"குமட்டும் கண்றாவி".. பெயிண்டருடன் தாய் - மகள்.. குறுக்கே வந்த மாலதி.. ஈரக்குலையை நடுங்க வைத்த ஈரோடு
மகளின் கருமுட்டையை விற்று பணம் சம்பாதித்த தாயை போலீசார் கைது செய்தனர்
ஈரோடு: பெற்ற மகளை பாலியல் தொழிலில் தள்ளிய, பணத்தாசை அம்மாக்களை பார்த்திருக்கிறோம்.. ஆனால், ஈரோட்டில் நடந்த சம்பவம், ஈரக்குலையையே நடுங்க வைத்து வருகிறது.
ஈரோட்டில் வசித்து வருகிறார் அந்த பெண்.. 38 வயதாகிறது.. பூர்வீகம் சேலம் என்கிறார்கள்.. கணவருடன் சண்டை.. அதனால் தனியாக வீடு எடுத்து மகளுடன் வசித்து வருகிறார்..
Recommended Video
மகளுக்கு இப்போது 16 வயதாகிறது.. ஆனால், இந்த பெண்ணுக்கு 3 வயது இருக்கும்போதே, கணவரை விட்டு தனியாக வந்துவிட்டார்.

பெயிண்டர்
இந்நிலையில், அதே ஈரோட்டை சேர்ந்த அந்த இளம்தாய்க்கு கள்ள உறவு ஏற்பட்டுள்ளது.. இப்போது அந்த பெயிண்டருக்கு 40 வயதாகிறது.. இந்த ஜோடி பெரும்பாலும் ஒன்றாகவே குடித்தனம் நடத்தி வந்திருக்கிறார் என தெரிகிறது.. வருமானத்துக்காக, கருமுட்டையை விற்கும் வேலைக்கு போயுள்ளார் இளம்தாய்.. குடும்பத்துக்காகவும், மகளுக்காகவும் இந்த வேலையை செய்கிறார் என்று நினைத்தால் அது தவறு.. தனியார் மருத்துவமனைகளில் தன்னுடைய கருமுட்டையை விற்பனை செய்து வந்துள்ளார்..

ஜாலி கள்ளக்காதலன்
அதன் மூலம் இவருக்கு நிறைய பணம் கிடைத்துள்ளது.. அந்த பணத்தில் கள்ளக்காதலனுடன் ஜாலியாக வாழ்ந்து வந்துள்ளார். ஒருகட்டத்தில், வயதுக்கு வந்த தன்னுடைய மகளையும் கருமுட்டை விற்பனையில் ஈடுபடுத்த திட்டமிட்டார்.- அதுவும் தன்னுடைய கள்ளக்காதலனுடன் சேர்ந்து இப்படி ஒரு ஐடியாவை போட்டார்.. அதற்காக, கள்ளக்காதலனை வைத்து, சொந்த மகளை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ய வைத்துள்ளார்..

பெயிண்ட்டர்
அந்த பெயிண்டரும், பலமுறை சிறுமியை பலாத்காரம் செய்திருக்கிறார்.. இப்படி 8 முறை பலாத்காரம் செய்துள்ளார்.. அப்போதெல்லாம் கருமுட்டையையும் விற்பனை செய்திருக்கிறார்கள். பொதுவாக சிறுமிகளின் கருமுட்டை விற்கக்கூடாது என்பது சட்டம் உள்ளது.. அதற்காக 16 வயதாகும் பெண்ணுக்கு, அதிகமான வயது இருப்பது போல போலி டாக்குமெண்ட்டுகளை அந்த தாய் தயார் செய்துள்ளார்.. அந்த போலி ஆவணங்கள் மூலம் வயதை கூட்டி காட்டி ஈரோடு, சேலம், ஓசூர், பெருந்துறை ஆகிய ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் கருமுட்டை விற்பனை செய்து வந்திருக்கிறார்கள்...

சித்தி, சித்தப்பா
ஒரு கருமுட்டைக்கு 25 ஆயிரம் ரூபாய் தந்தார்களாம்.. பணத்தை பார்த்ததும், அந்த தாயின் பேராசை எல்லைமீறியது.. நாளுக்கு நாள், கள்ளக்காதலனை வைத்து சிறுமியை டார்ச்சர் செய்ய ஆரம்பித்துள்ளனர்.. வேறு வழியின்றி அந்த சிறுமி, குடும்பத்தில் உள்ளவர்களிடம் சொல்லி கதறி அழுதுள்ளார்.. இதைக் கேட்டு பதறிப்போன உறவினர்கள், ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் அளித்தனர்.. அந்த புகாரின்பேரியில், சிறுமியின் தாய், கள்ளக்காதலன் ஆகியோர் கைதாகி உள்ளனர்..

மாலதி
இப்படி ஒரு காரியத்துக்கு மாலதி என்ற பெண் உடந்தையாக இருந்திருக்கிறார். அவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த மாலதி என்பவர் புரோக்கராம்.. 36 வயதாகிறது.. அவர்தான் சுற்றுவட்டார மருத்துவமனைகளுக்கும் கருமுட்டையை கொண்டு போய் விற்று வந்துள்ளார்.. அந்த கள்ளக்காதலன் சிறுமியை மிரட்டி அடித்து கொண்டே இருப்பாராம்..

அதிசய தாய்
அதனால்தான், இத்தனை வருடமும் பயம் காரணமாக அவரை பற்றி குடும்பத்தில் சொல்லாமல் பயத்தில் இருந்துள்ளார்.இதில் கொடுமை என்னவென்றால், அந்த மகள் 12 வயதில் வயதுக்கு வந்திருக்கிறார்.. அப்போதிருந்தே அந்த சிறுமியையும் கருமுட்டை தொழிலில் ஈடுபடுத்த துணிந்துவிட்டார்களாம்.. 16 வயதிலேயே மகளின் 8 முறை கருமுட்டையை விற்று தின்றுள்ளார் அந்த அதிசய தாய்..!
-
கோவையில் வீடு புகுந்து இளைஞர்களை தாக்கிய சிசிடிவி காட்சி! அதிர்ச்சியில் உறைந்த மக்கள் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின்












Click it and Unblock the Notifications