ஈரோடு டூ கோத்தகிரி.. அரசு ஊழியர் பண்ற வேலையா இது.. கத்திய காஞ்சனா.. நடுராத்திரியில் ட்விஸ்ட்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி அருகே கிராமத்திற்கு கையில் கயிற்றுடன் முகமூடி அணிந்து கொண்டு வந்த மர்மநபர், ஒரு வீட்டிற்குள் புகுந்துள்ளார். அங்கு தூங்கி கொண்டிருந்த பெண்ணை தாக்கி கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை கைது செய்தனர். அவரை கைது செய்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ளது கேத்தம்பாளையம் கிராமம். இங்கு வசிக்கும் 64 வயதாகும் நடராஜ் விவசாயி ஆவார்.. இவருடைய மனைவி காஞ்சனாக்கு 57 வயது ஆகிறது. இவர்களுக்கு மகன்கள் உள்ளனர். சம்பவம் நடந்த அன்று இரவில் வீட்டின் கதவுகளை பூட்டி விட்டு நடராஜ் காஞ்சனா தம்பதி தூங்க சென்றுள்ளார்கள். நடராஜன், அவரது மகன்கள் அறையில் தூங்கினார். காஞ்சனா வீட்டின் வரவேற்பறையில் உள்ள கட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்திருக்கிறார்.

கோத்தம்பாளையம் கிராமத்திற்கு முகமூடி அணிந்த மர்மநபர் வந்திருக்கிறார். அவர் திடீரென நடராஜ் காஞ்சனா தம்பதிகளின் வீட்டின் சுற்றுச்சுவரின்மேல் ஏறி குதித்து உள்ளே புகுந்துள்ளார். அங்கே சிசிடிவி கேமரா இருப்பதை பார்த்த மர்ம நபர், தனது உருவம் பதிவாகாமல் இருக்க வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை வேறுபக்கமாக திருப்பி இருக்கிறார்..
பின்னர் அங்கு துணிகளை காய வைப்பதற்காக கட்டியிருந்த கயிற்றை அறுத்து எடுத்துக்கொண்டு வீட்டின் கதவை திறக்க முயற்சித்திருக்கிறார் ஆனால் கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்திருக்கிறது. இதனால் அவரால் திறக்க முடியவில்லை.
இந்த நிலையில் சிறிது நேரம் கழித்து நடராஜ் கதவை திறந்து இயற்கை உபாதையை கழிப்பதற்காக வெளியே வந்திருக்கிறார். அந்தநேரம் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர், கொள்ளையடிக்கும் நோக்கில் போயிருக்கிறார். சத்தம் கேட்டு தூங்கி கொண்டிருந்த காஞ்சனா திடுக்கிட்டு எழுந்தார். மர்மநபர் கையில் கயிற்றுடன் முகமூடி அணிந்து கொண்டு நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் அவர், "திருடன் திருடன்" என்று கத்தில் கூச்சலிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்மநபர் காஞ்சனாவை தாக்கியதுடன், அவரை கழுத்தை நெரித்து கொல்ல முயன்றுள்ளார். இதனிடையே தாயின் அலறல் சத்தம் கேட்டு அறையில் தூங்கிக்கொண்டு இருந்த அவருடைய மகன் சுகந்த் அங்கு ஓடி வந்தார். அப்போது நடராஜும் சத்தம் கேட்டு அங்கு வரவே, மர்மநபர் வீட்டில் இருந்து வெளியில் ஒடி தப்பித்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கடத்தூர் போலீசார் விசாரித்தனர். மேலும் அங்கு கிடந்த மர்மநபர் அணிந்திருந்த முகமூடி, கத்தி உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றியதுடன் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு, மர்மநபரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த திம்முசாமி என்பவருடைய மகன் தயானந்த்தை (31) போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் தான் நடராஜ் வீட்டுக்குள் புகுந்து, கொள்ளையடிக்க முயன்றதை ஒப்புக்கொண்டார்.
இது தொடர்பாக தயானந்த் கூறுகையில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக தயானந்த் வேலை செய்து வரும் நிலையில், சில மாதங்களாக விடுப்பு எடுத்து சத்தியமங்கலத்தில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளார். வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் வீட்டுக்கு சென்று வருவார்.
இந்த நிலையில் நடராஜ் இடத்தை விற்ற பணம் ரூ.90 லட்சத்தை வீட்டில் வைத்திருப்பதை அறிந்த தயானந்த் அதை கொள்ளையடிப்பதற்காக வீட்டுக்குள் புகுந்திருக்கிறார். அப்போது சத்தம் கேட்டு காஞ்சனா தூக்கத்தில் இருந்து எழுந்ததால் மாட்டிக்கொண்டிருக்கிறார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தயானந்த்தை கைது செய்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications