திடீரென வந்த போன் கால்! விருட்டென புறப்பட்ட தென்னரசு! காரில் அமர்ந்ததும் அடித்த 'பஞ்ச்'!
வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து பாதியில் வெளியேறிய தென்னரசு.
ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து பாதியிலேயே விருட்டென புறப்பட்டுச் சென்றார் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு.
வாடிய முகத்துடன் கார் ஏற வந்த அவரை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு பல்வேறு கேள்விகள் எழுப்பிய நிலையில், ஒரே கேள்வி ஒரே பதில் என்று கூறிய அவர் ''பணநாயகம் ஜெயித்துவிட்டது; ஜனநாயகம் தோற்றுவிட்டது'' என பஞ்ச் அடித்தார்.
இதனிடையே செய்தியாளர்கள் விடாமல் அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பியதால் கடுப்பான அவர், வண்டியை எடுப்பா என ஓட்டுநரிடம் சீறினார்.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் காலை 8 மணி முதல் வெளியாகி வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் இருந்து பாதியிலேயே புறப்பட்டுச் சென்றுவிட்டார் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு. தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்து வந்ததை தொடர்ந்து அப்செட்டாக இருந்த அவர், தனக்கு வந்த திடீர் போன் காலை தொடர்ந்து விருட்டென கிளம்பிச் சென்றுவிட்டார்.

பஞ்ச் டயலாக்
இதனிடையே தனது முகவர்களாக உள்ளவர்களை வாக்கு எண்ணிக்கை முடிவடையும் வரை சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியிலேயே இருக்குமாறு அறிவுறுத்திவிட்டு தான் சென்றிருக்கிறார் தென்னரசு. ''பணநாயகம் ஜெயித்துவிட்டது; ஜனநாயகம் தோற்றுவிட்டது'' என பஞ்ச் அடித்த அவர் மேற்கொண்டு தன்னிடம் எந்தக் கேள்வியும் கேட்க வேண்டாம் எனக் கூறிவிட்டார். காலையில் உற்சாகமுடன் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வந்த தென்னரசு நண்பகல் 12 மணியளவில் வாடிய முகத்துடன் காணப்பட்டார்.

வெற்றி தோல்வி
தேர்தலை பொறுத்தவரை வெற்றி தோல்வி என்பது சகஜமானது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது த.மா.க வேட்பாளர் யுவராஜ்பெற்ற வாக்குகளை விட இந்த முறை குறைவான வாக்குகள் கிடைத்துவிடுமோ என்பது தான் தென்னரசுவால் ஜீரணிக்கவே முடியவில்லை என்கிறார்கள். இதனிடையே எடப்பாடி பழனிசாமியை அதிமுக வேட்பாளர் தென்னரசு நேரில் சந்தித்து பேசுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

திமுகவினர் உற்சாகம்
ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றியை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடுகிறார்களோ இல்லையோ தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications