கூட்டணி வைத்தால் அந்த கட்சியின் கொள்கையை ஏற்பதாக அர்த்தமா? இஸ்லாமியர்கள் முன் எடப்பாடி "விளக்கம்"

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பெரும்பாலும் மைனாரிட்டிகள் திமுகவிற்குத்தான் வாக்களிப்பார்கள் என்று அரசியல் வல்லுனர்கள் பலர் கணித்து உள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: எங்களுக்கு வாக்களிக்கும் சிறுபான்மையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக சிலர் தவறான பிரச்சாரங்களை செய்கிறார்கள், கூட்டணி வைப்பதால் ஒரு கட்சி சொல்வதை நாங்கள் கேட்போம் என்று நீங்கள் நினைக்கவேண்டாம் என்று சிறுபான்மையினர்களுடன் நடந்த கூட்டம் ஒன்றில் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார்.

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ள நிலையில் சிறுபான்மையினர் முன்னிலையில் எடப்பாடி இப்படி பேசி உள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வரும் 27ம் தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாளுக்கு நாள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

கே. எஸ் தென்னரசு

கே. எஸ் தென்னரசு

இன்னொரு பக்கம் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார். இன்னொரு பக்கம் ஈரோடு கிழக்கில் போட்டியிட வேண்டாம். அதிமுகவின் பொது வேட்பாளரை ஆதரிப்போம் என்று பாஜக முடிவு எடுத்துள்ளது. ஈரோடு-கிழக்கில் நம் தோழமை கட்சியான அதிமுகவின் பெரும் வெற்றிக்காக அயராது பாடுபடுவோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதோடு எடப்பாடி பழனிசாமியும் பாஜகவுடன் கூட்டணி தொடரும், நாடாளுமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு

இந்த நிலையில் எங்களுக்கு வாக்களிக்கும் சிறுபான்மையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக சிலர் தவறான பிரச்சாரங்களை செய்கிறார்கள், கூட்டணி வைப்பதால் ஒரு கட்சி சொல்வதை நாங்கள் கேட்போம் என்று நீங்கள் நினைக்கவேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கில் பேசி உள்ளார். ஈரோடு மாவட்டம் வில்லரசன் பட்டியில் அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசுவிற்கு வாக்கு கேட்டு இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் கூட்டமைப்பினர் முன் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்து இருப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி விளக்கம் கொடுத்தார். அதில், ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கிறோம் என்றால் அவர்களின் கொள்கையை ஏற்றுக்கொண்டோம் என்று அர்த்தம் ஆகிவிடாது. நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தாலும் எங்களின் கொள்கை மாறிவிடாது.

கொள்கை

கொள்கை

எங்கள் கொள்கை அப்படியேத்தான் இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கட்சி இன்னொரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் போது கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம் இல்லை. நாங்கள் எங்கள் கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். வாக்குகள் சிதற கூடாது என்றுதான் நாங்கள் கூட்டணி வைக்கிறோம். நாங்கள் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இல்லை என்று சிலர் வாதம் வைக்கிறார்கள். எங்களுக்கு எதிராக தவறாக வாதம் வைக்கிறார்கள்.

வாக்குகள்

வாக்குகள்

வாக்குகள் சிதற கூடாது என்பதால் கூட்டணி வைக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். இதனால் நாங்கள் கொள்கையை விட்டுக்கொடுத்துவிட்டோம் என்று கூற முடியாது. எங்களுக்கு வாக்களிக்கும் சிறுபான்மையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக சிலர் தவறான பிரச்சாரங்களை செய்கிறார்கள், கூட்டணி வைப்பதால் ஒரு கட்சி சொல்வதை நாங்கள் கேட்போம் என்று நீங்கள் நினைக்கவேண்டாம். தமிழ்நாட்டில் சிறுபான்மையினர், தமிழா் உரிமையை பாதுகாக்க நாங்கள் கடுமையாக போராடி வருகிறோம். இதற்காக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம் என்பதை மக்கள் பார்க்க வேண்டும், என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கில் 17 சதவிகிதம்தான் அங்கே கவுண்டர்கள் இருக்கிறார்கள். 36 சதவிகிதம் செங்குந்த முதலியார்கள் இருக்கிறார்கள். 17 சதவிகிதம் மைனாரிட்டிகள் இருக்கிறார்கள். 6 சதவிகிதம் அருந்ததியர்கள் இருக்கிறார்கள். இதில் கவுண்டர்கள் வாக்குகளை விட மற்றவர்களை சேர்த்தால் அதிக வாக்குகள் வருகிறது. முக்கியமாக செங்குந்த முதலியார்கள்தான் இங்கு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார்கள். இந்த இடைத்தேர்தலில் பெரும்பாலும் மைனாரிட்டிகள் திமுகவிற்குத்தான் வாக்களிப்பார்கள் என்று அரசியல் வல்லுனர்கள் பலர் கணித்து உள்ளனர். அதோடு அதிமுக பாஜகவோடு நெருக்கமாக இருப்பதால் மைனாரிட்டிகள் வாக்குகள் திமுக கூட்டணிக்கே வரும் என்று அரசியல் வல்லுனர்கள் பலர் கணித்து உள்ளனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சிறுபான்மையினர் முன்னிலையில் கூட்டணி குறித்து பேசி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+