந்திரங்கள் அனைத்தும் சென்றடைந்ததும் அறைகளில் வைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார், பொதுப் பார்வையாளர் ராஜகுமார் யாதவ், செலவின பார்வையாளர் கவுதம் ஆகியோர் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது.
மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அன்றையதினமே யார் வெற்றி பெற்று ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக சட்டசபைக்குள் நுழையப்போகிறார் என்று தெரிந்து விடும். அள்ளிக்கொடுத்த அரசியல் கட்சியினருக்கு வாக்காளர்களும் வஞ்சனையில்லாமல் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications