மனைவி பரிசளித்த பைக்.. 3 நாளில் ரிப்பேர்.. புது மாப்பிள்ளைக்கு ஷோருமில் காத்திருந்த ட்விஸ்ட்
ஈரோடு: மனைவி பரிசளித்த பைக், 3 நாளில் கோளாறு ஆனது. இதனால் புது மாப்பிள்ளை, ஈரோட்டில் உள்ள ஷோருமில் மாற்றித்தருமாறு முறையிட்டார். ஆனால் மாற்றித்தர மறுத்த ஷோ ரூம் ஊழியர்கள் மறுத்துவிட்டனர்.
ஈரோடு மாவட்டம் அரச்சலூரைச் சேர்ந்த இளைஞருக்கு சமீபத்தில் திருமணம் ஆகி உள்ளது. திருமணம் முடிந்த உடனே மனைவி கணவருக்கு புதிதாக ஷோரும் சென்று பல்சர் 125 பைக் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அந்த பைக் மூன்று நாளில் பழுதாகி உள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த புதுமாப்பிள்ளை, அந்த பைக் வேண்டாம் என்றும் புது பைக்கை மாற்றிக்கொடுங்கள் என்று ஈரோட்டில் உள்ள தனியார் ஷோருமில் முறையிட்டுள்ளார். ஆனால் அந்த பைக்கை மாற்றித்தர முடியாது என ஷோரும் ஊழியர்கள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த புதுமாப்பிள்ளை ஷோரும் முன்பு அமைத்து போராட்டம் நடத்தினார். இதனால் ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி செய்தியாளர்களுக்கு அந்த இளைஞர் அளித்த பேட்டியில், "நான் அரச்சலூரில் இருந்து வருகிறேன்.. ஈரோட்டில் உள்ள இந்த தனியார் ஷோருமில் திங்கள்கிழமை மாலை இருசக்கர வாகனம் வங்கினேன். 3 நாளிலேயே ரிஜிஸ்ட்ரேசன் பண்ணி கொடுத்துட்டாங்க.. 4வது நாளில் பார்த்தீங்கன்னா.. வீட்டில் நிறுத்தி வைத்திருந்த பைக்கில் ஆயில் லீக் ஆனது.
ஆயில் லீக்கேஜ் ஆனதால் ஷோருமுக்கு வண்டியை எடுத்துக்கொண்டு போனோம்.. நான் அவர்களிடம், இப்பவே இன்ஜினில் ஆயில் லீக்கேஜ் ஆச்சு அப்படீன்னா, நீங்க இந்த வண்டியை வைத்துக் கொண்டு புது வண்டியை கொடுங்க என்று கேட்டேன்.. அப்படி முடியாது என்றால் நான் கொடுத்த பணத்தை மீண்டும் தருமாறு கேட்டேன்..
ஆனால் ஷோருமில் உள்ளவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், அந்த வண்டியை நாங்கள் சர்வீஸ் செய்து மட்டும் தான் தர முடியும்... புது வண்டியெல்லாம் நாங்க பண்ண முடியாது.. அப்படீன்ற மாதிரி சொல்றாங்க.. எங்களை பொறுத்தவரை.. இந்த வண்டி வேண்டாம்..எங்களுக்கு பணம் ரிட்டன் தர வேண்டும்.. 23 ஆயிரம் இனிசியல் பேமெண்ட் கட்டியிருக்கோம்... அது ரிட்டன் வர வேண்டும்.. அப்படி இல்லை என்றால் வேறு புதிய வண்டி எங்களுக்கு வேண்டும்." என்றார்.
இதனிடையே மேலும் அந்த இளைஞர் கூறுகையில், என்னுடைய போராட்டம் காரணமாக அவர்கள் கடையை மூடிவிட்டு கிளம்பிவிட்டார்கள். வண்டியில் இப்பவே ஆயில் லீக்கேஜ் ஆகிறது. பேக்கிங் கரெக்டாக செட்டாகவில்லை.. புது வண்டி எதற்காக எடுக்கிறோம். 10 வருடம் 15 வருடம் ஓட்ட வேண்டும் என்பதற்காக எடுக்கிறோம்.. இவங்க இப்படி பண்ற மாதிரி இருந்தால்.. நான் பழைய வாகனத்தை வாங்கியிருப்பேன்.. மெக்கானிக்களிடம் வண்டியை காட்டி விசாரித்த போது, அவர்கள் வேறு வண்டி வாங்குங்க.. அல்லது பணத்தை ரிட்டன் சவாங்குங்க என்றார்கள்.. " என்றார்.












Click it and Unblock the Notifications