ஈரோட்டில் ஏடிஎம்மில் புகுந்த நபர்.. அடுத்த நிமிடம் பார்த்த வேலை.. சேலத்தில் தூக்கிய தனிப்படை
ஈரோடு: ஈரோடு பெரியார்நகர் ஈ.வி.என். ரோட்டில் இயங்கி வரும் ஏ.டி.எம். மையம் மற்றும் ஸ்டோனி பாலம் அருகில் இயங்கி வரும் ஏ.டி.எம். மையங்களில், கடந்த 12-ந்தேதி மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சித்தார். அவரை போலீசார் தீவிரமாக தேடி கைது செய்துள்ளனர. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அந்த நபர் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏடிஎம் இயந்திரங்களில் பணம் பெரும்பாலும் நிரப்பப்பட்டிருக்கும். அப்படிநிரப்பப்பட்ட ஏடிஎம்களை சிலர் கொள்ளையடிக்க முயற்சிப்பது நடக்கிறது. உண்மையில் ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை கொள்ளையடிப்பது அல்லது ஸ்கேமர் கருவிகளை பொருத்தி திருடுவது என்பது எளிதான விஷயம் கிடையாது. அப்படி ஏதாவது செய்தால், சிசிடிவி கேமராவில் வரும் காட்சிகள் மற்றும் வித்தியாசமான முயற்சிகளை அடையாளம் கண்டு, உடனே போலீசுக்கு எச்சரிக்கை செல்லும். காவல் துறையினர் உடனடியாக வந்து அந்த நபரை கைது செய்துவிடுவார்கள்.

அதேபோல் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, வேறு இடத்திற்கு எடுத்து சென்று பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தாலும் உடனே கண்டுபிடித்து விடுவார்கள். அவ்வளவு எளிதாக உடைத்து எடுத்து வாகனத்தில் எடுத்து சென்றுவிட முடியாது. அதேநேரம் சிலர், குடிபோதையில் அல்லது ஏடிஎம் இயந்திரம் குறித்த புரிதல் இன்று, விபரீதமாக யோசிப்பார்கள். சுத்தியல் அல்லது ஆயுதத்துடன் சென்று பணத்தை கொள்ளையடிடிக்க முயற்சி செய்து மாட்டிக் கொள்வார்கள் . அப்படி ஒருசம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது.
ஈரோடு மாநகராட்சி பெரியார் நகர் ஈ.வி.என். ரோட்டில் இயங்கி வரும் ஏ.டி.எம். மையம் மற்றும் ஸ்டோனி பாலம் அருகில் இயங்கி வரும் ஏ.டி.எம். மையங்களில், கடந்த 12-ந்தேதி மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சித்தார்.
இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட வங்கிகளின் மேலாளர்கள் கொடுத்த புகாரின் பேரில், ஈரோடு சூரம்பட்டி போலீசார் மற்றும் ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையனை விரைந்து பிடிக்க ஈரோடு டவுன் போலீசார் தனிப்படை அமைத்து, ஏ.டி.எம். மையங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்தநிலையில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி மாட்லி பகுதியை சேர்ந்த பிரிட்டாம் சர்கி (வயது 39) என்பதும், அவர் சேலத்தில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சேலம் விரைந்து சென்று, பிரட்டாம் சர்கியை கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications