“இங்க இதுக்கு வர்றீங்க?” கடும் எதிர்ப்பு.. உடனே போன் போட்ட அதிமுகவினர்.. ‘ரூட்’டை மாற்றிய தென்னரசு!
அதிமுக வேட்பாளர் தென்னரசு, மக்கள் எதிர்ப்பால் வேறு ரூட் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட வீரப்பன்சத்திரம் பகுதி கமலா நகரில் வாக்கு சேகரிக்கச் சென்ற அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர் மாற்று வழியில் திரும்பிச் சென்றார்.
அதிமுக வேட்பாளருக்கு எதிராக பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்களால் எடப்பாடி பழனிசாமி கடும் டென்ஷனில் இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக, அதிமுக வேட்பாளர் தென்னரசுவை மார்க்கெட் பகுதிக்குள் நுழையவிடாமல் வியாபாரிகள் தடுத்து நிறுத்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. மார்ச் மாதம் 2-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி, தேமுதிக மற்றும் சுயேச்சைகள் என 77 பேர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. ஒவ்வொரு பகுதிகளிலும் வேட்பாளர்கள் வாக்காளர்களை வீடு வீடாகச் சந்தித்து வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதற்கிடையே, ஆங்காங்கே அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்காளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ரூட்டை மாற்றிய தென்னரசு
வீரப்பன்சத்திரம் பகுதி கமலா நகரில் வாக்கு சேகரிக்கச் சென்ற இடத்தில் பெண் வாக்காளர்கள் அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எம்.எல்.ஏவாக இருந்தபோது சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தென்னரசு செய்து தரவில்லை என குற்றம்சாட்டி, பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுகவினருடன் பெண் வாக்காளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக நிர்வாகிகள், இந்த பகுதிக்கு வர வேண்டாம் என வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் இப்பகுதிக்கு வாக்கு சேகரிக்க வராமல் வேறு தெரு வழியாக தனது பயணத்தை மாற்றிக்கொண்டு சென்றார் தென்னரசு.

வியாபாரிகள் வாக்குவாதம்
முன்னதாக அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள மார்க்கெட் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த வணிகர்கள் தென்னரசு எம்.எல்.ஏவாக இருந்தபோது எங்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காய்கறி மார்க்கெட்டை நவீனப்படுத்துவதாக கூறி அங்கிருந்த கடைகளுக்கு தற்காலிகமாக மாற்று இடம் வழங்கப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாகியும் கடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்காததால் வியாபாரிகள், தென்னரசுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தென்னரசு மற்றும் அதிமுகவினர் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

ஈபிஎஸ் டென்ஷன்
ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டபோது, நீங்க சரியான ஆம்பளையா இருந்தா.. மீசை வைச்ச ஆம்பளையா இருந்தா.. சூடு, சொரணை, வெட்கம், மானம் இருந்தால் வாக்காளர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும். அதிமுகவை எதிர்க்க தெம்பு, திராணி, சக்தி இல்லை. அதனால், ஏழை மக்களை 120 இடங்களில் கொட்டகை அமைத்து சிறைபிடித்து வைத்துள்ளனர் என்று பேசினார். மீசை வச்ச ஆம்பளையா இருந்தா என ஈபிஎஸ் பேசியது கண்டனங்களைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், அதிமுக வேட்பாளருக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சம்பவங்களால் எடப்பாடி பழனிசாமி கடும் டென்ஷனில் இருப்பதாக கூறப்படுகிறது.
-
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம் -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
எடப்பாடி முதல்வராக கூடாது.. ஓ.எஸ்.மணியன் டார்கெட் அதுதான்.. அதிமுக நிர்வாகியின் பகீர் குற்றச்சாட்டு! -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே?












Click it and Unblock the Notifications