ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஈரோடு நெசவாளர்களை மணிக்கணக்கில் காத்திருக்க வைத்த அமித்ஷா.. கோரிக்கை மனுவை பெறாததால் ஏமாற்றம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜக தலைவர் அமித்ஷா ஈரோடு வருகிறார்- வீடியோ

    ஈரோடு: ஈரோட்டில் வாக்குச் சாவடி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அமித்ஷா, 4 மணி நேரமாக நெசவாளர்களை காத்திருக்க வைத்ததோடு அவர்களது கோரிக்கை மனுக்களையும் பெறாமலேயே சென்றுவிட்டார்.

    நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சியினர் தீயாய் வேலை செய்து வருகின்றனர். அதிலும் பாஜகவினர் பல்வேறு இடங்களுக்கு சென்று தேர்தல் பொறுப்பாளர்களை சந்தித்து வருகின்றனர்.

    அமித்ஷா

    அமித்ஷா

    அதன்படி ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 4 நாடாளுமன்றத் தொகுதிகளின் வாக்குச் சாவடி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று ஈரோட்டில் உள்ள சித்தோட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டார்.

    யார் பங்கேற்பு

    யார் பங்கேற்பு

    இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கட்சியின் பொதுச்செயலாளர் முரளிதரராவ், மாநில தேர்தல் பொறுப்பாளர் சி.பி.ரவி, தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கலந்துரையாடல்

    கலந்துரையாடல்

    முன்னதாக இன்று 11 மணிக்கு ஈரோடு கங்காபுரம் டெக்ஸ்வேலி வளாகத்தில் நெசவாளர்கள் சந்திப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அமித்ஷா கலந்துகொண்டு நெசவாளர்களுடன் கலந்துரையாடுவார் என கூறப்பட்டது.

    ஏமாற்றம்

    ஏமாற்றம்

    இதற்காக 4 மணி நேரமாக விவசாயிகளை காத்திருக்க வைத்த அமித்ஷா கோரிக்கை மனுக்களை கூட அவர்களிடம் இருந்து பெறாததால் நெசவாளர்கள் அதிருப்தி அடைந்தனர். இறுதியாக ஆலோசனை கூட்டம் நடைபெறும் இடத்துக்கு சென்றுவிட்டார்.

    English summary
    BJP National President Amitshah will come to Erode and he is going to meet weavers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X