மலம் அல்ல வந்தோமோ? கொதிச்சுபோய் இருக்கோம்.. சீமான் மன்னிப்பு கேட்கனும்!மீண்டும் விரட்டிய அருந்ததியர்
அருந்ததியர்கள் ஆந்திராவில் இருந்து மலம் அள்ள வந்தவர்கள் என்று சீமான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கோரி அக்கட்சியினருக்கு அருந்ததிய மக்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர்களை ஆந்திராவில் இருந்து மலம் அள்ள வந்தவர்கள் என்று பேசிய நிலையில், அருந்ததியர் வசிக்கும் பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்ற நாம் தமிழர் கட்சியினரிடம் அந்த மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிரச்சாரம் செய்ய அனுமதிக்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்பவர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். இதற்காக அங்கு சென்று நாம் தமிழர் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குறிப்பாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அங்கு பிரச்சார பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆற்றிய உரை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முதலியார்களுக்கு புகழ்ச்சி
"விஜயநகர பேரரசு நிறுவிய பிறகு எங்களுக்கும் உங்கள் மன்னர்களுக்கு செய்ததை போல் பட்டாடை செய்து கொடுங்கள் என்று முதலியார்களிடம் கேட்டார்கள். வேறு ஆளை பாருங்கள் என்று அவர்கள் தெரிவித்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் சவுராஷ்டிராக்களை இந்த விஜயநகர மன்னர்கள் குஜராத்தில் இருந்து இறக்கினார்கள்." என்று ஈரோடு கிழக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் முதலியார்களை பாராட்டி பேசினார் சீமான்.

அருந்ததியர்கள் தூய்மை பணிக்கு வந்தார்கள்
அதே மேடையில் பேசிய அவர், "என் ஆதி தமிழ் குடிகள் கடைசியாக இந்த நிலத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்கள். எங்கள் ஆட்சியிலும் நீங்கள் அதைப்போல தூய்மைப் பணி செய்ய வேண்டும் என்று சொன்னபோது, போடா வேற ஆளை பாரு! என்றார்கள். வேறு வழியில்லாமல் ஆதிக்குடிகளை கொண்டு வந்து இறக்கினார்கள். அவர்கள்தான் இங்கு இருக்கும் அருந்ததியர்கள்." என்று கூறினார்.

பெரும்பான்மைக்கு சீட்
ஈரோடு கிழக்கு தொகுதியில் செங்குந்த முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவர்களே பெரும்பான்மையாக உள்ளனர். அருந்ததிய சமுதாயத்தினர் 6% என்ற அளவில் உள்ளார்கள். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகாவும் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர். திமுக, அதிமுக, தேமுதிக வேட்பாளர் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இல்லை.

நாம் தமிழர் கட்சியினருக்கு எதிர்ப்பு
இந்த நிலையில் அருந்ததியர்கள் குறித்து சீமானின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அருந்ததியர் அமைப்புகளும் சீமான் தங்களை அவமதித்துவிட்டதாக குற்றம்சாட்டினார்கள். இந்த நிலையில் நேற்று ஈரோடு ராஜாஜிபுரத்தில் வாக்கு சேகரிக்க சென்ற நாம் தமிழர் கட்சியினரை அருந்ததியினர் மக்கள் தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்தனர். இதனால் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது.

தடுத்து நிறுத்திய அருந்ததியர்கள்
இதில் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்படவே நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு வந்த டிஎஸ்பி தலைமையிலான போலீசாரிடம் சீமானை கைது செய்ய வலியுறுத்தினர். அவர்களை அவர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இன்றும் அருந்ததியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்ற நாம் தமிழர் கட்சியினரை அவர்கள் தடுத்து நிறுத்தினர்.
|
மீண்டும் தடுத்து நிறுத்தம்
"நேற்றுதானே அனுப்பினோம். இன்றும் வருகிறீர்கள். அருந்ததியர்கள் மலம் அள்ளுபவர்கள் என்று உங்கள் தலைவர் மேடையில் பேசுகிறார். நீங்கள் ஏன் அருந்ததியர் பகுதிக்கு வருகிறீர்கள்? ஆந்திராவிலிருந்து வந்தவர்கள் அருந்ததியர்கள் என்கிறார் உங்கள் தலைவர். நாங்கள் 35,000 பேர் இருக்கிறோம். கொதிச்சுபோய் இருக்கிறோம்.

சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்
நாங்கள் அடிக்காமலேயே உங்கள் கட்சிக்காரர் மண்டை உடைந்ததாக மருத்துவமனையில் படுத்துள்ளார். உங்கள் தலைவர் மன்னிப்பு கேட்காமல் அருந்ததியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு உங்களால் ஓட்டு செல்ல கேட்க முடியாது. நாங்கள் மலம் அல்ல வந்தவர்கள் என்று உங்கள் தலைவர் சொன்னதற்கான ஆதாரத்தை கொண்டு வாருங்கள். எங்களுக்கு ரொம்ப அவமானமாக இருக்கிறது. ஒரு சமூகத்தை திட்டமிட்டு 2 வது முறையாக இப்படி இழிவுபடுத்துகிறார்." என்றார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications