எடப்பாடியை விடாமல் துரத்தும் தோல்விகள்.. அதிமுக தலைமையேற்றதிலிருந்து.. 8 தேர்தல்களிலும் தோல்வி
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவை தன் வசப்படுத்திய எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுடன் சேர்த்து இதுவரை 8 தேர்தல்களில் தோல்வியையே கண்டுள்ளார்.
சென்னை: எடப்பாடி பழனிசாமி வசம் அதிமுக வந்த பிறகு தொடர்ச்சியாக தேர்தல் தோல்விகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 8ஆவது தோல்வியாகும்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த திருமகன் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக, திமுக சார்பில் காங்கிரஸ், நாம் தமிழர், தேமுதிக ஆகிய கட்சிகள் களம் கண்டுள்ளன.
இதன் தேர்தல் முடிவுகள் இன்று எண்ணப்பட்டு வெளியானது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த நிலையில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற கேள்வி எழுந்தது. அதைவிட முக்கியம் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும். அவருக்கு உண்மையிலேயே தொண்டர்களிடம் செல்வாக்கு இருக்கிறதா என்பதை அறியும் ஒரு தேர்தல் இது என்றே சொல்லலாம்.

அதிமுக பிளவுப்பட்டு
எல்லாவற்றுக்கும் மேல் அதிமுக பிளவுப்பட்டு இரண்டாக பிரிந்துள்ளது. இந்த நிலையில் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பதவியில் உள்ள எடப்பாடி பழனிசாமி இந்த தேர்தலில் அதிமுகவை கரை சேர்ப்பாரா என்பதை எதிர்நோக்கி காத்திருந்தனர். ஒற்றை தலைமை என்ற ஒரு பிரச்சினை கடந்த ஆண்டு ஜூன் மாதம் தலை தூக்கியது. இரட்டை தலைமையால் சுமூகமாக முடிவு எடுக்க முடியாததால் ஒற்றைத் தலைமையே சரி என கட்சி நிர்வாகிகள் முடிவு செய்து அந்த தலைமை எடப்பாடி என அவரை தேர்வு செய்தனர்.

ஒற்றை தலைமை
ஆனால் ஓபிஎஸ்ஸோ ஒற்றை தலைமை சரிப்பட்டு வராது. இரட்டை தலைமைதான் அதிமுகவுக்கு சரி என வாதம் செய்தார். கடைசியில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட அதே பொதுக் குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கினார். இது தொடர்பாக உச்சநீதிமன்றம் வரை போராடினார் ஓபிஎஸ்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
இந்த வழக்கு நிலுவையில் இருந்த போதே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டார். அவருக்கு போட்டியாக ஓபிஎஸ் சார்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் பொது வேட்பாளரை அவைத் தலைவரே தேர்வு செய்ய வேண்டும் என இரட்டை இலை கேட்டு எடப்பாடி தரப்பு போட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால் தனது வேட்பாளரை வாபஸ் பெற வேண்டிய சூழல் ஓபிஎஸ்ஸுக்கு ஏற்பட்டது.

ஆவல்
இந்த நிலையில் ஓபிஎஸ் மிகவும் ஆவலாக எதிர்பார்த்த அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக அவர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில் தீர்ப்பானது எடப்பாடி பழனிசாமியின் பக்கம் வந்தது. இடைக்கால பொதுச் செயலாளராக ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தேர்தலை சந்தித்துள்ளது. இதன் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. இதில் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேர்தல் முடிவுகள்
தேர்தல் முடிவுகள் வரட்டும் அப்போதுதான் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் செல்வாக்கு தெரியும் என ஓபிஎஸ் ஒரு முறை பேட்டி அளித்திருந்தார். அதனால் இந்த தேர்தலை ஓபிஎஸ் தரப்பும் எடப்பாடி தரப்பும் உற்று நோக்கியது. இரட்டை தலைமையின் கீழ் ஒரு தேர்தலில் கூட வெல்லாத போது ஒற்றை தலைமையின் கீழ் இந்த தேர்தலிலாவது வெல்வாரா என எதிர்பார்க்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
இதே போன்றதொரு நிலையைத்தான் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே 2017 ஆம் ஆண்டு சந்தித்தார். அதாவது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானதால் அவர் எம்எல்ஏவாக இருந்த ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் தினகரனை வேட்பாளராக களமிறக்கினர். ஆனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து தினகரனுக்கும் அதிமுகவுக்கு இடையே பிரிவு ஏற்பட்டது.

தினகரன்
பின்னர் டிடிவி தினகரன் சுயேச்சையாக ஆர் கே நகர் இடைத்தேர்தலில் களம் இறங்கினார். எடப்பாடி பழனிசாமியோ மதுசூதனனை வேட்பாளராக அறிவித்தது. ஆனால் அந்த தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. சரி எதிர்க்கட்சியாவது வெல்வார்கள் என பார்த்தால் அதுவும் இல்லாமல் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் நின்ற தினகரன் 89 ஆயிரம் வாக்குகளை பெற்று வென்றார்.

ஆசிட் டெஸ்ட்
ஆர்கே நகர் இடைத்தேர்தலுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பிளவுப்பட்டு இரண்டாவது தேர்தல் ஆகும். அன்றும் எடப்பாடி பழனிசாமியே சந்தித்தார். இன்றும் அவரே சந்தித்தார். இதனால் ஒற்றை தலைமையிலாவது எடப்பாடி பழனிசாமி தனது செல்வாக்கை நிரூபிப்பாரா என அவருக்கு அக்னி பரீட்சையாக இந்த தேர்தல் இருந்தது. இந்த நிலையில் இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்துள்ளார். அவருடைய வீடு இருக்கும் இடத்திலேயே ஈவிகேஎஸ் இளங்கோவன் பெற்ற வாக்குகளில் 50 சதவீதத்தை கூட வாங்கவில்லை. அது போல் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜ் பெற்ற வாக்குகளை விட தென்னரசு பெற்ற வாக்குகள் குறைவு.

8 தோல்வி
ஒற்றை தலைமை இருந்தால் மட்டுமே கட்சியை எந்த குழப்பமும் இல்லாமல் வழிநடத்த முடியும் என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். ஆனால் அவர் வசம் அதிமுக வந்த பிறகு தற்போது 8ஆவது தோல்வியை அவர் சந்தித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என மொத்தம் 8 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்துள்ளது.
-
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
பச்சைத் துண்டு எடப்பாடி பழனிசாமி ஒரே போடு.. நிலமே இல்லாமல் விவாதமாகும் அசையா சொத்து விவரம் -
ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை.. நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் குறித்த கேள்விக்கு எடப்பாடி ரியாக்ஷன் -
லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி! -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
ஒன்னு கூடிட்டாங்க.. அஜித்துடன் ரஜினி! எடப்பாடிக்கு ஏகப்பட்ட ஹேப்பி! காத்திருந்த திண்டுக்கல் கிஃப்ட்! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ்












Click it and Unblock the Notifications